tg travels

கத்தாரில் இருந்து விடுமுறைக்காக நாடு திரும்புவர்களுக்கான முக்கிய அறிவுறுத்தல்! 

கட்டார் மீது நான்கு அரபு நாடுகள் தடை விதித்துள்ள நிலையில் கட்டாரில் இருந்த இலங்கை வருபவர்கள் கட்டார் ரியாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் மாற்றும் போது இலங்கை மத்திய வங்கி நாணயமாற்று பொறுமதியில் இருந்து பத்து சுமார் 11.70 ரூபா குறைவாக வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.


இன்று 23 ம் திகதி இலங்கை மத்திய வங்கி நாணய மாற்று விகிதப்படி கட்டார் ரியால் ஒன்றுக்கான இலங்கை ரூபா 41.72 என நிர்ணயிக்கப்பட்டிருந்த போதும் இலங்கை விமான நிலையத்தில் நாணயமாற்று நிலையங்களில் 30 ரூபாவே வழங்கப்படுவதாக ஊர்ஜிதமான தகவல் கிடைத்துள்ளது.


விடுமுறை காலங்களில் இலங்கை வருபவர்கள் விமான நிலையத்தில் பணம் மாற்றுவதால் ஆயிரம் ரியாலுக்கு 11700 ரூபாவை இழக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது..

கத்தாரில் இருந்து விடுமுறைக்காக நாடு திரும்புவர்களுக்கான முக்கிய அறிவுறுத்தல்!  கத்தாரில் இருந்து விடுமுறைக்காக நாடு திரும்புவர்களுக்கான முக்கிய அறிவுறுத்தல்!  Reviewed by Madawala News on 6/23/2017 03:14:00 PM Rating: 5