Kidny

Kidny

முஸ்லிம்கள் அவதானத்துடன் நடந்துகொள்ளும் ..


ஞானசார தேரரைத் தேடி சட்டம் பின்தொடர்கிறது. நாம் வலியவே வம்பை இழுத்துப் போட்டுக் கொள்ளக் கூடாது. சட்டம் சகலருக்கும் சமன். சட்டத்தின் முன் சகலரும் சமன். குற்றவாளிகள் யாராயினும் சட்டத்தின் முன் நிறுத்துங்கள் என்பன யாவும் தற்போது பேசப்பட்டு வரும் வசனங்களாகும்.

தேரர் தேடப்படுவது நீதிமன்ற அவமதிப்புக்கென்பது யாவரும் அறிந்ததே. பாவம்! அவர் எங்கென்றே தெரியாது காவற்துறை தடுமாறி நிற்கிறது. 

இதனிடையே கதையைத் திசைதிருப்ப முஸ்லிம்களுக்கு எதிராகப் பேசுவதும் முஸ்லிம் அமைச்சர்களுக்கு எதிராகப் பேசுவதும் தான் தேரர் கையாளும் புதிய உத்தியாகும். இதைக் காரணம் காட்டி அவர் சிறைப்படுத்தப்படுவாராகின் தேசிய வீரராக மாறி முஸ்லிம்கள் பற்றிய நல்லபிமானம் கொண்டோர் மனதையே மாற்றிவிடலாம். சட்டம் அதன் வேலையை செய்யட்டும் என்று நம்பாட்டில் இருப்பதனால் சும்மா கிடந்த பாம்பை சீலையில் போட்டுக் கொண்ட நிலை ஏற்பட மாட்டாது.

தேரரை காவற்துறையினர் கைது செய்தாலும் நாம் கூத்தாடிக் கும்மாளம் அடிப்பதற்கு ஒன்றுமில்லை. அவரை கைது செய்வது காவற்துறையினரின் கடமை என்பதை மறந்து நாம் செயற்படக்கூடாது. நேற்றுக் கூடிய பௌத்த துறவிகள் குறித்த தேரரை கைது செய்வது காவி உடைக்குச் செய்யும் அவமரியாதை என்ற தோரணையில் நமக்கெதிரான தேரரைக் கைது செய்வதானது பாரிய விளைவையே ஏற்படுத்தும் என்ற பொருளில் எச்சரித்துள்ளனர். அத்தேரர் செய்த குற்றத்தை மூடி மறைக்கவும் முஸ்லிம் சமூகத்தை அவர் நிந்திப்பதை சரிகாணவும் எடுக்கும் முயற்சியாகவே அக்கூட்ட நிகழ்வுகள் காட்டுகின்றன. அதனால் தான் பௌத்தர்களுக்காக குரல் கொடுக்கும் என்னை கைது செய்யுமாறு முஸ்லிம்கள் கேட்கிறார்கள் என்று கோஷமிடுகிறார்.
பெரும்பான்மையினரில் அதிகமானோர் தேரரை எதிர்த்துக் கொண்டும் விமர்சித்துக் கொண்டும் இருக்கும் நிலையில் முஸ்லிம்கள் அவதானமாக நடந்து கொள்ள வேண்டும். நம்மீது நல்லெண்ணமும் நல்லபிப்ராயமும் கொண்ட பெரும்பான்மை மக்களை நாம் இழந்து விடக்கூடாது. அவர்களில் மதகுருமாறும் உள்ளனர். 

சட்டத்தரணிகள் துறைசார்ந்தோர் பொதுமக்கள் ஆகியோரும் உள்ளனர் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
அதே நேரம் நாம் எமது வணக்கவழிபாடுகளில் ஈடுபடும் சந்தர்பங்களில் மிக நிதானமாக நடந்து கொள்ளல் வேண்டும். எமது வீடுவாசல்கள் மற்றும் வியாபார ஸ்தலங்கள் போன்ற இடங்களுக்கான பாதுகாப்புக்குரிய ஏற்பாடுகளை செய்துகொள்வதானது எமக்கு ஏற்பட இருக்கும் விபரீதங்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும். இவ் விடயத்தில் ஊர் பிரமுகர்கள், நலன் விரும்பிகள், மஸ்ஜித் பொறுப்புதாரிகள் கூடுதல் கவனம் செலுத்துமாறு அன்பாய் வேண்டிக் கொள்கின்றேன்.

குறிப்பாக 'பத்ர்' நினைவு இரவு, லைத்துல்கத்ர் இரவு போன்ற நாட்களில் விஷேசமாக ஊர் மக்கள் பள்ளிவாயலில் ஆண்களும் பெண்களுமாக கூடுவோம். அந்நேரம் எமது வீடுகள் கடைகளில் பாதுகாப்பு உத்தரவாதத்தை நாம் திட்டப்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு சிலராவது ஊர் மட்டத்தில் ரோந்து சேவையிலீடுபடுவதோடு பிரதேச பொலிசாரிடமும் அவர்களது சேவையைப் பெறமுயற்சியெடுக்க வேண்டும் என்பதையும் கூறிக் கொள்கின்றேன்.

தல்துவை பவாஸ்
முஸ்லிம்கள் அவதானத்துடன் நடந்துகொள்ளும் .. முஸ்லிம்கள் அவதானத்துடன் நடந்துகொள்ளும் .. Reviewed by Madawala News on 6/07/2017 08:13:00 PM Rating: 5