Kidny

Kidny

கிழக்கு முஸ்லிம் காங்கிரஸ் கூட்டமைப்பு காலத்தின் கட்டாயமாகும்.

ஜெ, எல் .ஷாஜஹான் காத்தான்குடி 

அரசியல் தீர்வு 1987இல் எழுதப்பட்டு விட்டது. இதன் ஊடாக திருகோணமலை என்ற இயற்கைத் துறைமுகத்துடன் கூடிய கிழக்கு முஸ்லிம்களின் கைகளுக்கு கிட்டியுள்ளது. இவ்வாறு அதிஸ்டமாகக் கிடைத்த கிழக்கைக் காப்பற்ற வேண்டிய கடமை முஸ்லிம்களுக்கும், முஸ்லிம் கட்சிகளுக்கும், உரியதாகும். எல்லாக் கட்சிகளும் இணைந்து ஒரு கூட்டமைப்பை, ஏற்படுத்தி தேர்தலில் பங்கு கொள்வதன் ஊடாகவே கிழக்கு முஸ்லிம்களின் அரசியல் இருப்பைக், காப்பற்ற முடியும். இதன் ஊடாகவே கிழக்குக்கு வெளியில் வாழும் முஸ்லிம்களின் இருப்பையும் காப்பாற்ற முடியும் என கிழக்கு ஐக்கிய முன்னணியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது


இலங்கையின் தற்போதைய அரசியல் இயங்கு திசையில் கிழக்கு மாகாணம் முக்கியத்துவம் பெறுகின்றது. , இலங்கையிலும் மூன்று இனங்களும் பரவலான இருப்பைக் கொண்டிருப்பது போன்று கிழக்கு மாகாணம் மட்டுமே மூன்று இனங்களும் கிட்டத்தட்ட 30வீதத்திற்கும் மேல் சமமான மக்கள் இருப்பைக் கொண்ட மாகாணமாகும். அத்துடன் நில, கடல் வளத்தைக் கொண்டது. ஆனால் இந்த மாகாணத்தினதும், மக்களினதும் துரதிஷ்டமமானது, இந்த கிழக்கு மாகாணத்தை அருகிலுள்ள மாகாணங்களினாஞம் அதில் வாழும்;, இரண்டு பெரிய, இனங்களான தமிழ் மற்றும்; சிங்கள இனங்கள் சுவீகரிக்க நினைப்பதாகும்.

,

அனால் கிழக்கில் வாழ்கின்ற முஸ்லிம் இனத்திற்கு கிழக்கு மட்டுமே பாரம்பரிய நிலமாக இருப்பதன் காரணமாக கிழக்கு முஸ்லிம்கள் தமது பாரம்பரிய வாழ்விடத்திற்காக கிழக்கு மண்ணில் அரசியல் ரீதியாக போராட வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள். சிங்கள மற்றும் தமிழ் இனங்களுக்கு கிழக்கு இருந்தாலும், வேறு மாகாணத்துடன் இணைந்தாலும் ஒன்றுதான். ஆனால் கிழக்கு மாகாணம் முஸ்லிம் மக்களின் அதிகாரத்திற்குள் போய்விடக்கூடாது என்று மட்டுமே செயற்படுகின்றார்கள்.

தமிழ் ஈழ விடுதலைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் கிழக்கு வடக்கு முஸ்லிம்களின் அரசியல், ஒரு பொறி நிலைக்கு கொண்டு வரப்பட்டது. சிங்கள மற்றும் தமிழ் கட்சிகளுக்கு வாக்களித்த முஸ்லிம் மக்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், என்ற கட்சியை ஆரம்பித்து அரசியல் உணர்வு பெற்றதன் பின்னர்இ கிழக்கை மையமாகக் கொண்ட ஒரு அரசியல் அதிகாரத்தை பெறவேண்டுமென்பதே எமதுமக்களின் கருத்தாக இருந்து வருகின்றது. அது | இலங்கை அரசியல் அரங்கில் முன்வைக்கப்பட்டதுடன். வடக்கு கிழக்கு இணைப்பை தமக்கு இழைக்கப்பட்ட, அநீதியாகவும் கருதி வருகின்றனர்.

தேசிய சிங்கள கட்சிகளை நிராகரித்து மக்கள் அதிகாரத்தை பெற்றுக் கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகரில் ஒருவரான மறைந்த தலைவர் ஆர்ஆ. அஷ்ரப் அவர்கள் விமான விபத்தில் திட்டமிட்டு கொல்லப்பட்டதன் பின்னர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிளவு பட்டு பல கட்சிகளாக பரிணாமம் பெற்றது. இவ்வாறு பிளவுபட்ட கட்சிகள் தனித்தனியாக தேர்தலில் போட்டிடுவதன் காரணமாக முஸ்லிம்களின் கிழக்கு மைய அதிகாரக்கோரிக்கை தமிழ் கட்சிகளால் தொடர்ந்தும் பின்தள்ளப்பட்டு வருகின்றது.


இந்த சந்தர்ப்பத்திலே கிழக்கு முஸ்லிம் காங்கிரஸ் கூட்டு இயக்கத்தின் தேவை அவசியமாகவும், அவசரமாகவும் காணப்படுகின்றது. கூட்டமைப்பு அல்லது கூட்டு இயக்கம் என்ற எண்ணக்கரு உலகில் பழமையானதாகும். ஐக்கிய நாடு சபை என்பது ஒரு கூட்டு இயக்கமே. இதேபோன்று சமஷ்டியை மையமாகக் கொண்ட நாடுகளும் ஒரு கூட்டமைப்பே. அமெரிக்கா, கனடா, சுவிஸ், ஜேர்மனி போன்ற நாடுகளும் கூட்டமைப்பைக் கொண்ட நாடுகளாகும். இலங்கையில் கூட்டமைப்பு அரசியல் உருவாக்கப்பட்டு ஐம்பது ஆண்டுகள் கடந்து விட்டது. சிங்களக் கட்சிகள் கூட்டமைப்பு, அமைப்பதும் தமிழ்க் கட்சிகள் கூட்டமைப்பை அமைப்பதும்இ ஆட்சியமைப்பதும் பழைய வரலாறு ஆகிவிட்து. இலங்கை அரசியல் வரலாற்றில் முஸ்லிம் அரசியல் கட்சி ஒன்றின் உருவாக்கமே மிகவும் இளம் வயதுடையதாகும். இதன் காரணமாக முஸ்லிம்கள் கூட்டு இயக்க அரசியல் வேலைத் திட்டத்தில் கற்றுக்கொண்டு அரசியல் வேலைத் திட்டதில், இணைவதில் சற்று தயக்கம், காட்டுகின்றனர். இந்த தயக்கம் காரணமாக கிழக்கு முஸ்லிம் அரசியல் அதிகாரம், முஸ்லிம்களின் கையைவிட்டு சென்றுவிடக்கூடிய அபாயம் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலுடன் இது மிகைத்துவிடும்.

இலங்கை மக்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலம் இலங்கையின் அரசியல் தீர்வு 1987இல் எழுதப்பட்டு விட்டது. இதன் ஊடாக திருகோணமலை என்ற இயற்கைத் துறைமுகத்துடன் கூடிய கிழக்கு முஸ்லிம்களின் கைகளுக்கு, கிட்டியுள்ளது. இவ்வாறு அதிஸ்டமாகக் கிடைத்த கிழக்கைக் காப்பற்ற வேண்டிய கடமை முஸ்லிம்களுக்கும், முஸ்லிம் கட்சிகளுக்கும் உரியதாகும். எல்லாக் கட்சிகளும் இணைந்து ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்தி தேர்தலில் பங்கு கொள்வதன் ஊடாகவே கிழக்கு முஸ்லிம் அரசியல் இருப்பைக் காப்பற்ற முடியும். இதன் ஊடாகவே கிழக்குக்கு வெளியில் வாழும் முஸ்லிம்களின் இருப்பையும் காப்பாற்ற முடியும். 

இதைத் தவிர வேறு விதமாக முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் சிந்திப்பார்களாயின் இந்திய முஸ்லிம்களின் கையறுநிலையோ இலங்கை முஸ்லிம்களுக்கும் ஏற்படுத்திக் கொடுப்பார்கள் என்பது திண்ணம்.

ஆகவே கூட்டமைப்பு வேலைத் திட்டத்தை கற்றுக் கொண்டு, உடனடியாக முஸ்லிம் கூட்டமைப்பை ஏற்படுத்துவது காலத்தின், கடமையாகும் என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

கிழக்கு முஸ்லிம் காங்கிரஸ் கூட்டமைப்பு காலத்தின் கட்டாயமாகும். கிழக்கு முஸ்லிம் காங்கிரஸ் கூட்டமைப்பு காலத்தின் கட்டாயமாகும். Reviewed by Madawala News on 6/09/2017 07:06:00 PM Rating: 5