Ad Space avaiable

ஹஜ் தொடர்பான முக்கிய அறிவித்தல் ...

இம்முறை ஹஜ் கடமையை நிறைவேற்ற  செல்லவதற்காக தங்கள் பெயர்களை பதிவு செய்து பதிவுக்கட்டணம் செலுத்தியுள்ளவர்கள் இம்மாதம் 5 திகதிக்கு முன்னர் அனுமதி வழங்கப்பட்டுள்ள ஹஜ் முகவர்களிடம் தங்களை பதிந்துகொள்ளுமாறு ஹாஜிகள் அறிவுருத்தப்பட்டுள்ளனர்.

மேலும் இம்முறை ஹஜ் கடமையை நிறைவேற்றும் பொருட்டு தங்கள் பெயர்களை பதிவு செய்து பதிவுக்கட்டணம் செலுத்தி தவிர்க்க முடியாத காரணங்களால் பயணத்தை  ரத்து செய்ய உத்தேசித்துள்ளவர்கள் இம்மாதம் 5 ம் திகதிக்கு முன்னர் இது தொடர்பில்  முஸ்லிம் கலாசார திணைக்களத்திற்கு அறிவிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹாஜிகளின் வசதிக்காக நாளையும் சனி மற்றும் நாளை மறுதினம் ஞாயிறும் முஸ்லிம் கலாசார திணைக்களம் திறந்திருக்கும் என  இது தொடர்பில் மடவளை நியுஸுக்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் ஹலீம் அவர்களின் பிரத்தியேக செயளாளர் பாஹிம் ஹாசிம் குறிப்பிட்டார்.
ஹஜ் தொடர்பான முக்கிய அறிவித்தல் ... ஹஜ் தொடர்பான முக்கிய அறிவித்தல் ... Reviewed by Madawala News on 6/02/2017 08:29:00 PM Rating: 5