Yahya

நல்லாட்சி எனும் ஏமாற்றுவித்தையும் எரிகின்ற வீட்டில் பிடுங்கியது லாபம் என்றலையும் தலைமைகளும்.அஸ்மி அப்துல் கபூர் 

இன்று ஊடகங்களில் முன்னிலைப்படுத்துகின்ற ரிசாட்-அதாஉல்லாஹ் இணைவு, கிழக்கு முல்வராக அதாஉல்லா, எனும் செய்தி தொடர்பிலும் இந்த செய்திகளைஎழுதி முஸ்லீம் காங்கிரஸ் தலைமைக்கு உள்ளூர் பிரதிநிதிகள் அழுத்தம் கொடுப்பதும் ,ரிசாட் அதாஉல்லாஹ் போன்ற முஸ்லீம் தலைவர்களிடையே சில கசப்புணர்வுகளை ஏற்படுத்தி கொள்வதற்க்குமான தந்திரோபாயமாகவும் அதாஉல்லாஹ் என்கின்ற அரசியல் தலைமை வெறுமனே அதிகாரத்தை மையப்படுத்தியது என காண்பிக்க பஎடுக்கின்ற பிரயத்தனங்களுமாகும்.


முஸ்லீம்கள் மகிந்த ராஜபக்ச காலத்தில் இறுதியாக இன ரீதியாக வஞ்சிக்கப்பாட்டார்கள், துன்புறுத்தப்பட்டார்கள் இவற்றின் பிண்னணியில் தான் முஸ்லீம் அரசியல் களம் முஸ்லீம் மக்களின் அரசியல் பலம் என்ன? என்பதை நிரூபிக்கும் தேவை மக்களுக்கு ஏற்பட்டது.

மக்களின் உணர்வு மாற்றம், தேவை என்பனவற்றை கருத்தில் கொண்டே முஸ்லீம் அரசியல் தலைவர்களும் பின்தொடர்ந்தனர்.


ஆனால் மகிந்த ராஜபக்சவினுடைய அரசில் பொதுபல சேனாவின் உருவாக்கத்திற்க்கும் அதனை பாதுகாக்கின்ற பணியையும் சம்பிக்க ரணவக்க மேற் கொண்டார் என்பது சாதாரண மக்கள் உணராவிட்டாலும் அமைச்சரவையில் அங்கம் வகித்த தலைவர்கள் உணர்ந்திருக்க வேண்டும்.


நல்லாட்சி உருவாகின்ற பலமிக்க கூட்டுக்களில் சம்பிக்க இணைந்த போது முஸ்லீம் தலைவர்கள் மகிந்த அரசை கவிழ்பதற்கான சதிதான் ஏற்கனவே அரங்கேறியது என தெளிவாக புரிந்த போதும் மக்களின் உணர்வுகளை மையப்படுத்தி எரிகின்ற வீட்டில் பிடுங்கியது லாபம் என்கின்ற ரீதியில் முஸ்லீம் மக்களிடம் இன்று நிகழ்ந்திருக்கும் மோசமான ஆட்சி பற்றிய பிண்னணி கூறாமல் இன்றும் ஆட்சியின் பங்காளர்களாக இருந்து கொண்டு இதற்க்குள்ளும் என்ன அரசியல் லாபத்தை அடைந்து கொள்ளலாம் என அங்கலாய்ப்பவர்களுடன் அதாஉல்லாஹ் தலைமையிலான தேசிய காங்கிரஸ் கூட்டு வைத்து கொள்வதானது கட்சி அரசியல் தற் கொலை செய்வதற்க்கு சமனானது.


இந்தியாவின் முஸ்லீம் விரோத மோடியின் அரசை அமெரிக்கா உருவாக்கியது, இலங்கைக்கான நல்லாட்சி யை இந்தியா உருவாக்கியது

பிராந்திய வல்லரசுக்களின் போட்டியே ஆட்சி மாற்றமாகும்

அடுத்த அமெரிக்க ஆதரவு அணியின் இலங்கைகான வேட்பாளர் சம்பிக ரணவக்க என்பவர்தான்


இந்த விடயங்களை தேசியகாங்கிரஸ் தலைவர் அமைச்சராக இருந்து கொண்டு மேடைகளில் முழங்கிய போதல்லாம் அவரை முஸ்லீம் விரோதியாக சித்தரித்தார்கள். இறுதியில் தான் கூறிய விடயங்ளுக்காக இன்று நிகழ்காலத்தில் உணர்த்தப்படும் உண்மைகளை கடந்த காலத்தில் எச்சரித்தமைக்காக அதாஉல்லாஹ் அதிகாரமற்றவரானார்.


இன்று தான் முதலமைச்சர் எனும் அதிகாரத்தையோ அல்லது வெறுமனே அரசியல் தீர்வு நிலையற்ற முஸ்லீம் காங்கிரஸூக்கெதிரான கோசங்களையோ அதா பின் தொடர போவதில்லை


கிழக்கை தனித்து நின்று துப்பாக்கிகளுக்கு அஞ்சாமல் பிரத்தெடுக்க முஸ்லீமகளின் குரலாக நின்று முதலமைச்சர்களை உருவாக்கிய அதாஉல்லாஹ் ஒரு போதும் முதலமைச்சர் தொடர்பில் சிந்திக்க மாட்டார் என்பது எமது நிலைப்பாடு


நல்லாட்சி உருவான விதம் அதில் நாங்கள் மிகப் பாரிய தவறிழைத்து விட்டோம், இவையெல்லாம் சதி திட்டங்கள் என முஸலீம் தலைவர்கள் வெளிப்படையாக பேச வேண்டும்

முஸ்லீம் காங்கிரஸ் தலைமையால் அவற்றை பேச முடியாமல் போனால் முஸ்லீம் கூட்டமைப்பு உருவாகும் நிலை தோற்றம் பெற்றால் அமைச்சர் ரிசாட் பகிரங்கப்படுத்த வேண்டும்

அதன் பின்னரே நாம் எதற்க்காக கூட்டமைக்க போகிறோம்

சமுகத்திற்கான தேவைப்பாடு இவ்விடத்தில் இருக்கிறதா?

என்பது தொடர்பில் தலைமைகள் முயற்சிக்க வேண்டும்


வெறுமனே அதிகாரத்தை நம்பி பயணிக்கும் அதற்காக சமுக அரசியலை விற்று பிழைக்கும் எந்த ஒரு சக்தியுடனும் தேசிய காங்கிரஸ் இணைந்து செயற்படாது என்பது திண்ணம்.

நல்லாட்சி எனும் ஏமாற்றுவித்தையும் எரிகின்ற வீட்டில் பிடுங்கியது லாபம் என்றலையும் தலைமைகளும். நல்லாட்சி எனும் ஏமாற்றுவித்தையும் எரிகின்ற வீட்டில் பிடுங்கியது லாபம் என்றலையும் தலைமைகளும். Reviewed by Madawala News on 6/29/2017 10:02:00 PM Rating: 5