tg travels

அமைச்சு பறிபோகும் என்ற அச்சத்தில் உண்மைகளை வெளிப்படுத்த ஹக்கீம் தயக்கம் காட்டுகிறாரா ?


-அ அஹமட் -

அண்மையில் அமைச்சர் ஹக்கீம் கண்டியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போது முஸ்லிம்கள் மீது இப்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கும் தாக்குதல் எங்கிருந்து வருகின்றன என்று எமக்கு தெரியும் என்று கூறியிருந்ததோடு அவை வெளியில் சொல்ல முடியாத அளவு பாரதூரமானவை எனவும் கூறியிருந்தார்.




அமைச்சர் ஹக்கீம் இதனை மிகச் சாதாரணமாக கூறியிருந்தாலும் இது சாதாரண விடயமல்ல.அதற்கு முன்பு இலங்கையில் இடம்பெற்ற இனவாத செயற்பாடுகளின் பின்னால் முன்னாள் ஜனாதிபதி மகிந்தவை குற்றம் சாட்டிக்கொண்டிருந்த அமைச்சர் ஹக்கீம் இவ்வாறு கூறியிருப்பதானது அதன் பின்னணியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இல்லை என்பதை தெளிவாக நிரூபணம் செய்கிறது.இதன் பின்னணியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இருந்தால் அதனை முதலில் வெளிப்படுத்துபவராக அமைச்சர் ஹக்கீமே இருந்திருப்பார்.




பெரும்பான்மையின முக்கிய அமைச்சர்கள் உட்பட பல முக்கிய அரசியல் வாதிகள் ஞானசார தேரரின் பின்னால் யார் உள்ளார் என்பதில் தர்க்கித்து கொண்டிருக்கின்றனர். முஸ்லிம் சமூகம் இவைகள் தொடர்பில் எந்த விதமான முடிவும் எடுக்க முடியாமல் நிர்க்கதியான ஒரு நிலையில் உள்ளது. 




இவ்வாறான நிலையில் அமைச்சர் ஹக்கீம் அதனை அறிந்தும் மறைப்பது ஏன் என்ற விடயமே அவர் மீதான சந்தேகத்தை கிளறி விடுகிறது. இது அவர் முஸ்லிம் சமூகத்துக்கு செய்கின்ற மிகப் பெரும் துரோகமும் கூட. அந்த உண்மைகளை வெளிப்படுத்துவதில் என்ன பாரதூரமான விளைவு ஏற்படப் போகிறதோ தெரியவில்லை. அதனை அமைச்சர் ஹக்கீம் சற்று தெளிவு செய்தால் சிறப்பாக இருக்கும்.




அமைச்சர் ஹக்கீம் இந்த விடயங்களை மறைப்பதானால் அது அரசியல் இல்லாபங்களுக்கல்லாமல் வேறு எதற்குமாகவும் இருக்க முடியாது. இன்றைய நிலையில் அமைச்சர் ஹக்கீமின் அரசியல் இலாபங்களை இவ்வாட்சியாலர்களிடமிருந்தே அதிகம் பெற்றுக்கொள்ள முடியும்.அவரின் தமிழ் தேசியக் கூட்டமைப்புடனான உறவு என்ற விடயத்தையும் இவ்விடத்தில் கவனத்தில் கொள்வது பொருத்தமானதாக இருக்கும் என நம்புகிறேன். அமைச்சர் ஹக்கீமின் இக் கூற்றானது பொது பல சேனாவின் பின்னால் முன்னாள் ஜனாதிபதி இல்லை என்ற விடயத்தை நிறுவிச் செல்வதோடு இவ்வாட்சியாளர்கள் மீதான சந்தேகத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.




நோர்வே உடன் நெருக்கமான உறவுகளை பேணிவரும் இந்திய புலனாய்வு பிரிவிடன் தேர்தல் செலவுகு பணம் பெற்றவர் என குற்றம் சுமததப்படும் ஹக்கீம் பொதுபல சேனா மற்றும் முஸ்லிம் விரோத தாக்குதல் ரகசியங்களை உடனடியாக வெளியிட வேண்டும்.



அமைச்சு பறிபோகும் என்ற அச்சத்தில் உண்மைகளை வெளிப்படுத்த ஹக்கீம் தயக்கம் காட்டுகிறாரா ? அமைச்சு பறிபோகும் என்ற அச்சத்தில் உண்மைகளை வெளிப்படுத்த ஹக்கீம் தயக்கம் காட்டுகிறாரா ? Reviewed by Madawala News on 6/24/2017 04:19:00 AM Rating: 5