Ad Space Available here

ஆப்கான் – மத்திய ஆசியா எண்ணெய் – இசுலாமிய தீவிரவாதம்.


Muja ashraff 

ஒரு வேளை உலக வர்த்தக மையம் தகர்க்கப்படாதிருந்தால் அமெரிக்கா ஆப்கானில் கால் வைத்திருக்காதா ? ‘ஆம்’ என்று பலரும் சொல்லக்கூடும்.


‘ஆஸ்திரிய இளவரசனை ஒரு செர்பிய தீர்விரவாதி சுட்டுக்கொல்லாமலிருந்தால் முதல் உலகப் போரே மூண்டிருக்காது, ஒரு கோடி மக்களின் மரணமும் தவிர்க்கப்பட்டிருக்கும்’ என்று நம்புபவர்கள் இதையும் நம்பலாம். உலகை மறுபங்கீடு செய்யத் துடித்துக் கொண்டிருந்த ஏகாதிபத்திய நாடுகளுக்கு போரைத் துவக்குவதற்கு அந்த தோட்டாச் சத்தம் அன்று ஒரு முகாந்திரம். அந்தக் கொலையின் முக்கியத்துவம் அவ்வளவு தான்.


உலக வர்த்தக மையத்தின் மீது நடந்த தாக்குதல் என்பது கோப்பை நிரம்பி வழிவதற்கு தேவையான கடைசித்துளி. அவ்வளவுதான். ஒருவேளை இந்தத் தாக்குதல் நடந்திருக்காவிட்டாலும் ஆப்கானில் தலையிடுவதற்கான முகாந்திரம் ஒன்றை அமெரிக்கா உருவாக்கியிருக்கும் என்பது தான் இக்கட்டுரை முன்வைக்கும் வாதம்.


உலக வர்த்தக மையம் தகர்க்கப்பட்ட சில நாட்களுக்கு பின் நீனா பர்லே என்ற பிரபல அமெரிக்க நிருபர் இணைய இதழொன்றில் கீழ்கண்டவாறு எழுதியிருந்தார்.


“சமீபத்தில் மேன்மக்கள் பங்கு பெறும் வாஷிங்டன் விருந்தொன்றிற்குச் சென்றிருந்தேன். பிரிட்டீஷ் கனவான்களும் அமெரிக்கப் பிரபலங்களும் அங்கே நிறைந்திருந்தார்கள். சவூதி அரேபியாவின் தூதர் இளவரசர் பந்தர் அவர்களுக்கும் புஷ் குடும்பத்தினருக்கும் உள்ள நெருக்கமான நட்பு பற்றியது தான் அன்றைய விருந்து மண்டபத்தின் கிசு கிசு…. சிறிது நேரத்தில் பேச்சு மத்திய ஆசியாவின் எண்ணெய் வயல்களை நோக்கித் திரும்பியது.”


“6000 அமெரிக்கர்கள் செத்தது எண்ணெய் வயல்களுக்காகவா, சவூதி இளவரசர் குடும்பத்துக்காகவா இரண்டுக்கும் சேர்த்தா என்று சிந்தித்தபடியே நான் மண்டபத்தை விட்டு வெளியேறினேன்”…. என்கிறார் நீனா பர்லே.


இப்படித்தான் 1991 – ல் சதாம் உசேன் குவைத்தை ஆக்கிரமித்த போது குவைத் மருத்துவமனையிலிருந்து ஒரு நர்சை அமெரிக்க நாடாளுமன்றத்திற்குக் கொண்டு வந்தார் இன்றைய அதிபர் புஷ்ஷின் தந்தை சீனியர் புஷ்.


‘மருத்துவமனையிலிருந்து அப்போது தான் பிறந்த பிஞ்சு குழந்தைகளை ஈராக் சிப்பாய்கள் எப்படித் தூக்கிக் கடாசினர்’ என்பதைக் கண்ணீர் மல்க விவரித்தார் அந்த நர்ஸ். வளைகுடாப் போரில் அணுக்கழிவு ஆயுதங்களை ஏவி, பிறக்கப்போகும் ஈராக்கியக் குழந்தைகளையெல்லாம் கொல்ல அந்த சென்டிமெண்ட் பயன்பட்டது. நர்சின் கண்ணீர் ஒரு மோசடி நாடகம் என்பது பின்னர் தான் அம்பலமானது.


ஆனால், ஈராக்கின் பிரம்மாண்டமான ருமைலா எண்ணெய் வயல்களை ஆக்கிரமித்து குவைத்துடன் இணைக்க வளைகுடாப் போர் பயன்பட்டது. இவை அமெரிக்க, பிரிட்டிஷ் எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டன. இது வளைகுடப் போரின் பொருளாதார ஆதாயம்.


சந்தர்ப்ப சாட்சியங்கள் பின்லாடன் தான் குற்றவாளி என்று காட்டுவதால், அத்தகைய பயங்கரவாதிக்கு புகலிடம் அளித்திருக்கும் ஆப்கான் மீது போர் தொடுப்பதாக கூறுகிறது அமெரிக்கா. போர் தொடுக்கின்ற இந்த அமெரிக்க பயங்கரவாதிகளுக்கெதிரான சந்தர்ப்ப சாட்சியங்களை நாம் பார்ப்போம்.

ஆப்கான் – மத்திய ஆசியா எண்ணெய் – இசுலாமிய தீவிரவாதம். ஆப்கான் – மத்திய ஆசியா எண்ணெய் – இசுலாமிய தீவிரவாதம். Reviewed by Madawala News on 6/15/2017 09:21:00 PM Rating: 5