Ad Space avaiable

மஹிந்தவின் ஆதரவாளர்கள் கூட பின்னணியில் இருக்கலாம் !


மஹரகம நுகேகொட பிரதேசங்களில் கடைகளுக்கு தீ வைத்ததாக கைதுசெய்யப்பட்ட நபருக்கும் தங்கள் அமைப்புக்கும் எதுவித தொடர்பும் இல்லை என பொதுபல சேனா மறுத்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் பொலிஸார் உத்தியோகபூர்வமாக தங்களிடம் விசாரணை செய்யவில்லை என கூறியுள்ள அவ்வமைப்பு தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த சந்தர்ப்பத்தை சிலர் பயன்படுத்திக்கொண்டு வன்முறைகளை மேற்கொள்ளமுடியும் அல்லது இதன் பின்னணியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் ஆதரவாளர் கூட இருக்கலாம் பொலிஸார்தான் அதனை கண்டரிய வேண்டும் என அவ்வமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது கைது விவகாரத்தை காரணம் காட்டி எவரும் வன்முறையில் ஈடுபடக்கூடாது என ஞானசார தேரர் வெளிப்படையாக வேண்டுகோள் விடுத்துள்ளதாக அவ்வமைப்பின் முக்கியஸ்தர் குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்தவின் ஆதரவாளர்கள் கூட பின்னணியில் இருக்கலாம் ! மஹிந்தவின் ஆதரவாளர்கள் கூட பின்னணியில் இருக்கலாம் ! Reviewed by Madawala News on 6/09/2017 02:53:00 AM Rating: 5