Kidny

Kidny

மாட்டிறைச்சி எடுத்து சென்றதாக சந்தேகம்; ஜுனைட் என்பவர் காவி பயங்கரவாதிகளால் குத்திக்கொலை 


அரியானாவின் பலாப்கார் பகுதியைச் சேர்ந்த ஜுனாய்ட் ,கசிம் மற்றும் ஷாகிர் என்ற மூன்று சகோதரர்கள் ஈத் பண்டிகைக்காக டெல்லிக்கு வந்து துக்லகாபாத்தில் பொருட்கள் வாங்கிவிட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்தனர் .


இம்மூவரும் டெல்லி-மதுரா செல்லும் ரயிலில் பயணம் செய்யும் போது அவர்கள் மாட்டிறைச்சி வைத்திருப்பதாக சந்தேகித்து அங்குள்ள சகபயணிகள் தாக்கியுள்ளனர். அவர்கள் கத்தியால் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் ஜுனாய்ட் என்பவர் உயிரிழந்தார். மற்ற இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


டெல்லி போலீஸ் அளித்த தகவலின் அடிப்படையில் இந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்ட செய்தியில்,”அவர்கள் வீட்டிற்கு செல்லும் வழியில் அவர்களிடையே மாட்டிறைச்சி குறித்து வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனை கேட்ட அருகில் இருந்த பயணி அவர் பக்கம் திரும்பி கத்தியால் தாக்கியுள்ளார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஒருவர் மரணம் அடைந்துள்ளார்” இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.அவரகள் மாட்டிறைச்சி எடுத்து எடுத்து சென்றனரா? எடுத்து சென்றால் அவர்கள் எடுத்து சென்றது என்ன இறைச்சி என்பது பற்றி எவ்வித தகவலும் தெரியவில்லை.


மருத்துவமனையில் உள்ள ஷாகிர் கொடுத்த தகவலின் அடிப்படையில் இந்தியா டூடே வெளியிட்ட செய்தியில் அவர்கள் மூவரும் ரயிலில் ஏறியவுடன் அங்குள்ள பயணிகளில் சிலர் அவர்களை தவறாக நடத்தியுள்ளனர். இதனை தடுத்த தங்களை அந்த கும்பல் தாக்கியதாக கூறியுள்ளனர். அந்த கூட்டத்தில் இரண்டு பேர் கத்தியை கொண்டு தாக்கியுள்ளனர். அவர்கள் போலீசாரை அணுக முயன்ற போதிலும் அவர்களால் முடியவில்லை என கூறியுள்ளார்.


கடந்த வாரம் ஜாகர்கண்ட்டிலும் இது போன்ற சம்பவம் நடந்துள்ளது. மாட்டிறைச்சி கொண்டு செல்வதாக கூறி முஸ்லீம் ஒருவர் தாக்கப்பட்டார்.ஆனால் அவர் கொண்டு சென்றது ஆட்டு இறைச்சி என்பது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது.


பாஜக வின் நரேந்திர மோடி அரசு மாட்டிறைச்சி சாப்பிடுவதற்கு நாடு முழுவதும் போட்ட தடை உத்தரவிற்கு பிறகு இது போன்ற தாக்குதல் நாடு முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

-தின தந்தி-

மாட்டிறைச்சி எடுத்து சென்றதாக சந்தேகம்; ஜுனைட் என்பவர் காவி பயங்கரவாதிகளால் குத்திக்கொலை  மாட்டிறைச்சி எடுத்து சென்றதாக சந்தேகம்; ஜுனைட் என்பவர் காவி பயங்கரவாதிகளால் குத்திக்கொலை  Reviewed by Madawala News on 6/23/2017 05:20:00 PM Rating: 5