Ad Space avaiable

கத்தாருக்கு ஐந்து விமானங்களில் உணவுப்பொருட்களை ஈரான் அனுப்பி வைத்தது ! 


இரானின் முக்கிய போட்டியாளராக விளங்கும் சவூதி அரேபியாவின் நேச நாடுகள்,கத்தார் தீவிரவாத செயல்களுக்கு நிதி ஆதரவு அளிப்பதாக குற்றஞ்சாட்டி கத்தாருடனான உறவுகளை கடந்த வாரம் துண்டித்து கொண்ட நிலையில்,


சவூதி அரேபியாவின் எல்லை நிலப்பரப்பில் இருந்து கத்தாருக்கு 40 சதவீதம் உணவுப் பொருட்கள் வருகின்ற பாதை மூடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பழங்கள், காய்கறிகள் போன்ற விரைவில் அழுகிவிடும் உணவுப் பொருட்களை கொண்டு இதுவரை 5 விமானங்கள் கத்தாருக்கு அனுப்பப்பட்டுள்ளன. 

அவை ஒவ்வொன்றும் 90 டன் உணவுப் பொருட்களை கொண்டு சென்றுள்ள நிலையில் இன்னொரு விமானம் இன்று அனுப்பப்படயிருக்கிறது என்று இரான் ஏர் விமான நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்த உணவுப் பொருட்கள் உதவியாக வழங்கப்படுகிறதா அல்லது வணிகப் பரிமாற்றமா என்று தெளிவாக தெரியவில்லை.

சவூதி அரேபியா, பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்டுக்கள் தங்களுடைய வான்வழிகளை கத்தாருக்கு மூடியுள்ள நிலையில், இரான் தன்னுடைய வான்பரப்பை கத்தாருக்கு திறந்துள்ளது.

கத்தாருக்கு ஐந்து விமானங்களில் உணவுப்பொருட்களை ஈரான் அனுப்பி வைத்தது !  கத்தாருக்கு ஐந்து விமானங்களில் உணவுப்பொருட்களை ஈரான் அனுப்பி வைத்தது !  Reviewed by Madawala News on 6/12/2017 12:14:00 AM Rating: 5