Ad Space avaiable

லண்டன் தாக்குதல் ; ஆறு பேர் பலி ..


பிரிட்டனில் லண்டன் பிரிட்ஜில் நடந்து சென்றவர்கள் மீது வேனை மோத செய்தும், பரோ மார்க்கெட் பகுதியில் பொதுமக்களை கத்தியால் தாக்கியும் நடத்தப்பட்ட தாக்குதலில் பொதுமக்கள் 6 பேர் உயிரிழந்தனர்.

தாக்குதல் நடத்திய மூன்று பேரை போலீஸ் சுட்டுக்கொன்றுள்ளனர்.இந்த  தாக்குதலை அடுத்து லண்டன் நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

லண்டன் பிரிட்ஜ் பகுதியில் தாக்குதல் என்று செய்தி தெரியவந்ததும்,போலீஸ் விரைந்து சென்று அங்கு தாக்குதலை நடத்தியுள்ளனர். பரோ மார்க்கெட் பகுதியில் பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்திய மூவரை முதல் தகவல் கிடைக்கப்பெற்ற 8 நிமிடங்களில் சுட்டு வீழ்த்தியாக என லண்டன் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

பிரிட்டன் பிரதமர் தெரசா மே, லண்டன் போலீஸ் தரப்பில் பயங்கரவாத தாக்குதல் என தெரிவிக்கப்பட்டு உள்ள அதேவேளை இச்சம்பவம் தொடர்பாக விசாரணையும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்த தாக்குதல்களுக்கு இதுவரை எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும்  பொறுப்பேற்கவில்லை. 
Image may contain: night and outdoor
Image may contain: one or more people and outdoor

லண்டன் தாக்குதல் ; ஆறு பேர் பலி .. லண்டன் தாக்குதல் ; ஆறு பேர் பலி .. Reviewed by Madawala News on 6/04/2017 11:02:00 AM Rating: 5