Ad Space Available here

ஞானசார தேரர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சரணடையமாட்டார்..


ஞானசார தேரர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சரணடையமாட்டார். ஜனாதிபதியும் பிரதமரும் முஸ்லிம் அடிப்படைவாதிகளுடன் இணைந்து  முட்டாள்தனமாக சூழ்ச்சி செய்ய கூடாது.


சிந்திக்காது பொலிசார் பிழையை திருத்திக் கொண்டு செயற்பட வாய்ப்புகள் இல்லை. சூழ்ச்சிகளுக்குள் சிக்கி  கைதுகளுக்கு முற்பட்டால் கடுமையான விளைவுகளை எதிர் கொள்ள நேரிடும் என பொதுபல சேனா எச்சரித்துள்ளது. 

முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களுக்கு இடையில் மோதல்களை ஏற்படுத்தும் வகையில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் நாவலப்பிட்டிய சம்பவத்தை மேற்கோள் காட்டி கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பில் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்வோம். அவருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது. 

ராஜகிரியவில் அமைந்துள்ள சத்தர்மராஜிக விகாரையில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.

இதன்போது உரையாற்றிய பொதுபல சேனாவின் நிறைவேற்று பணிப்பாளர் டிலாந்த விதானகே கூறுகையில்,

முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் தீ வைத்ததாக கூறி கைது செய்யப்பட்டுள்ள நபருக்கும் பொதுபல சேனாவிற்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை. பொதுபல சேனா அலுவலகத்திற்கு வந்து சென்றதற்காக உறுப்பினராகிவிட முடியாது. அதே போன்று பொதுபல சேனாவிற்கு உறுப்பினர்கள் இல்லை. 

பொலிசார் போலியான பிரசாரங்களை செய்து பிரச்சினையை திசைத்திருப்ப கூடாது. ஞானசார தேரர்  யாருக்கும் அச்சப்பட்டு மறைந்திருக்க வில்லை. அடிப்படைவாதிகளினால் ஏற்பட்டுள்ள உயிரச்சுறுத்தல் காரணமாகவும் தனது உயிருக்கு ஏதும் ஆபத்து ஏற்பட்டால் அதனால் நாட்டில் ஏற்படக் கூடிய பாரிய வன்முறைகளை கருத்தில் கொண்டே சற்று அவர் ஒதுங்கியுள்ளார். 

இன்னும் 20 ஆண்டுகளில் இலங்கையில் பௌத்த மதம் அழிவை நோக்கி பயனிக்கும்.

முஸ்லிம் அடிப்படைவாதிகளினால் இலங்கையில் பௌத்தர்களுக்கு உள்ள அச்சத்தை ஞானசார தேரர் புரிந்து கொண்டு செயற்படுகின்றார். எனவே சிறைக்கு செல்லும் அச்சத்தில் ஒளிந்துக்கொள்ள வில்லை. நாட்டிற்காக பல்லாயிரம் தேரர்கள் உயிர் தியாகம் செய்யவும் சிறைக்கு செல்லவும் காத்திருக்கின்றனர். 

நீதி மன்ற விசாரணைகளுக்கு வரவில்லை என்றால் அதற்கு சரியான காரணம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் கூட்டு எதிர் கட்சியின் சிலர் சுயநலத்திற்காக அவரை சரணடையுமாறு கூறுகின்றனர். விசாரணைகளுக்கு வரும் போது ஐ எஸ் தாக்குதல் போன்று பாரியதொரு தாக்குதலை நடத்தி அதனூடாக ஞானசார தேரரின் உயிரைப் பறிப்பது மாத்திரமன்றி நாட்டில் பாரிய இன மோதலொன்று வித்திடும் சூழ்ச்சியே முன்னெடுக்கப்படுகின்றது. 

பௌத்தர்கள் பயங்கரவாதிகள் அல்லர். கடந்த 5 வருடகாலமாக பொதுபல சேனாவின் கூட்டங்களின் போது முஸ்லிம் மக்களை அவதூறு செய்யும் வகையில் செயற்பட வில்லை. எனவே பொதுபல சேனாவிற்கு எதிராக பொலிசார் முன்வைத்துள்ள குற்றச்சாட்டை நிவர்த்திக்க வேண்டும். அளுத்கம சம்பவம் தொடர்பில் கடந்த அரசாங்கமோ தற்போதைய அரசாங்கமோ உரிய வகையில் விசாரணை செய்ய வில்லை. செய்திருந்தால் உண்மைகள் வெளிப்பட்டிருக்கும். 

எனவே பொலிசார் பிழையை திருத்திக் கொள்ள வேண்டும். முஸ்லிம் அடிப்படைவாத குழுக்கள் திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றன. காவி உடைத்தரித்த பயங்கரவாதிகள் என அமைச்சர் ரவூப் ஹக்கீம் 2013 ஆம் ஆண்டில் தெரிவித்திருந்தார். மீண்டும் இதனை உறுதிப்படுத்தும் வகையில் நாவலப்பிட்டிய தொழிற்சாலை தீ சம்பம் தொடர்பில் அமைச்சர் பொறுப்பற்ற வகையில் சிங்கள இனத்தின் மீது பழியை தூக்கி போட்டுள்ளார்.

தீ காரணம் மின்னொழுக்கு என உரிமையாளர் கூறுகின்ற நிலையில் அமைச்சர் இன மோதலை ஏற்படுத்தும் வகையில் இனவாதமாக கருத்து தெரிவித்துள்ளார். எனவே இவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 

அமைச்சர் ரவூப் ஹக்கீமிற்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யவும் திட்டமிட்டுள்ளோம். எவ்வாறாயினும் பொதுபலசேனா உறுப்பினர்களை கைது செய்ய அரசாங்கம் அடிப்படைவாதிகளின் சொல் கேட்டு சூழ்ச்சி செய்தால் கடுமையான விளைவுகளை எதிர் கொள்ள நேரிடும்.

ஜனாதிபதியும் பிரதமரும் முட்டாள்தனமாக சிந்திக்காது பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும். 

தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டே ஞானசார தேரர் மறைந்துள்ளார். தகுந்த நேரத்தில் அவர் வெளிவருவார். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சரணடைவதற்கான வாய்ப்புகள் இல்லை என அவர் மேலும் குறிப்பிட்டார். 

ஞானசார தேரர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சரணடையமாட்டார்.. ஞானசார தேரர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சரணடையமாட்டார்.. Reviewed by Madawala News on 6/13/2017 08:16:00 PM Rating: 5