Ad Space avaiable

பிரதமர் உத்தரவாதம் வழங்காவிட்டால் பகிஷ்கரிக்கும் தீர்மானம் ! 

சமகாலத்தில் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை பிரதமர் நேரடியாக தலையிட்டு தீர்த்து வைக்காவிட்டால் தான் பாராளுமன்ற அமர்வுகளை பகிஷ்கரிப்பு செய்யப்போவதாக பிரதமருக்கு அறிவிக்கப்போவதாக பா உறுப்பினர் எஸ் எம் மரிக்கார் குறிப்பிட்டுள்ளார்.


ஏற்கனவே பாராளுமன்றத்தை புறக்கணிப்பு செய்யும் தீர்மானத்துக்கு வரவேண்டும் என அனைவருக்கும் அழைப்பு விடுத்திருந்த அவர் இன்று நாடு திரும்பும் பிரதமரிடம் நேரம் எடுத்து பேசவுள்ளதாகவும் தொடர்ந்து ஒன்றும் நடக்காத பட்சத்தில் அவர் பாராளுமன்றத்தை பகிஷ்கரிப்பு செய்யும் கடிதத்தை பிரதமருக்கு கையளிக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

இவருக்கு பக்கபலமாக முஜீபுர் ரஹ்மான் எம் பியும் இந்த நடவடிக்கையில் இறங்க அவருன் கலந்தாலோசித்து வருவதாக அறியமுடிகிறது.


 

பிரதமர் உத்தரவாதம் வழங்காவிட்டால் பகிஷ்கரிக்கும் தீர்மானம் !  பிரதமர் உத்தரவாதம் வழங்காவிட்டால் பகிஷ்கரிக்கும் தீர்மானம் !  Reviewed by Madawala News on 6/10/2017 01:31:00 PM Rating: 5