Ad Space avaiable

தீர்வு கிடைக்கும் வரை பாராளுமன்ற அமர்வுகளை கூட்டாக புறக்கணிக்கும் தீர்மானத்துக்கு வரவேண்டும் ; மரிக்கார் முஸ்லிம் எம் பி களுக்கு அழைப்பு ..


ஞானசார தேரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காமல் அரசாங்கம் இழுத்தடிப்பு செய்வது தொடர்பில் அரசாங்கத்துக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கும் தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளும் பொருட்டு அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் எதிர்வரும் தினங்களில் ஒன்று கூட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ் எம் மரிக்கார் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் தான் வேண்டுகோள்விடுப்பதாக குறிப்பிட்டார் .

வெள்ள அணர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நேற்று மெகட கொலன்னாவை ரஹ்மானியா ஜும்மா பள்ளிவாயலில் அவரினால்  ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மருத்துவ முகாமில் அவர் கலந்துகொண்ட போது ஞானசார தேரர் விவகாரம் தொடர்பில் அவரிடன் கேள்வி எழுப்பப்பட்ட போது  அதற்கு பதில் அளித்து கருத்து வெளியிட்ட போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இந்த விடயம் தொடர்பில் அங்கு மேலும் கருத்து கூறிய அவர்..

இந்த நாட்டில் 30 வருடகால யுத்ததை முடிவுக்கு கொண்டுவர தங்களை அர்பணித்து செயலாற்றிய புலனாய்வு பிரிவுக்கு ஞானசார தேரரை கண்டுபிடிக்க முடியாமல் இருப்பது இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய நகைச்சுவையாகும்.

தற்போது நடப்பவைகளை பார்க்கும் போது இந்த விடயத்தில் நீதித்துறையும் பொலிஸாரும் நடந்துகொள்ளும் விதம் இந்த கூட்டு அரசாங்கத்தில் உள்ள ஒரு சக்தி ஞானசார தேரரை கைது செய்யவிடாமல் தடுப்பதையும் அவரை  பாதுகாப்பதையும்  எமக்கு பறைசாற்றுகிறது.

நாம் ஏற்கனவே ஞானசாரதேரர் விடயத்தில் அரசாங்கத்தின் உயர்மட்டங்களுக்கு தனிப்பட்ட ரீதியிலும் கூட்டாகவும் அழுத்தம் கொடுத்துள்ளோம்.

இந்த விடயம் தொடர்பில் நாம் உடனடியாக இறுதி தீர்மானம் ஒன்றுக்கு வரவேண்டும்.எமது தீர்மானத்தை அரசாங்கம் செவிசாய்க்காத பட்சத்தில் எமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கூட்டாக பாராளுமன்ற அமர்களை புறக்கணிக்கும் தீர்மானம் ஒன்றுக்கு வரவேண்டும் என குறிப்பிட்டார்.

தீர்வு கிடைக்கும் வரை பாராளுமன்ற அமர்வுகளை கூட்டாக புறக்கணிக்கும் தீர்மானத்துக்கு வரவேண்டும் ; மரிக்கார் முஸ்லிம் எம் பி களுக்கு அழைப்பு .. தீர்வு கிடைக்கும் வரை பாராளுமன்ற அமர்வுகளை கூட்டாக புறக்கணிக்கும் தீர்மானத்துக்கு வரவேண்டும் ; மரிக்கார்  முஸ்லிம் எம் பி களுக்கு அழைப்பு .. Reviewed by Madawala News on 6/04/2017 01:50:00 PM Rating: 5