Yahya

இனவாதத்துக்குகெதிரான இன ஒற்றுமை ..


இந்நாட்டை நான்கு நூற்றாண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்த மேற்குல ஏகாதிபத்திவாதிகள் விதைத்து விட்டுச் சென்ற இனவாதமும், மதவாதமும்  சந்ததி வழியாகக் கடந்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.அவர்கள் விதை;துவிட்டுச் சென்ற இனவாத மற்றும் மதவாதச் சிந்தனைகொண்டோரினால் உருவான அமைப்புக்களினதும், அரசியல் கட்சிகளினதும்; செயற்பாடுகள் இந்நாட்டில் வாழும் சிறுபான்மை மக்களின் நிம்மதிக்கு குந்தகம் விளைவித்து வருவதை வரலாற்று நெடுங்கிலும் அவதானிக்க முடிகிறது.

மறைந்த ஜனாதிபதி ஜே.ஆர் ஜவர்தனாவினால்; 1943ஆம் இலங்கை அரசாங்க சபையில் தனிச்சிங்களம் அரச கரும மொழியாக ஆக்கப்பட வேண்டுமென முன்மொழியப்பட்டபோது, அதை எதிர்த்து வாதித்திட்ட மறைந்த முன்னாள் பிரதமர் எஸ்.டப்ளியு,ஆர்.டி பண்டாரநாயக்க பின்னர் தனது சுய அரசியலுக்காகவும,; பௌத்த சிங்கள மக்கள் மத்தியில் தனக்கான செல்வாக்கை மேலோங்கச் செய்வதற்காகவும் 1956ஆம் ஆண்டு தனிச்சிங்களச் சட்டத்தை முன்மொழிந்து நிறைவேற்றினார். அந்நாளிலிருந்து பௌத்த சிங்கள இனவாதச் சிந்தனையாளர்களின் சிறுபான்மை இனங்களுக்கெதிரான செயற்பாடுகள் பல்வேறு தளங்களிலிருநதும் முன்னெடுக்கப்படத்; தொடங்கியது..

பௌத்த சிந்தனை வாதமும் சிறுபான்மையினரும்,

பௌத்த சிந்தனை வாத்தினால் ஏற்பட்ட வரலாற்றுத் தவறின் எதிரொலியானது வளமான இலங்கையை சுடுகாடாகா மாற்றியது. சமூக, பொருளாதாரத்தில் இந்நாட்டை நலிவடையச் செய்ததுடன் பல்லாயிரக்காண அப்பாவிகளின் உயிர்களை காவுகொண்டும்; இந்நாட்டின் அபிவிருத்திக்கு பங்களிப்புச் செய்யக்கூடிய பெருமதிமிக்க மனிதவளத்தை ஊனமாக்கியும், கடல் கடந்து வாழவும்; செய்திருக்கிறது.

குறிப்பாக வடக்கு, கிழக்கு  தமிழ் மக்களின் சமூக, பொரளாதார, அரசியல், கல்வி. கலாசாரக் கட்டமைப்புக்கள் திட்டமிட்டு சிதைக்கப்பட்டன. 30 வருட கால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் வலிகளுக்கு இன்னும் முறையான நிவாரணங்கள் வழங்கப்படாத நிலையில், அந்த வலிகளின் குரல்கள் அங்காங்கே ஒலித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், முஸ்லிம்களை நோக்கி இனவாதம் அதன் சுடரை விரியவிட்டு பல்வேறு அழிவு நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுக் கொண்டிருக்கிறது.

பௌத்த மத எழுச்சிக்காகப் செயற்படுகின்றோம் என்று கூறிக்கொள்ளும் பலசேனாக்கள் பௌத்த தர்மங்களைப் பற்றிப் பேசாமல் சிறுபான்மைச் சமூகங்களின் மத, கலாசார விடயங்களுக்கு மாசுகற்பித்துக் கொண்டும் குறிப்பாக கடந்த பல வருடங்களாக இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் கொச்சைப்படுத்திக்கொண்மிருக்கிறார்கள், இவ்வாறு செயற்படுவதுததான்; பௌத்த தர்மத்தின் எழுச்சிக்கு அவர்களால் புரியப்படும் பணியா எனக் கேட்கவேண்டியுள்ளது.

சுதந்திரத் தேசமொன்றில் வாழும் ஒரு இனத்தையும் இவ்வினத்தினர் பின்பற்றும் மதத்தினையும் நிந்தனை செய்வதுதான் பௌத்த மதத்தைக் காப்பாற்றும் செயல் என்றால் நற்காட்சி, நல்லெண்ணம், நன்மொழி, நற்செய்கை, நன்வாழ்க்கை, நன்முயற்சி, நற்கடைப்பிடி, நற்தியானம் என்ற பௌத்த மதம் போதிக்கும் எட்டு நெறிமுறைகளை இத்தகைய இனவாத சிந்தனைகொண்டோர் கடைபிடிக்கத் தேவையில்லையா?

பௌதத்த மதம் பெரும்பாலும், நற்செய்கைகளைச் செய்தல,; கெட்ட செயல்களை விலக்குதல், பொறாமை கொள்ளாதிருத்தல், சிறு உயிரைக் கூட துன்புறுத்தாதிருத்தல்;, மற்றவர்களுக்கு தீங்கிழைக்காதிருத்தல் போன்ற உயர்ந்த தத்துவங்களைக் கொண்டிருக்கிறது. இவ்வாறான பௌத்த மதத்தின் உயர்ந்த தத்துவங்களை புறந்தள்ளிவிட்டு பௌத்த மதத்தை வளர்ப்பதாகவும் பாதுகாப்பதாகவும் கூறிக்கொண்டு சிறுபான்மை மக்களை நெருக்கடிக்குள் தள்ளும் செயற்பாட்டில் சில பௌத்த துறவிகள் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறு செயற்படுகின்றவர்களால் எவ்வாறு பௌத்த மதம் பாதுக்கப்படும். இவர்களால் பௌத்த மதம் வளர்வதற்குப்பதிலாக அவை சிதைக்கப்படுமென்;றே கூற வேண்டும். பௌத்த மதத்தைப் பாதுகாக்கிறோம் என்று கூறிக்கொண்டு விஷத்தைக் கக்கும் இத்தகைய இனவாதிகளின் செயற்பாடுகளில் எவ்வித உண்மைத்தன்மையுமில்லை என்பதை பல பௌத்த சிங்கள மக்கள் புரிந்திருக்கிறார்கள். இனவாததத்திற்கு எதிராகவும் இன ஒற்றுமையை வலியுறுத்தியும் பௌத்த சிங்கள மக்கள் மத்தியிலுள்ள பலர் குரல் எழுப்பிக் கொண்டும். அவற்றுக்காக களத்தில் இறங்கி செயற்பட்டுக்கொண்டுமிருக்கிறார்கள். இத்தகையோருடன் கைகோர்த்து செயற்பட வேண்டியது தமிழ் பேசும் சிறுபான்மையினரின்; தார்மீகப் பொறுப்பாகும்.

ஏறக்குறைய ஒரு கோடி ஐம்பது இலட்சம் பௌத்த சிங்கள மக்கள் மத்தியில் புறக்கணிக்கத்தக எண்ணிக்கை கொண்ட இனவாத சிந்தனையுடையோரின் செயற்பாட்;டுக்கு ஒரு சில அரசியல்வாதிகளும் சில ஊடக முகாமைத்துவமுமே ஒத்தாசை வழங்கி அவர்களின் செயற்பாடுகளுக்கு ஊக்கமளித்து வருகிறார்களே தவிர, ஏனைய பௌத்த சிங்கள மக்கள் இந்நாட்டில் வாழும் ஏனைய தமிழ் முஸ்லிம் கிறிஸ்தவ மக்களுடன் நல்லிணக்கத்துடன் வாழவே விரும்புகின்றனர் என்பதை அவர்களின் கருத்துக்களிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், சிறுபான்மையினர் பக்கம் உள்ள நியாயங்கள் பெரும்பாலான பௌத்த சிங்கள மக்களைச் சென்றடையவில்லை என்பது வலிறுத்திக் கூறப்பட வேண்டிதொன்றாகும்.

கடந்த மாத இறுதியில் ஏற்பட்ட பேரனர்த்தத்தின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதில் இனப் பாகுபாடு காட்டாது ஒரு இனத்தினர் மற்றுமொரு இனத்தினருக்கு உதவிக்கரம் நீட்டியதை காண முடிந்தது. இச்சந்தர்ப்பத்தில் கூட பொதுபலசேனாக்கள் ஏனைய மதத்தினரின் மதநம்பிக்கைளை கொச்சைப்படுத்தி குரல்பதிவுகளை வெளியிட்டனர் என்பதுவும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. இவ்வாறு இனவாத சிந்தனையுடன் செயற்படும் இவர்களினதும் இவர்களுக்கு உதவிபுரிவோரினதும் நடவடிக்கைகளை மழுங்கடிக்க வேண்டுமாயின் நல்லிணக்கத்துடன் வாழ விரும்பும் பௌத்த சிங்கள மக்களையும் இணைத்துக்கொண்டு இந்த இனவாதிகளின் இனவாதச் செயற்பாடுகளுக்கு எதிராகச் செயற்பட வேண்டிதும் அதற்காக இன ஒற்றுமையை பலப்படுத்த வேண்டியதும் காலத்தின் கட்டாயமாகும்.

இனவாதத்துக்கெதிரான இன ஒற்றுமையில் தமிழ் முஸ்லிம் மக்களின் ஒற்றுமையானது காலத்தின் தேவையாகவுள்ளது. குறிப்பாக 1990களின் பின்னர் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் முஸ்லிம் மக்களிடையே காணப்படும் இன ஒற்றுமையை சீர்குலைப்பதற்கான சதித்தித்திட்டங்கள் அங்காங்கே இடம்பெறுவதைக் காண முடிகிறது. தமிழ் பிரதேசமொன்றில் அல்லது முஸ்லிம் பிரதேசமொன்றில் இடம்பெறுகின்ற சிறுவர் துஷ்பிரயோகம் போன்ற விடயங்களை இனவாதச் சாயமிட்டு அவற்றை பற்றி எரிய வைக்க ஒரு சிலர் முயற்சி செய்து வருவதாக பேசப்படுகிறது.

அத்தகையவர்களினால் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்படும் இனவாதக் கருத்துக்கள் அவற்றைத் தெட்டத்தெளிவாகப் புலப்படுத்துகிறது. தமிழ், முஸ்லிம் சிறுபான்மை இனங்களின் இன உறவு சீர்குலைமாயின் இனவாத சிந்தனைகொண்டோரின் செயற்பாடுகளை மிக இலகுவாக முன்நகர்த்துவதற்கும் அவர்களின் இலக்குகளை அடைந்து கொள்வதற்குமான கதவுகள் இலகுவாக திறந்து கொள்ளப்படும் என்பதை இரு சிறுபான்மை இனங்களும் புரிந்;து செயற்படுவது அவசியமாகும்.

சிறுபான்மையினரின் ஒற்றுமையும் சூழ்நிலையும்

ஒன்றுமை என்பது ஓரு பேராயுதம். எந்தவொரு சமூகமோ அல்லது சமூகங்களோ ஒற்றுமையுடன் தங்கள் தங்கள் செயற்பாடுகளை முன்னெடுக்கின்றபோதுதான் எதையும் சாதித்திட முடியும். அந்த ஒற்றுமையின் வெளிப்பாடு கடந்த 2015 ஜனாதிபதித் தேர்தலில்; வெளிப்படுத்தப்பட்டது.

இலங்கையை பல நூற்றாண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்த மேற்குல ஆட்சியாளர்களிடமிருந்து மீட்டு, இந்நாட்டு மக்கள் சுதந்திரக் காற்றைச் சுவாசித்திட செய்த இந்நாட்டுப்பட்டாளர்கள்; இன, மத, மொழி பேதமின்றி ஒற்றுமையுடன் செயற்பட்டு சுதந்திரத்துக்காகப் போராடியதன் பயனாகவே இந்நாடு சுதந்திரம் பெற்றது. சுதந்திர இலங்கை உருவாகுவதற்கும் ஒற்றுமையே பேராயுதமாக அன்று பயன்படுத்தப்பட்டது.

இந்நாட்டில் வாழும் சிறுபான்மை சமூகமான தமிழ் பேசும் சமூகங்கள்; தங்களது உரிமைகளை தாங்கள் சுதந்திரமாக அனுபவிக்க வேண்டும் என்று அன்று கோரியபோது, அவற்றை வழங்க மறுத்த அன்றைய சிங்கள ஆட்சியாளரின் விரும்பத்தகாத நடவடிக்கைள் ஆயுதப்போராட்டத்தை நோக்கி நகரச் செய்த வரலாறு நம்முன் உள்ளது.

அதனால் ஏற்பட்ட அழிவுகளை இந்நாட்டில் வாழும் அனைத்து இனங்களும் அனுபவித்துள்ளன. அதில் அதிகம் அனுபவித்தது தமிழ் சமூகமாகும். அதன் வடுக்கல் இன்னுமே மாறாதுள்ளது. இந்த வடுக்களிலிருந்து பாதிக்கப்பட்ட மக்கள் இதுவரை மீள முடியாதுமுள்ளனர்.  அழிவுகள் அழிவுகளாகவேவுள்ள நிலையில, அன்று கோரப்பட்ட உரிமைககள் வழங்கப்படாது இன்றும் அதற்கான அரசியல் ரீதியான போராட்டம் முற்றுப்பெறாதுள்ளது.

சிறுபான்மையினமான தமிழ் சமூகத்தின் உரிமைப் போராட்டத்துக்கு தீர்வு கிடைக்கப்பெறாத நிலையில், இந்நாட்டில் வாழும் இன்னுமொரு சிறுபான்மை சமூகமான முஸ்லிம் சமூகத்தின் மீதும் இனவாதத்தின் கழுகுப் பார்வை திருப்பப்பட்டிருக்கிறது. சொல்லாலும் செயலாலும் தொடர்ச்சியான அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன

இச்சூழ்நிலையில்தான் சிறுபான்மை சமூகங்களுக்கிடையே ஒற்றுமையின் அவசியம் உணரப்படவேண்டியதொன்றாக நோக்கப்படுகிறது. எதிர்கால சிறுபான்மை சமூகத்தின் இருப்பு ஆரோக்கியமானதாக அமைய வேண்டுமாயின் இரு சமூகத்திற்கும் பொதுவான விடயங்களில் இரு சமூகத் தலைவர்களும் சிவில் அமைப்புக்களும் வேஷம் போடுவதை நிறுத்தி, வஞ்சம் தீர்ப்பதை மறந்து ஒரு சமூகம் மற்றொரு சமூகத்தின்  நலனை நிறைவேற்றுவதற்கும்; இனவாதத்திற்கு எதிராகச் செயற்படுவதற்குமான மனப்பாங்கை ஏற்படுத்தி ஒற்றுமைப்படுவது அவசியமாகவுள்ளது.

தமிழ்பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் தமிழ்பேசும் மக்களுக்கு நன்மை கிடைக்கும் விடயத்தில் குறைக்கண்டு அவற்றை விமர்சனம் செய்து வெற்றுக்கோஷங்கள் கொண்ட ஊடக அறிக்கைகளை விட்டு இரு இனங்களுக்கிடையிலும் சந்தேகங்களை உருவாக்கி சுயநல அரசியல வியாபாரம் செய்யும் இரு இனத்தினதும் அரசியல்வாதிகளின் பின்னால் மக்கள் செல்வதைத் தவிர்ப்பதும் அவசியமாகவுள்ளது.

இந்த அவசியத்திற்கான மாற்றம் இரு சமூகங்களிலும் ஏற்படுத்தப்பட வேண்டும். ஒரு ஆட்சி மாற்றத்திற்காக வாக்குகளைப் பயன்படுத்திய தமிழ் பேசும் சமூகங்கள், சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக முன்நகர்த்தப்படும் இனவாதச் செயற்பாடுகளுக்கு எதிராகவும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டிய தேவையை அவசரமாக உணர வேண்டியுள்ளது. அத்தோடு, தங்களுக்குள்ள பொதுவான பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொள்ள விட்டுக்கொடுப்புடனும்;, புரிந்துணர்வுடனும் செயற்படுவதற்கும்; முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதும் சமகாலத் தேவையாகக் கருதப்படுதல் வேண்டும்.

ஏனெனில், ஒரு சில விடயங்களை பூதாகரமாக்கி தமிழ் முஸ்லிம் பிரதேசங்களில் அமைதியின்மை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதை அவதானிக்க முடிகிறது. கடந்த வாரத்தில் மூதூர் பெரிய வெளியில் மூன்று சிறுமிகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவமும் அதனைத் தொடர்ந்து அப்பிரதேசங்களில் ஏற்பட்ட பதற்ற நிலையும் திருகோணமலை பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் தாக்குதல் சம்பவமும் இம்மாவட்டத்தில் அமைதியின்மையை உருவாக்கியிருப்பதை அவதானிக்க முடிகிறது.

இந்நிலையில், நாட்டில் அங்கங்கே இடம்பெறும் சிறுவர் துஷ்பிரயோகச் செயற்பாட்டுக்கு குரல் கொடுக்காத  பொதுபலசேனை மூதூர் பெரியவெளி பிரதேச சிறுமிகளுக்கு நியாயம் கிடைக்க வேண்டும.; சட்டம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குரல்கொடுத்திருப்பது குறித்தும் இரு சமூகங்களும் கவனத்திற்கொள்ள வேண்டியதும் அவசியமாகும். ஒரு சமூகத்தின் அமைதியைக் கெடுத்து நெருக்கடிக்குள்தள்ளி இன்பம் அனுபவிக்கின்ற பொதுபலசேனாக்களுக்கு எதிராக சட்டம் அதன் கடமையைச் செய்ய முனைகின்றபோது அதனை எதிர்க்கும் அல்லது சட்டத்தை மதிக்காது செயற்படும் இத்தகையவர்களின் முதலைக் கண்ணீரின் பின்னணி குறித்தும் இரு சமூகங்களும் நிதானமாகச் செயற்பட வேண்டியதும் காலத்தின் கட்டாயமாகும்.

இரு சமூகங்களின் ஒற்றுமையின் பலம்தான் வடக்கு, கிழக்கின் அமைதிக்கு அதி முக்கியமாகும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லாத நிலையில,; இச்சம்பவங்களுக்கு இனவாதச் சாயமிட முனைவர்கள் தொடர்பில் இருசமூகமும் கவனம் செலுத்துவதும் காலத்தின் தேவையாகவுமுள்ளது.

இருப்பினும், குற்றம் இழைத்தவர்கள் யாராக இருந்தாலும் எந்தச் சமூகத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு எதிராகச் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திடமுள்ளது. சட்டம் யாவருக்கும் சமம் என்ற தத்துவதத்துக்கு உயிர் ஊட்டவேண்டிய பொறுப்பும் அரசேயே சாரும்.

ஒரு தேசிய இனத்தின் இனத்துவ அடையாளங்களை அழிப்பதற்கு, அல்லது அந்த இனம் தமது தனித்துவ அடையாளங்களை வெளிக்காட்டக் கூடாது என அச்சுறுத்துவதற்கு யாருக்கும் உரிமையில்லாத போது, பொதுபலசேனா போன்ற கடும்போக்காளர்கள் ஒரு தேசிய இனத்தின் இனத்துவத்துக்கெதிராக தொடர்ச்சியான நெருக்குவாரங்களையும் அடாவடித்தனங்களையும் புரிந்துகொண்டு வருவதை சட்டம் சும்மா பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. சட்டத்தை நிறைவேற்றுவதில் காலம் தாழ்த்தப்படுவது பல சந்தேகங்களை ஏற்படுத்திவிடும். அதன் விளைவு இந்த அரசை சிக்கலுக்குள் தள்ளிவிடவும் நேரிடும். 

இதன் எதிரொலியாக, சிறுபான்மை இன மக்களுக்கு எதிராக இந்நாட்டில் இடம்பெற்றுவரும் செயற்பாடுகள் சர்வதேசத்தின் பார்வை ஈர்த்துள்ளது. இவ்வாரத்தில் ஐ.நா சபையில் நடைபெறவுள்ள பொருளாதாரம், சமூக மற்றும் கலாசார உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புக்குழுவின் மீளாய்வின் போது இலங்கையில் அண்மைக்காலமாக முன்னெடுக்கப்படுகின்ற சிறுபான்மை இனத்த்துக்கெதிரான செயற்பாடுகள தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையை உருவாகுவதற்கு குற்றம் இழைத்தவர்களுக்கு எதிராக சட்டம் அதன் கடமையை உரிய நேரத்தில் செய்யத் தவறிமையே காரணம் என்று கூறுவதில் தவறிருக்காது.

சட்டத்தின் பொறுப்பும் எதிர்பார்ப்பும்

ஒரு நிறுவன அமைப்புமுறையால் அந்நிறுவன ஆளுமை எல்லைக்குள் வாழும் அனைவரையும் ஒழுங்குபடுத்தும் விதிகள், நெறிமுறைகள் போன்றவற்றைக் குறிக்கும.; ஒரு குறிப்பிட்ட செயல் அல்லது செயல் தவிர்ப்பு குறித்த தண்டனை வழங்குகிற அதிகாரத்தை தன்னகத்தே கொண்டிருக்கும் தனித்தன்மை கொண்டதுதான் சட்டம்.

மனிதனை மனிதனாய் வாழ வைக்கவும் மற்றும் நிறுவனங்களின் முறைப்படுத்தப்பட்ட இயக்கத்திற்கும் சட்டம் தேவை. அனைவரும் சுதந்திரமாகவும் பாதுகாப்புடனும் நீதியுடனும், சமமாகவும், உரிமைகளோடும், அமைதியாகவும் வாழ்ந்திட சட்;டம் வழிவகை செய்கிறது.

குற்றம் விளைவித்தால்  அந்தக் குற்றத்திற்கு தண்டனை வழங்க இந்நாட்டில் சட்டம் இருக்கிறது. ஏனெனில் சட்டத்தின்முன் எல்லோரும் சமமானவர்கள். ஆனால் குற்றம்; செய்தார்கள், குற்றம் செய்யத் தூண்டினார்கள் என்று நீதியையும் நியாத்தையும் சட்டவரம்புகளையும் மதிக்கின்றவர்களால் சுட்டிக்காட்டப்படுபவர்கள் சட்டத்தினால் இதுவரை ஏன் தண்டிக்கப்படவில்லை என்பதே மர்மமாகவுள்ளது.

சட்டத்தை நடைமுறைப்படுத்தி, குற்றமிழைத்தவர்களை அல்லது குற்றம் புரியத் தூண்டியவர்களை கைது செய்து தண்டனை வழங்க, சட்டத்தை நிறைவேற்றுக்கின்ற மன்றங்கள் இருந்தும் கூட, இத்தகையவர்கள் சுதந்தரிமாக உலாவுவதும் இனவாதக் கருத்துக்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வருவதும் மனித உரிமைகளையும் சட்டத்தையும் மதிக்கின்றவர்களின் உள்ளங்களில் வேதனையை உருவாக்கியுள்ளது.

அது மாத்திரமின்றி, எவ்வித அதிகாரமுமில்லாத அல்லது நிழல் அதிகாரத்துடன் செயற்படுவதாக் கூறப்படுகின்ற இனவாத அமைப்புக்கள் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு குற்றமிழைவித்தவர்களைத் தண்டிப்பதற்கு முற்படும் நிலை இந்த நாட்டில் ஏற்பட்டிருப்பதானது,  சட்டமும் நீதியும் சாகாது வாழ்ந்து கொண்டிருக்கும் இநத ஜனநாயக நாட்டில், ஜனநாயகத்தை நேசிகின்ற, சட்;டத்தையும் நீதியையும் மதிக்கின்றவர்களை இரத்தக் கண்ணீர் வடிக்கச் செய்துள்ளது. அண்மையில் கடுகண்ணாவை தென்துர பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர் ஒருவரினால் முகநூலில் புத்தபெருமானனைப் பற்றி பதிவேற்றப்பட்ட பதிவுக்காக இவ்வூரையை அச்சத்துக்குள் ஆழ்த்துவதற்கு சிலரினால் சட்டம் கையில் எடுக்கப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு எதிராக சட்டம் அதன் கடமையைச் செயயாத நிலையில் இவ்விளைஞனுக்கு எதிராக சட்டம் அதன் கடமையைச் செய்திருக்கிறது. ஆனால் வெளிப்படடையாக குற்றம் புரிந்து கொண்டு அல்லது குற்றம் புரிவதற்கு தூண்டிக்கொண்டிருப்பவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படாதுள்ளனர். சட்டத்தின் முன் யாவரும் சமம் என்ற தத்துவம் யாருக்கா என்ற கேள்விக்கு யார் பதிலளிப்பது.

இந்நிலையில,; பொதுபலசேனாவின்  செயலாளர் ஞானசாரரை எப்படியேனும் பொலிசார் கைது செய்வர் என பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளதாக சில இணையச் செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. இருப்பினும், அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கையில் ஏற்பட்டுள்ள காலதாமதம் ஏன் என்ற கேள்விக்கு இன்னும் உரிய தரப்புக்களிடமிருந்து பதிலில்லாமல் உள்ளதையும் சுட்டிக்காட்ட வேண்டும்.

2007ஆம் ஆண்டின் 56ஆம் இலக்க குடியியல் மற்றும் அரசியல்  உரிமைகள் மீதான சர்வதேச உடன்பாட்டொழுங்கு சட்டத்தின் 3ஆம் பிரிவானது ஆளெவரும் போரைப் பரப்புவதோ அல்லது பாரபட்சத்தை, எதிர்ப்பு உணர்ச்சியை அல்லது வன்முறையைத் தூண்டுவதாக அமையும் தேசிய, இன அல்லது மத ரீதியிலான பகைமைய ஆதரித்தலோ ஆகாது எனக் குறிப்பிடுகிறது.

அத்துடன், குற்றம் புரிவதற்கு எத்தனிக்கும், அதனைப் புரிவதில் உதவி புரியும் அல்லது உடந்தையாயிருக்கும் அல்லது புரியப்போவதாக அச்சுறுத்துகின்ற ஒவ்வொருவரும் இச்சட்;டத்தின் கீழ் தவறொன்றுக்குக் குற்றவாளியாதல் வேண்டுமென இச்சட்டம் சுட்டிக்காட்டுகிறது

இவ்வாறு சட்டம் உள்ள நிலையில், அச்சட்டமானது அதன் பொறுப்பை காலதாமதமின்றி நிறைவேற்றுமாயின,; இன ஒற்றுமைக்கும் சமூக சகவாழ்வுக்கும் நாட்டின் அமைதிக்கும் பங்கம் ஏற்படாது பல்லாண்டு காலங்கள் இந்த நாட்டில் இனவுறவுடன் சகல இனங்களும் தங்களுக்குரிய இனத்துவ உரிமையுடன் நிம்தியாக வாழ வழிவகுக்கும்..

இந்நாட்டில் இனவுறுவுடன் நிம்மதியாக அனைத்து இனங்களும்; வாழ வேண்டுமாயின் இனவாதத்திற்கு எதிரான இன ஒற்றுமை அவசியமாகவுள்ளது. அத்தோடு இனவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள பொதுபலசேனாக்களின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், குறித்த நபர்களுக்கு எதிராக சட்டம் அதன் கடமையைச் செய்வதற்கும்  இன ஒற்றுமையினூடாக உரிய தரப்புக்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட  வேண்டியதும் காலத்தின் கட்டாயமாகும்.

வீரகேசரி – 06.06.2017

 
இனவாதத்துக்குகெதிரான இன ஒற்றுமை .. இனவாதத்துக்குகெதிரான இன ஒற்றுமை .. Reviewed by Madawala News on 6/08/2017 12:45:00 AM Rating: 5