tg travels

முஜீபுர் ரஹ்மான் எம் பிக்கு அஸ்கிரிய பீடம் கண்டனம்..


கொழும்பு மாவட்ட பா உறுப்பினர் முஜீபுர் ரஹ்மானுக்கு அஸ்கிரிய பீடம் கண்டனம் வெளியிட்டுள்ளது.

அஸ்கிரிய பீடத்தின் பிரதம செயலாளர் தம்மானந்த தேரர் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு இந்த கண்டனத்தினை வெளியிட்டுள்ளார்.

கடந்த வாரம் சிரிகொத்தவில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அமைச்சர் ரங்கே பண்டார விமல் வீரவன்ச சுத்தோதான மன்னரின் மகனை போன்று தற்போது பேசுவதாக குறிப்பிட்டிருந்தார். சுத்தோதான மன்னர் கவுதம புத்தரின் தந்தையாவார்.

குறித்த ஊடக மாநாட்டில் கருத்து வெளியிட்ட முஜீப் ரஹ்மான் எம்பி அமைச்சர் ரங்கே பண்டார சுட்டிக்காட்டிய அதே விடத்தை கூறியிருந்த நிலையில் முஜீப் ரஹ்மான் விமல் வீரவன்சவை புத்தருக்கு ஒப்பிட்டு பேசிவிட்டார் என்ற ரீதியில் விமர்சனம் எழுந்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் தற்போது சிலரால் சர்ச்சை கிளப்பிவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது ..

முஜீபுர் ரஹ்மான் எம் பிக்கு அஸ்கிரிய பீடம் கண்டனம்.. முஜீபுர் ரஹ்மான் எம் பிக்கு அஸ்கிரிய பீடம் கண்டனம்.. Reviewed by Madawala News on 6/28/2017 02:04:00 AM Rating: 5