tg travels

வெள்ள அனர்த்தங்களில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஈரான் இஸ்லாமிய குடியரசு உயவிக்கரம்


வெள்ள அனர்த்தங்களில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஈரான் இஸ்லாமிய குடியரசு உயவிக்கரம்
நீட்டியுள்ளது.

முதற்கட்டமாக வெள்ள அனர்த்தத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாத்தறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு உலர் உணவு உள்ளிட்ட அத்தியவசிய பொருட்கள் கையளிக்கப்பட்டன.

இதற்கு அமைவாக கொடபிடிய ஜும்மா பள்ளிவாயல் கொடபிடிய விகாரை ஆகியவற்றுக்கு தலா ஒரு லொறி பொருட்களும் அகுரஸ்ஸ கிராம மக்களுக்கு ஒரு லொறி பொருட்களும் கையளிக்கப்பட்டன.

உதவிப்பொருட்கள் கையளிக்கும் நிகழ்வில் ஈரான் இஸ்லாமிய குடியரசு உயர் ஸ்தானிகள் காரியாளயம் சார்பாக அந்த தூதரக அதிகாரி அலி காஸிமி கலந்து கொண்டிருந்த அதேவேளை சட்டத்தரணி ரமீஸ் பஷீர்,சாதாத் முஸ்லிம் மஹாவித்தியாலய அதிபர் வஸீர் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது  ஈரான் நாட்டு தூதரக அதிகாரி  வெள்ள அணர்த்தத்தில் முற்றாக பாதிக்கப்பட்ட சாதாத் முஸ்லிம் மஹாவித்தியாலயத்தையும் பார்வையிட்டார்.
வெள்ள அனர்த்தங்களில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஈரான் இஸ்லாமிய குடியரசு உயவிக்கரம் வெள்ள அனர்த்தங்களில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஈரான் இஸ்லாமிய குடியரசு உயவிக்கரம் Reviewed by Madawala News on 6/03/2017 07:59:00 PM Rating: 5