Kidny

Kidny

ஞானசார தேரருக்காக பொலிஸார் சட்டத்தை வளைத்தது இவ்வாறுதான் ..


தமிழ் – சிங்­கள புதுவருடம் தொட்டு நாட்டை இன­வா­தத்தால் மீண்டும் ஆட்டம் காணச் செய்த ஞான­சார தேரர் கடந்த மே மாத இறு­தியில் ஓடி ஒளிந்­து ­கொண்டார். சட்­டத்தின் பிடிக்கு பயந்து கடந்த மாத இறு­தியில் மாய­மான ஞான­சார தேரர் திடீ­ரென நேற்­று­ முன்­தினம் கோட்டை நீதி­மன்றில் ஆஜ­ரானார். இடை­ந­டுவில் என்ன நடந்­தது என்­பது யாருக்கும் தெரி­யாது அல்­லது திட்­ட­மிட்டு மறைக்­கப்­பட்­டது என்றே கூற வேண்டும்.


இந்­நா­ட­கத்தில் பொலி­ஸாரின் பங்கு அளப்­ப­ரி­யதே. நாட்டில் இன­வா­தத்தை ஞான­சார தேரர் தூண்­டு­கின்­ற­மைக்கு எதி­ராக அமைச்சர் ரிஷாட் பதி­யுதீன், பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான், முன்னாள் மாகாண சபை உறுப்­பினர் அஸாத் சாலி மற்றும் அன்வர் மன­துங்க உள்­ளிட்ட பலர் ஞான­சார தேர­ருக்கு எதி­ராக பொலிஸ் தலை­மை­ய­கத்தில் முறைப்­பா­ட­ளித்­தனர்.

இது தவிர ஏற்­க­னவே ஞான­சார தேர­ருக்கு எதி­ரான வழக்கு விசா­ர­ணைக்கு அவர் நீதி­மன்றில் ஆஜ­ரா­காத குற்­றச்­சாட்­டு­களும் இருந்­தன. இவ்­வா­றான குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு அமைய பொலிஸார் நான்கு விஷேட குழுக்­களை அமைத்து ஞான­சார தேரரை கைது செய்ய தேடுதல் வேட்­டையில் ஈடு­பட்­டனர். அத்­தோடு அவ­ருக்கு இரு பிடி­வி­ராந்­து­க­ளையும் விதித்­தது.


என்னும் இது எவை­யுமே பலிக்­க­வில்லை. கடை­சியில் ஞான­சார தேரர் நீதி­மன்றில் ஆஜ­ராகாமை பொலி­ஸா­ருக்கு தோல்­வியே என அறிக்கை விட்­டனர்.அவர் நீதிமன்றில் ஆஜ­ரா­ன­ பின்னர் என்ன நடந்­தது, சட்­டத்தின் கடமை எப்­படி அமைந்­தி­ருந்­தது என்­பதை இனி பார்ப்போம். 


பொது­பல சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேர­ருக்கு எதி­ராக கோட்டை நீதிவான் நீதி­மன்­றினால் விடுக்­கப்­பட்ட பிடி­யாணை அவர் அங்கு சர­ண­டைந்­ததைத் தொடர்ந்து மீளப்­பெ­றப்­பட்டு பிணை வழங்­கப்­பட்­டது. அத்­துடன் திட்­ட­மிட்ட குற்­றங்கள் தடுப்புப் பிரி­வினால் புதுக்­க­டையில் உள்ள கொழும்பு பிர­தான நீதிவான் , 4 ஆம் இலக்க மேல­திக நீதிவான் நீதி­மன்றம் ஆகி­ய­வற்றில் தாக்கல் செய்­யப்­பட்ட வழக்­குகள் தொடர்பில் கடந்த புத­னன்று அந்­தந்த நீதி­மன்­றங்­களில் விசா­ர­ணைகள் இடம்­பெற்­றன.


கோட்டை நீதி­மன்றில் சர­ண­டைந்த ஞான­சாரர்
அல்­குர்­ஆனை அவ­ம­தித்து கருத்து வெளி­யிட்­டமை, ஜாதி­க­பல சேனாவின் ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பினுள் அத்­து­மீறி புகுந்து கலகம் விளை­வித்­தமை தொடர்பில் கோட்டை நீதி­மன்றில் இடம்­பெற்று வரும் வழக்கில் ஆஜ­ரா­காத பொது­பல சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரரை உட­ன­டி­யாக கைது செய்து மன்றில் ஆஜர் செய்­யு­மாறு கோட்டை நீதி­மன்றம் கடந்த 15 ஆம் திகதி  உத்­த­ரவு பிறப்­பித்­தது.


770/14, 758/14 ஆகிய வழக்­கெண்­களைக் கொண்ட இரு வழக்­குகள் தொடர்­பி­லேயே கோட்டை நீதிவான் லங்கா ஜய­ரத்ன  இந்த உத்­த­ரவைப் பிறப்­பித்தார். அதன்­படி ஞான­சார தேரரைக் கைது செய்ய இரு வழக்­குகள் தொடர்­பிலும் தலா ஒவ்­வொரு பிடி­யாணை வீதம் இரு பிடி­யா­ணைகள் பிறப்­பிக்­கப்­பட்­டன.


2014.04.09 ஆம் திகதி கொம்­பனி வீதி நிப்பொன் ஹோட்­டலில் நடை­பெற்ற ஜாதி­க­பல சேனாவின் ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பினுள் அத்து மீறி நுழைந்து, அதனைக் குழப்­பி­யமை, திட்­ட­மிட்ட அத்துமீறல் மற்றும் தாக்­குதல் உள்­ளிட்ட 8 குற்­றச்­சாட்­டுகள் ஞான­சார தேர­ருக்கும் மேலும் 6 சந்­தேக நபர்­க­ளுக்கும் எதி­ராக சுமத்­தப்­பட்­டுள்­ளன. இதனை விட 2014.04.12 அன்று கொம்­பனி வீதி பொலிஸ் நிலை­யத்­துக்கு முன்­பாக ஊட­கங்கள் முன்­னி­லையில் இஸ்­லாத்­தையும் குர்­ஆ­னையும் அவ­ம­திக்கும் வித­மா­கவும் நிந்­திக்கும் வித­மா­கவும் கருத்­துக்­களை வெளி­யிட்­டமை தொடர்பில் ஞான­சார தேர­ருக்கு எதி­ராக மட்டும் பிரி­தொரு வழக்கும் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது.


இந்த இரு வழக்­கு­க­ளிலும் பிடி­யாணை பிறப்­பிக்­கப்­பட்ட நிலையில், நேற்­று­முன்­தினம் புதன்­கி­ழமை 10.18 மணிக்கு கல­கொட அத்தே ஞான­சார தேரர் கோட்டை நீதிவான் நீதி­மன்றில் சர­ண­டைந்தார். கல­கொட அத்தே ஞான­சார தேரர் அங்கு சர­ண­டையும் போது சுமார் நூற்­றுக்கும் அதி­க­மான தேரர்கள் நீதி­மன்ற வளா­கத்தில் ஒன்று கூடி­யி­ருந்­தனர்.


இந் நிலையில் சட்­டத்­த­ரணி சுதர்­ஷனீ குண­ரத்­னவின் இடை­யீட்டு மனு­வுக்கு அமைய ஞான­சார தேரரின் விவ­கா­ரத்தை கோட்டை நீதிவான் லங்கா ஜய­ரத்ன விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொண்டார்.இதன்போது ஞான­சார தேரர் சார்பில் மன்றில் முன்­னி­லை­யான ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி டிரந்த வல­லி­யத்த, உயிர் அச்­சு­றுத்தல் கார­ண­மாக ஞான­சார தேரர் மன்றில் ஆஜ­ரா­க­வில்லை எனவும் உரிய தவ­ணையில் ஆஜ­ரா­காமை தொடர்பில் பிறப்­பிக்­கப்­பட்­டுள்ள பிடி­யா­ணையை மீளப்­பெ­று­மாறும் நீதி­மன்றை கோரினார்.


இந்நிலையில் இரு வழக்கு தொடர்­பி­லான முன்­னைய ஆவ­ணங்­களை பரி­சீ­லனை செய்த கோட்டை நீதிவான் லங்கா ஜய­ரத்ன, ஒரு வழக்கில் இது­வரை ஞான­சார தேரர் தவ­றாது மன்றில் ஆஜ­ரா­கி­யுள்­ள­தாக சுட்­டிக்­காட்­டினார். மற்­றைய வழக்கில் ஒரு தவ­ணை­யி­லேயே மன்றில் ஆஜ­ராக தவ­றி­யுள்­ள­தா­கவும் அந்த வழக்கில் மறு­நாளே அவர் ஆஜ­ராகி, ஆஜ­ரா­கா­மைக்­கான கார­ணத்தை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ள­தா­கவும் குறிப்­பிட்டார்.


இந்த நிலை­மையை அவ­தா­னத்தில் கொண்டு குறித்த இரு வழக்­கு­க­ளிலும் ஞான­சார தேர­ருக்கு ஏற்­க­னவே வழங்­கப்­பட்­டி­ருந்த பிணை நிபந்­த­னை­களின் அடிப்­ப­டை­யி­லேயே செல்ல நீதிவான் லங்கா ஜய­ரத்ன அனு­ம­தி­ய­ளித்தார். அத்­துடன் அவ்­விரு வழக்­கு­க­ளிலும் விதிக்­கப்­பட்ட பிடி­யா­ணையை மீளப்­பெற்ற நீதிவான் வழக்கின் தவ­ணை­களில் தவ­றாது ஆஜ­ரா­கும்படி ஞான­சார தேர­ருக்கு எச்­ச­ரிக்கை விடுத்து வழக்கை எதிர்­வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திக­திக்கு ஒத்தி வைத்தார்.


ஓ.சி.பி.டி. யில் முன்­னி­லை­யான ஞான­சார தேரர்
கோட்டை நீதி­மன்றில் பிணை­பெற்ற பின்னர் ஞான­சார தேரர் நேராக புறக்­கோட்டை மிஹிந்து மாவத்­தையில் உள்ள ஓ.சி.பி.டி. எனப்­படும் திட்­ட­மிட்ட குற்­றங்கள் தடுப்புப் பிரி­வுக்கு வாக்­கு­மூலம் அளிக்கச் சென்றார். இதன் போது அங்கு ஞான­சார தேரரை விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­திய பொலிஸார் அவரை இரு வழக்­குகள் தொடர்பில் கைது செய்­தனர். 


73854, 73465 ஆகிய இலக்­கங்­களைக் கொண்ட புதுக்­கடை 4 ஆம் இலக்க நீதிவான் நீதி­மன்றம் மற்றும் கொழும்பு பிர­தான நீதிவான் நீதி­மன்றம் ஆகி­ய­வற்றில் உள்ள வழக்­குகள் தொடர்­பி­லேயே அவர் இவ்­வாறு கைது செய்­யப்­பட்டார்.


குற்றம் தொடர்­பி­லான பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்­டத்­த­ரணி கமல் சில்­வாவின் கீழ் செயற்­பட்ட திட்­ட­மிட்ட குற்­றங்கள் தொடர்­பி­லான பொலிஸ் பிரிவின் பணிப்­பாளர் பொலிஸ் அத்­தி­யட்­சகர் பிரி­யந்த லிய­னகே, பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் ஜனக குமார ஆகியோர் அடங்­கிய குழு­வினர் ஞான­சார தேரரைக் கைது செய்­தனர்.


புதுக்­கடை நீதி­மன்றில் ஆஜர்
கைது செய்­யப்­பட்ட ஞான­சார தேரர் பொலிஸார் ஊடாக புதுக்­க­டையில் அமைந்­துள்ள நீதி­மன்ற வளா­கத்­துக்கு அழைத்து வரப்­பட்டார். இதன் போதும் பெரு­ம­ள­வான பெளத்த தேரர்கள் நீதி­மன்ற வளா­கத்தில் ஒன்று கூடினர்.


மேல­திக நீதிவான் முன்­னி­லையில் ஆஜர்
இவ்­வாறு நீதி­மன்­றுக்கு அழைத்து வரப்­பட்ட கல­கொட அத்தே ஞான­சாரர் கொழும்பு மேல­திக நீதிவான் புத்­திக ஸ்ரீ ராகல முன்­னி­லையில் ஆஜர் செய்­யப்­பட்டார். முன்­ன­தாக ஐ.சி.சி.பி.ஆர். எனப்­படும் சர்­வ­தேச சிவில், அர­சியல் இணக்­கப்­பாட்டு சட்­டத்தின் விதி விதா­னங்­களின் பிர­காரம் இர­க­சிய, பாது­காக்­கப்­பட்ட பீ அறிக்கை ஒன்­றி­னூ­டாக இவ்­வ­ழக்கில் அறிக்கை சமர்ப்­பித்­தி­ருந்த பொலிஸார் நேற்று அந்த குற்­றச்­சாட்­டு­களை இடை­யீட்டு மனு­வொன்­றி­னூ­டாக தாக்கல் செய்த மேல­திக அறிக்கை ஊடாக மாற்­றி­ய­மைத்­தனர்.


அதன்­படி நேற்று பொலிஸ் உத்­தி­யோ­கத்­தரின் கட­மைக்கு இடை­யூறு விளை­வித்து அச்­சு­றுத்­தி­யமை தொடர்பில் மட்டும் ஞான­சார தேர­ருக்கு எதி­ராக இலங்கை தண்­டனை சட்டக் கோவையின் 140,183,186,344 ஆகிய அத்­தி­யா­யங்­களின் கீழ் குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­ப­டு­வ­தாக நீதி­மன்றில் முன்­னி­லை­யான பிரதிப் பொலிஸ் மா அதிபர் கமல் சில்வா நீதி­வா­னுக்கு அறி­வித்தார்.


இத­னை­ய­டுத்து நீதி­மன்றை விழித்த மேல­திக நீதிவான் புத்­திக ஸ்ரீ ராகல, ஞான­சார தேர­ருக்கு எதி­ராக முதலில் தாக்கல் செய்­யப்­பட்ட சிவில், அர­சியல் சர்­வ­தேச இணக்­கப்­பாட்டு சட்­டத்தின் கீழான குற்­றச்­சாட்­டு­களை பொலிஸார் விலக்­கிக்­கொண்டு தற்­போது தண்­டனை சட்டக் கோவையின் கீழ் சில குற்­றச்­சாட்­டு­களை முன்­வைத்­துள்­ளனர். பிணையை மறுக்க பிணைச் சட்­டத்தின் 14 ஆவது அத்­தி­யா­யத்தில் கூறப்­பட்­டுள்ள எந்த விட­யத்­தையும் பொலிஸார் முன்­வைக்­க­வில்லை.


குற்­றச்­சாட்­டு­களும் பிணை வழங்­கத்­தக்­கதே. பிணை வழங்க பொலிஸார் எந்த எதிர்ப்பும் இல்லை என்­கின்­றனர்.எனவே ஒரு இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான சொந்தப் பிணை­யிலும் ஒரு இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான ஒரு சரீரப் பிணை­யிலும் செல்ல ஞான­சார தேரரை அனு­ம­திக்­கிறேன் என நீதிவான் அறி­வித்து வழக்கை எதிர்­வரும் ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திக­திக்கு ஒத்­தி­வைத்தார்.


பிர­தான நீதிவான் முன்­னி­லையில் ஆஜர்
இத­னை­ய­டுத்து ஞான­சார தேரர் பொலன்­ன­று­வையில் வைத்து மத முரண்­பாட்டை தோற்­று­விக்கும் கருத்­து­களை வெளி­யிட்டார் என்ற குற்­றச்­சாட்டின் கீழ் 73465 எனும் வழக்கில் ஆஜர் செய்­யப்­பட்டார்.இதன் போது ஞான­சார தேர­ருக்கு எதி­ராக தண்­டனை சட்டக் கோவையின் 291 (அ), (ஆ) அத்­தி­யா­யங்­களின் கீழ் குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் 120 ஆவது அத்­தி­யா­யத்தின் கீழும் விசா­ரணை இடம்­பெ­று­வ­தா­கவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் கமல் சில்வா நீதி­மன்­றுக்கு அறி­வித்தார்.


இத­னை­ய­டுத்து 10 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணை­யிலும் 5 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான இரு சரீரப் பிணை­க­ளிலும் கல­கொட அத்தே ஞான­சார தேரர் செல்ல பிர­தான நீதிவான் லால் ரண­சிங்க பண்­டார அனு­ம­தித்தார்.அத்­துடன் ஞான­சார தேரரோ அவர் சார்ந்த பொது­பல சேனா அமைப்­பி­னரோ வேறு இன, மதங்­களைத் தூற்றும் வகையில், வெறுப்­பூட்டும் வகையில் கருத்து வெளி­யி­டு­வதில் இருந்து தவிர்ந்து இருக்­கு­மாறு கடு­மை­யாக எச்­ச­ரித்தார்.


சமா­தா­னத்­துக்கு குந்­தகம் ஏற்­ப­டுத்தும் செயல்­களில் ஈடு­பட்டால் அது தொடர்பில் உட­ன­டி­யாக பொலிஸார் நீதி­மன்றில் அறிக்கை தாக்கல் செய்ய உத்­த­ர­விட்ட நீதிவான் அவ்­வாறு அறிக்கை கிடைத்தால் பிணை ரத்­தாகும் என தெரி­வித்­த­துடன் வழக்கை ஆகஸ்ட் மாதம் 2 ஆம் திக­திக்கு ஒத்தி வைத்தார்.இத­னை­ய­டுத்து பிணை நிபந்­த­னை­களைப் பூர்த்தி செய்த ஞான­சார தேரர் நேற்­று­முன்­தினம் மாலை 4.15 மணி­ய­ளவில் நீதி­மன்றில் இருந்து வெளி­யேறிச் சென்றார்.


நீதி­வானின் அதி­ருப்தி
இது இப்­படி இருக்க, கல­கொட அத்தே ஞான­சார தேர­ருக்கு எதி­ராக பொலிஸார் முதலில் ஒரு ‘பீ’ அறிக்­கையை தாக்கல் செய்­தனர். "அந்த அறிக்­கையைப் பார்த்­த­போது நான் அதிர்ந்து போனேன். நாடே பற்றி எரியும் அள­வுக்கு அச்­சு­றுத்தும் வண்ணம் அதில் குற்­றச்­சாட்­டுகள் இருந்­தன. எனினும் இன்று இடை­யீட்டு மனு ஊடாக புதிய விட­யங்கள் கூறப்­பட்­டுள்­ளன. அந்த அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்ட ஒரு விட­ய­மேனும் இதில் கூறப்­ப­ட­வில்லை.


நாட்டில் இடம்­பெறும் விட­யங்­க­ளையோ தற்­போது நிலவும் நிலை­மை­யையோ கருத்தில் கொண்டு என்னால் தீர்­மானம் எடுக்க முடி­யாது. நீதி­மன்றில் தாக்கல் செய்­யப்­படும் கருத்­து­க­ளுக்கு அமை­யவே நான் தீர்­மா­னிக்க முடியும். நாட்டில் இடம்­பெறும் எந்­த­வொரு விடயம் தொடர்­பிலும் பொலி­ஸாரின் அறிக்­கையைக் கொண்டே நீதி­மன்றம் தீர்­மா­னங்­களை எடுக்கும்.


எனவே பொலிஸார் அது தொடர்பில் மிகத் தெளி­வாக இருக்க வேண்டும். இவ்­வா­றான ஒரு­வ­ருக்கு ஏன் பிணை அளித்­தீர்கள் என பொது மக்கள் நீதி­மன்­றையே தூற்­றுவர். பொலி­ஸாரின் நட­வ­டிக்­கையால் நீதி­மன்­றமே தலை குனிவைச் சந்­திக்கும். பொலி­ஸாரின் நட­வ­டிக்கை குறித்து மிகவும் கவ­லை­ய­டை­கின்றேன்" என கொழும்பு மேல­திக நீதிவான் புத்­திக ஸ்ரீ ராகல நேற்று முன்­தினம் புத­னன்று திறந்த நீதி­மன்றில் அறி­வித்தார்.


கல­கொட அத்தே ஞான­சார தேரர் தொடர்­பி­லான 73854 எனும் இலக்­கத்தைக் கொண்ட வழக்கு விசா­ர­ணையின் போதே பொலிஸார் சார்பில் ஆஜ­ரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் கமல் சில்­வா­விடம் கேள்விக் கணை­களைத் தொடுத்­த­வாறு நீதிவான் இவ்­வாறு தனது அதி­ருப்­தியை வெளிப்­ப­டுத்­தினார்.


ஞான­சார தேரர் மீது 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க சிவில், அர­சியல் தொடர்­பி­லான சர்­வ­தேச இணக்­கப்­பாட்டு சட்­டத்தின் கீழ் நீதி­வா­னுக்கு முன்­ன­தாக அறிக்கை சமர்ப்­பித்­தி­ருந்­தனர். அந்த அறிக்கை நேற்று முன்­தினம் புத­னன்று பொலி­சாரால் இடை­யீட்டு மனு­வொன்­றி­னூ­டா­கவே வலு­வி­ழக்கச் செய்­யப்­பட்டு புதிய குற்­றச்­சாட்­டு­களின் கீழ் புது அறிக்கை சமர்ப்­பிக்­கப்­பட்­டது.


முன்­ன­தாக சமர்ப்­பிக்­கப்­பட்ட அறிக்­கை­யா­னது பாது­காப்­பாக எவரும் பார்­வை­யிட முடி­யா­த­வாறு அப்­போ­தி­ருந்து நீதி­வானால் பாது­காக்­கப்­பட்டு வந்த நிலை­யி­லேயே நேற்­று­முன்­தினம் வழக்கு விசா­ரணை இடை நடுவே நீதிவான் தனது அதி­ருப்­தியை இவ்­வாறு வெளிப்­ப­டுத்­தினார்.ஞான­சார தேர­ருக்கு பிணை வழங்க எதிர்ப்பு இல்லை என பிரதி பொலிஸ் மா அதிபர் கமல் சில்வா குறிப்­பிட்ட நிலையில் நீதிவான் புத்­திக ஸ்ரீ ராகல பின்­வ­ரு­மாறு  கேள்விக் கணை­களைத் தொடுத்தார்.


''இதற்கு முன்னர் ஒரு ‘பீ’ அறிக்­கையை என்­னிடம் தாக்கல் செய்­தீர்கள். இர­க­சிய அறிக்கை என கூறி­னீர்கள். அதனால் அதனை பெட்­ட­கத்தில் வைத்து நான் பாது­காத்தேன். ஐ.சீ.சீ.பி.ஆர். சட்­டத்தின் கீழ் அதில் குற்­றச்­சாட்­டுக்கள் இருந்­தன. அதனை வாசித்த போது அதன் பார­தூ­ரத்தை என்னால் புரிந்­து­கொள்ள முடிந்­தது.நாடே பற்றி எரியும் வகையில் அதன் தன்­மையை நான் உணர்ந்தேன். எனினும் இன்று ( புத­னன்று) புதிய ‘பீ’ அறிக்­கையை சமர்ப்­பித்­தீர்கள். அதில் முதல் ‘பீ’ அறிக்­கையில் குறிப்­பிட்ட ஒரு விடயம் ஏனும் இல்லை. ஏன் இந்த இரண்டு வேஷங்கள் என கேள்வி எழுப்­பினார்.


இதன் போது பிரதிப் பொலிஸ் மா அதிபர் கமல் சில்வா, கனம் நீதிவான் அவர்­களே, உண்­மையில்  முன்­வைக்­கப்­பட்ட குற்­றச்­சாட்­டுகள் தொடர்பில் பொலிஸ் சட்டப் பிரிவு பிரதிப் பொலிஸ் மா அதி­ப­ரு­டனும் கலந்­து­ரை­யா­டிய பின்­ன­ரே நாம் இந்த புதிய அறிக்­கையை சமர்ப்­பித்தோம் என்றார்.


இதன் போது தொடர்ந்து பேசிய நீதிவான் புத்­திக ஸ்ரீ ராகல,ஞான­சார தேர­ருக்கு பிணை வழங்க நீங்கள எதிர்ப்பு எத­னையும் தெரி­விக்­க­வில்லை. சாதா­ரண ஒருவர் தொடர்பில் நீங்கள் இவ்­வாறு நடந்­து­கொள்­வீர்­களா? குற்றம் இடம்­பெற்ற இடத்தைப் பார்­வை­யிடச் சென்­ற­வரைக் கூட நீங்கள் கைது செய்து பிணை சட்­டத்தின் 14 ஆவது அத்­தி­யா­யத்தின் கீழ் பிணை வழங்க எதிர்ப்பு வெளி­யிட்டே ஆஜர் செய்­வீர்கள்.


இந்த வழக்கில் முதலில் நீங்கள் தாக்கல் செய்த ‘பீ ‘  அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்ட விட­யங்கள் அனைத்தும் பிணை வழங்க முடி­யாத மிகப் பார­தூ­ர­மான குற்­றங்கள். ஏன் அதில் உள்ள ஒன்று கூட இந்த அறிக்­கையில் இல்லை. அவற்­றுக்கு சாட்­சிகள் இல்­லையா. இல்லை எனில் ஏன் அப்­படி ஒரு ‘பீ’ அறிக்­கையை சமர்ப்­பித்­தீர்கள்.


நள்­ளி­ரவு 12.00 மணிக்கு என்னை எழுப்பி நீங்கள் அவ­சர விடயம், அபா­ய­க­ர­மான விடயம் எனக் கூறித் தானே அந்த ‘பீ’ அறிக்­கையை சமர்ப்­பித்­தீர்கள்.உங்­களில் ஒரு­வரின் தொப்­பியைக் கழற்­றி­ய­தா­கவும், சீரு­டையைப் பிடித்து இழுத்­த­தா­கவும் தள்­ளி­விட்­ட­தா­கவும் நீங்­கள்­தானே கூறி­னீர்கள். ஏன் அது ஒன்றும் இந்த புதிய ‘பீ’ அறிக்­கையில் இல்லை.அந்த ‘பீ’ அறிக்­கையில் உள்ள வார்த்தைப் பிர­யோ­கங்­களைப் பார்த்த போது நாடே கொளுந்­து­விட்டு எரியும் அபாயம் காணப்­பட்­டது என கூறினார்.


இதன் போது பிரதிப் பொலிஸ் மா அதிபர் கமல் சில்வா,நீதிவான் அவர்­களே, இந்த விசா­ரணை ஆரம்­பத்தில் நான் அதற்குப் பொறுப்­பான கட­மையில் இல்லை. நான் குற்­றங்கள் தொடர்­பி­லான பிரதிப் பொலிஸ் மா அதி­ப­ராக கட­மையைப் பொறுப்­பேற்ற பிறகு விசா­ர­ணைகள் மிக ஆழ­மாக என் ஆலோ­ச­னைப்­படி முன்­னெ­டுக்­கப்­பட்­டது என்றார்.


இந் நிலையில் ஞான­சார தேர­ருக்கு எதி­ராக தண்­டனை சட்டக் கோவையின் குற்­றச்­சாட்­டுக்­களை கமல் சில்வா மன்றில் பிரஸ்­தா­பித்த நிலையில், நீதிவான் புத்­திக ஸ்ரீ ராகல மீளவும் திறந்த மன்றில் கருத்­துக்­களைத் தெரி­வித்தார்.நீங்கள் முதல் ‘பீ’ அறிக்­கையில் தெரி­வித்த விட­யங்­களால் அதனைப் பாது­காப்­பாக வைக்க வேண்டும் என கூறி­னீர்கள். அதனால் இது­வரை அது என் கைக­ளி­லேயே இருந்­தது.


வீட்டில் கூட யாரும் பார்த்­து­விடக் கூடாது என்­பதில் இருந்து நான் அவ­தா­ன­மாக இருந்தேன். அப்­ப­டி­யாயின் நீங்கள் அதில் கூறி­யுள்ள குற்­றங்கள் எத­னையும் சந்­தேக நபர் புரி­ய­வில்­லையா? ஏன் அதில் அவ்­வாறு குறிப்­பிட்­டீர்கள் ? என நீதிவான் மீள கேள்வி எழுப்­பினார்.


இதன் போது பிரதிப் பொலிஸ் மா அதிபர் கமல் சில்வா, இல்லை. சந்­தேக நபர் அதில் கூறப்­பட்­டுள்ள விட­யங்­களை புரிந்­தார்தான் என்றார்.


அப்­ப­டி­யானால் ஏன் அவற்றை வாபஸ் பெற்­றீர்கள் என நீதிவான் மீளக் கேட்டார்.அவ­ச­ர­மாக இந்த பிரச்­சி­னையைத் தீர்த்து சந்­தேக நப­ருக்கு எதி­ராக குற்றப் பத்­தி­ரிகை ஒன்­றினைத் தாக்கல் செய்­யவே இந்த நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­ட­தாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் கமல் சில்வா பதி­ல­ளித்தார்.


பொலி­ஸா­ரா­கிய உங்­க­ளது நட­வ­டிக்­கைகள் கவ­லை­ய­ளிக்­கின்­றன. சந்­தேக நப­ருக்கு பிணை மறுக்க எந்த கார­ணமும் உங்­களால் முன்­வைக்­கப்­ப­ட­வில்லை. பிணை வழங்க முடி­யாத குற்­றச்­சாட்­டுகள் மீளப் பெறப்­பட்­டுள்­ளன எனக் கூறி பிணை அனு­மதி வழங்­கினார்.


அத்­துடன் பொலி­ஸாரின் சீரு­டையை கழற்­று­வ­தா­கவும், முஸ்லிம் குடும்­பங்­களை கொலைச் செய்­வ­தா­கவும் பொலிஸ் வாக­னத்தை தீயிட்டு கொளுத்­து­வ­தா­கவும் கூறிய எந்த விட­யமும் புதிய அறிக்­கையில் இல்லை என சுட்­டிக்­காட்­டிய நீதிவான், நாட்டில் என்ன நடந்த போதும் நீதி­மன்றில் முன்­வைக்­கப்­படும் கருத்­துக்­களை மட்டும் மையப்படுத்தியே தன்னால் தீர்மானிக்க முடியும் என்பதை நீதிவான் சுட்டிக்காட்டினார்.


பொலிஸாராகிய உங்கள் நடவடிக்கை காரணமாக நீதிமன்றையே பொது மக்கள் குறை கூறுவர். இவர் போன்ற ஒருவருக்கு ஏன் பிணை வழங்கினீர்கள் என பொது மக்கள் கேட்பர் என சுட்டிக்காட்டிய நீதிவான் வழக்கை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.இதன் போது ஞானசார தேரர் பொலிஸ் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு பொலிஸார் நீதிவானைக் கோரினர்.


இதன் போது, அவர் தானாக விசாரணைக்கு வந்து ஆஜராகியுள்ளார் என நீங்கள் தானே கூறினீர்கள். அப்படியானால் அவர் ஒத்துழைப்பு வழங்கியுள்ள நிலையில் அப்படியான உத்தரவு தேவையற்றது என அறிவித்து அதனை நிராகரித்தார்.இது இவ்வாறிருக்க ஞானசார தேரர் நேற்றைய தினமும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டர்.


மேலே திறந்த நீதிமன்ற விசாரணையில் பொலிஸாரின் சித்து விளையாட்டுகள் அம்பலமாகின்றன.இது குற்றவாளிகளை காப்பாற்றும் செயற்பாடாகவே இருக்கின்றன.நாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவேண்டிய பொலிஸ்தரப்பினரின் இவ்வாறான செயற்பாடுகளின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதும் ஞானசார தேரர் எங்கு மறைந்திருந்தார் என்பதும் இன்னும் மர்மமாகவே இருக்கின்றது. 


இனவாத கள்வர்களுக்கும் பொலிஸாருக்கும் மத்தியில் நீதிமன்றின் செயற்பாடுகள் பாராட்டப்பட வேண்டியதாக இருப்பினும் நீதிவான் புத்திக ஸ்ரீ ராகல வின் கருத்துக்களை போல் பொதுமக்கள் இன்று நீதித்துறையை சாடுகின்றமை உண்மையே.


ஞானசார தேரருக்காக பொலிஸார் சட்டத்தை வளைத்தது இவ்வாறுதான் .. ஞானசார தேரருக்காக பொலிஸார் சட்டத்தை வளைத்தது இவ்வாறுதான் .. Reviewed by Madawala News on 6/26/2017 02:49:00 PM Rating: 5