tg travels

வன்முறை பயங்கரவாதம் மற்றும் மதத் தீவிரவாதத்திற்கெதிராக அனைவரும் ஒன்றிணைவோம் ; பொதுபல சேனா அழைப்பு .. விபரம்..

வன்முறை பயங்கரவாதம் மற்றும் மதத் தீவிரவாதத்திற்கெதிராக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் பௌத்தர்கள் இந்துக்கள் முஸ்லீம்கள் கிரிஸ்தவர்கள் என பாகுபாடு இன்றி அனைவரும் ஒன்றினைய வேண்டும் என பொதுபல அமைப்பு கோரிக்கை முன்வைத்துள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை பொதுபலசேனா தலைமை செயலகத்தில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஊடக மாநாட்டில் கருத்து வெளியிட்ட பொது பல சேனா பிரதம நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே ..

இந்த நாட்டில் இனவாதத்தை நாம் தூண்டுவதாக குற்றம் சுமத்துபவர்கள் இனங்களுக்கு இடயே முருகல் நிலை தோன்றும் வாய்ப்பு உள்ளது என  முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை கூறியுள்ளதாகவும் அதனை கருத்தில் கொள்ளாமல் எமது அரசியல் தலைவர்கள் காலம் தாழ்த்தியமையே இந்த நிலையை தோற்றுவித்துள்ளதாக குறிப்பிட்டார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா நியமித்த ஜனாதிபதி ஆணைக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளை மேற்கோள் காட்டி தாம் பொலிஸ் முறைப்பாடு செய்யவுள்ளதாக டிலந்த விதானகே குறிப்பிட்டுள்ளார்.

கட்டார் தீவிரவாதிகளுக்கு நிதியுதவி செய்வதாக இன்று சவுதி அரேபியா மற்றும் வளைகுடா நாடுகளே பகிரங்கமாக தெரிவித்துள்ள நிலையில் தமது அமைப்பு இது தொடர்பில் 2014ம் ஆண்டே அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்குக் கடிதம் எழுதியதாக சுட்டிக்காட்டியுள்ள அவர் 

வில்பத்து பிரதேசத்தில் அடிப்படைவாதிகளை உருவாக்க அமைச்சர் ஒருவர் கட்டாரிலிருந்தே பணம் பெற்று வந்ததாகவும் அவை கூட அரசூடாகக் கொண்டு வரப்படாமல் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றினால் பெறப்பட்டதாகவும் தாம் எச்சரித்து வந்த விடயங்களே இப்போது உலக அளவில் பிரபலம் அடைந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.


வன்முறை பயங்கரவாதம் மற்றும் மதத் தீவிரவாதத்திற்கெதிராக அனைவரும் ஒன்றிணைவோம் ; பொதுபல சேனா அழைப்பு .. விபரம்.. வன்முறை பயங்கரவாதம் மற்றும் மதத்  தீவிரவாதத்திற்கெதிராக அனைவரும்  ஒன்றிணைவோம் ; பொதுபல சேனா அழைப்பு ..  விபரம்.. Reviewed by Madawala News on 6/06/2017 06:16:00 PM Rating: 5