tg travels

ஜர்கண்டில் மாட்டிறைச்சி எடுத்து சென்றதாக இன்னும் ஒருவர் அடுத்துக் கொலை ..



இந்தியா முழுவதும் பசு பாதுகாவலர்கள் என தங்களை அழைத்துக் கொள்பவர்கள் வன்முறை சம்பவங்களில் ஈடுபடும் சம்பவமானது அதிகரித்து காணப்படும் நிலையில் இவ்விவகாரத்தில் மோடி அரசு மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது.


பசு பாதுகாவலர்கள் வன்முறையில் ஈடுபடுவதற்கு எதிராக இந்தியாவில் போராட்டமும் தொடங்கியுள்ள நிலையில் காந்தியடிகளின் சபர்மதி ஆசிரமத்தின் நூற்றாண்டு விழாவில் பேசிய பிரதமர் மோடி, பசு பாதுகாப்பு என்ற பெயரில் மக்களை கொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என எச்சரிக்கை விடுத்தார்.வன்முறையால் எந்த பிரச்சினையையும் தீர்க்க முடியாது. சிறந்த ஒரு சமூகத்தில் வன்முறைக்கு இடம் இல்லை. இந்த நாட்டில் சட்டத்தை தங்கள் கையில் எடுக்க எவருக்கும் உரிமை இல்லை எனவும் குறிப்பிட்டார். பிரதமர் மோடியின் இந்த எச்சரிக்கையை பல்வேறு தரப்பினர் பாராட்டினர்.


இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பிரதமர் மோடியின் எச்சரிக்கையானது நிராகரிக்கப்பட்டு மாட்டிறைச்சி வைத்திருந்ததாக ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.


ஜர்கண்டில் மாட்டிறைச்சி எடுத்து சென்றதாக இன்னும் ஒருவர் அடுத்துக் கொலை .. ஜர்கண்டில் மாட்டிறைச்சி எடுத்து சென்றதாக இன்னும் ஒருவர் அடுத்துக் கொலை .. Reviewed by Madawala News on 6/29/2017 09:13:00 PM Rating: 5