Ad Space avaiable

மகரகமையில் முஸ்லிம் வர்த்தக நிலையம் மீது தாக்குதல்..


மகரகமை நகரிலுள்ள முஸ்லிம் வர்த்தகரொருவருக்கு சொந்தமான சப்பாத்துக் கடை மீது நேற்று (06) செவ்வாய்க்கிழமை இரவு இனந்தெரியாத நபரொருவரினால் தீவைக்க முயற்சிக்கப்பட்டுள்ளது. 

எனினும், இந்த கடையின் முன்பகுதி மாத்திரமே சிறியளவில் தீப்பற்றியுள்ளது. தெஹிவலையினைச் சேர்ந்த வர்த்தகரொருக்கு சொந்தமானதே இந்த கடையாகும். 

இன்று அதிகாலை 2.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மஹரகம 115/B, ஹை லேவள் வீதியில் உள்ள ஜஸ்ட் போ யூ என்ற வர்த்தக நிலையமே இவ்வாறு எரியூட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மகரகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மகரகமையில் முஸ்லிம் வர்த்தக நிலையம் மீது தாக்குதல்.. மகரகமையில் முஸ்லிம் வர்த்தக  நிலையம் மீது தாக்குதல்.. Reviewed by Madawala News on 6/07/2017 01:44:00 PM Rating: 5