tg travels

ஞானசார தேரருக்கு ஆதரவாக அஸ்கிரிய அனுநாயக தேரர் உள்ளிட்ட முக்கிய பிக்குகள் ஊடக மாநாடு .. ..

ஞானசார தேரருக்கு எதிராக நீதியை நிலைநாட்ட முன்னர் மற்றைய விடயங்களுக்கும் எதிராக நீதி நிலைநாட்டப்பட்டப்பட வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.


இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கலந்துகொண்ட அஸ்கிரிய பீடத்தின்  அனுநாயக தம்மானந்த தேரர் ஜனாதிபதியுடன்  மிக நெருக்கமான உறவை பேணி வரும் ஊழல் எதிர்ப்பு முன்னணியின் இணை  அழைப்பாளர் உலப்பனை சுமங்கள தேரர்  மற்றும் ஹேகொட விபாஸி தேரர் ஆகியோர் இணைந்து நடத்திய ஊடக மாநாட்டில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இங்கு கருத்து வெளியிட வலப்பபனை சுமங்கள தேரர் கூறுகையில் 

நாட்டில் அனைவருக்கு நீதி ஒரே வகையில் நிலைநாட்டப்பட வேண்டும், வில்பத்தை அழித்த,தாஜுதீன் கொலை , மத்திய வங்கி முறி மோசடி என பலதரப்பட்ட விடயங்களில் நீதி நிலைநாட்டப்படவில்லை.இவற்றை எல்லாம் விட்டுவிட்டு ஞானாரர் விடயத்தில் மாத்திரம் நீதியை நிலைநாட்ட நினைப்பதை ஏற்க முடியாது என குறிப்பிட்டார்.

இங்கு அஸ்கிரிய பீடத்தின்  அனுநாயக தம்மானந்த தேரர் கருத்து வெளியிடுகையில் அம்பிடிய சுமங்கள தேரர் கூறிய அதே கருத்தை வலியுறுத்தி பேசிய அதேவேளை ஞானசார தேரரை கைது செய்ய பொலிஸார் 200 பேரை அனுப்பி மேற்கொண்ட முயற்சியை தான் கண்டிப்பதாக கூறிய அவர் அரசாங்கம் ஒரு தரப்பை திருப்திபடுத்த எடுக்கும் முயற்சி நாட்டில் இனமுறுகலை தோற்றுவிக்கும் என குறிப்பிட்டார்.

மேலும் இந்த நாட்டில் காவி உடையில் கை வைத்தால்  பௌத்தர்கள் உணர்ச்சிவசப்படுவார்கள் என்ற விடயத்தை நாம் ஏற்கனவே ஜனாதிபதிக்கு எத்திவைத்துள்ளோம். இது தொடர்பில் பாதுகாப்பு தரப்பு மிகவும் புத்தி சாதுரியமாக நடந்துகொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

மேலும் நாட்டில் தொல் பொருள் முக்கியத்துவம் வாய்த்த இடங்களை பலர் ஆக்கிரமித்து அதனை அழித்துவருவதாகவும் தேரர்கள் கூட்டாக  குற்றம் சுமத்தினார்கள்.
ஞானசார தேரருக்கு ஆதரவாக அஸ்கிரிய அனுநாயக தேரர் உள்ளிட்ட முக்கிய பிக்குகள் ஊடக மாநாடு .. .. ஞானசார தேரருக்கு ஆதரவாக அஸ்கிரிய அனுநாயக தேரர் உள்ளிட்ட முக்கிய பிக்குகள் ஊடக மாநாடு .. .. Reviewed by Madawala News on 6/05/2017 02:15:00 PM Rating: 5