tg travels

மஹியங்கனை தீ வைப்பு சம்பவத்தின்   விசாரணைகளை திசை திருப்ப மஹியங்கனை பொலிஸார் முயற்சி ?

மஹியங்கனை பிரதேசத்தில் நேற்று தீக்கிரையான புதிய காத்தாங்குடி வர்த்தகருக்கு சொந்தமான பாதனி விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட தீ மின்சார ஒழுக்கு காரணமாக ஏற்பட்டது என கூறி விசாரணைகளை திசை திருப்ப பொலிஸார் முயற்சித்துள்ளார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இன்று விமான நிலையத்தில் மருத்துவ சிகிற்சைக்காக அமெரிக்கா சென்று நாடு திரும்பிய பிரதமரை சந்திக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் முஜீப் ரஹ்மான் மற்றும் மரிக்கார் ஆகியோர் சென்றிருந்த வேளை மஹியங்கனை தீ சம்பவம் தொடர்பில் பொலிஸ் மா அதிபரிடம் குறித்த இருவரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதன்போது பதில் அளித்துள்ள பொலிஸ் மா அதிபர் ,

மஹியங்கனை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி இது ஒரு விபத்து என கூறியதாகவும் விபத்து ஏற்பட முன்னர் அங்கு மின் தடை ஏற்பட்டு பின்னர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக தன்னிடம் கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குறித்த கடை உரிமையாளரும் அவ்வாறே வாக்குமூலம் அளித்துள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தன்னிடம் கூறியதாக பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து கடை உரிமையாளரை தொடர்புபடுத்தி தருமாறு முஜீப் ரஹ்மான் எம் பி மடவளை நியுஸுக்கு கேட்டுக்கொண்டமைக்கு அமைய அலிகார் தாஜுதீன் அவர்களை முஜிப் எம்பியுடன் நாம் தொடர்புபடுத்த நடவடிக்கை எடுத்தோம்.

இதன்போது தான் விபத்து சம்பவம் என பொலிஸில் வாக்குமூலம் வழங்கவில்லை என கடை உரிமையாளர் அலிகார் தாஜுதீன் குறிப்பிட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து இந்த விடயம் தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கு உடனடியாக முஜீப் ரஹ்மான் எம் பி அறிவித்துள்ள அதேவேளை பொலிஸ் முறைப்பாட்டு பிரதியையும் உடனடியாக அவருக்கு அனுப்பிவைக்குமாறு கடை உரிமையாளரை கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் கடை உரிமையாளரிடம் மீண்டும் ஒரு வாக்குமூல பெறுமாறு பொலிஸ் மா அதிபர் மஹியங்கனை ஓ ஐசிக்கு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது 

மஹியங்கனை தீ வைப்பு சம்பவத்தின்   விசாரணைகளை திசை திருப்ப மஹியங்கனை பொலிஸார் முயற்சி ? மஹியங்கனை தீ வைப்பு சம்பவத்தின்   விசாரணைகளை திசை திருப்ப மஹியங்கனை பொலிஸார் முயற்சி ? Reviewed by Madawala News on 6/11/2017 01:39:00 AM Rating: 5