tg travels

உலக வெசாக் தினம் வெற்றிகரமாக இலங்கையில் நடைபெற்ற பின்னரே பௌத்த தேரர்களை அவமதிக்கும் செயற்பாடுகள் அதிகரிப்பு ..


கடந்த மாதம் இலங்கையில் இடம்பெற்ற உலக வெசாக் தின நிகழ்வுகள் வெற்றிகரமாக நடைபெற்றதை தொடர்ந்தே இணையதளங்கள் மற்றும் முகநூல் வாயிலாக புத்த பிக்குகளை அவமதிக்கும் வகையில் சிலர் கருத்து வெளியிட்டு வருவதாக ஜனாதிபதி மைதிரிபால சிரிசேன குறிப்பிட்டுள்ளார்.


நேற்றைய தினம் ஜனாதிபதி மற்றும் கோட்டே சங்க சபா இடையே இடம்பெற்ற சந்திப்பின் போது இந்த விடயத்தை ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.


இதன்போது வரலாற்றில் என்றுமில்லாதவாறு பௌத்த துறவிகள் அரசியல்வாதிகளால் அவமதிக்கப்படுவது அதிகரித்துள்ளதாகவும் இது கட்டுப்படுத்தப்பட வேண்டும் எனவும் கோரி ஜனாதிபதியிடம் கடிதம் ஒன்றைக் கோட்டே சங்க சபா கையளித்துள்ளது. இவ்வாறு கடிதம் ஒன்றை ஒப்படைத்துள்ள குறித்த சங்க சபை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பௌத்தர்களின் அடையாளத்தை நிராகரிக்கும் வகையில் பேசி வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ள அதேவேளை இதன் மூலம் பௌத்த கலாச்சாரம் மற்றும் வரலாறு கேள்விக்குட்படுத்தப்படுவதாகவும் இந்நாட்டில் பௌத்தர்களின் நலனை இவ்வாறு அரசியல் ரீதியாக பாதிப்புக்குள்ளாக்குவதை அனுமதிக்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை, மதங்களுக்கிடையிலான பிணக்குகளைத் தீர்க்க சர்வமத பிரதிநிதிகளைக் கொண்ட குழு அமைக்கப்பட வேண்டும் எனும் ஜனாதிபதியின் கருத்தும் அங்கு சங்க சபையினரால் வலியுறுத்தப்பட்டுள்ளது.




உலக வெசாக் தினம் வெற்றிகரமாக இலங்கையில் நடைபெற்ற பின்னரே பௌத்த தேரர்களை அவமதிக்கும் செயற்பாடுகள் அதிகரிப்பு .. உலக வெசாக் தினம் வெற்றிகரமாக இலங்கையில் நடைபெற்ற பின்னரே பௌத்த தேரர்களை அவமதிக்கும் செயற்பாடுகள் அதிகரிப்பு .. Reviewed by Madawala News on 6/29/2017 07:01:00 PM Rating: 5