Kidny

Kidny

கட்டார் நாட்டவர்களை புனித ஹரம் ஷரீபிற்குள் நுழைய விடாமல் தடுத்த சவுதி அரேபிய அதிகாரிகள் ...


மக்கா புனித ஹரம் ஷரீபிற்குள் கட்டார் நாட்டவர்கள் உள் நுழையவிடாமல் சவுதி அதிகாரிகள் தடுத்துள்ளதாக கட்டார் நாழிதல் அல் ஷார்க் பத்திரிகையை மேற்கோள் காட்டி அல் ஜசீரா தகவல் வெளியிட்டுள்ளது.


கட்டார் தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு கட்டார் நாட்டவர்கள் பலர் இது தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளதாக குறித்த பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

மத அனுஷ்டானங்களை மேற்கொள்வதற்க்கு தடை விதிப்பது மனித உரிமை மீரலாகுமென கட்டார் தேசிய மனித உரிமைகள் ஆணையம் குறிப்பிட்டுள்ளதாக அல் ஷார்க் பத்திரிகையை மேற்கோள் காட்டி அல் ஜசீரா தகவல் வெளியிட்டுள்ளது.

கட்டார் நாட்டவர்களை புனித ஹரம் ஷரீபிற்குள் நுழைய விடாமல் தடுத்த சவுதி அரேபிய அதிகாரிகள் ... கட்டார் நாட்டவர்களை புனித ஹரம் ஷரீபிற்குள் நுழைய விடாமல் தடுத்த சவுதி அரேபிய அதிகாரிகள் ... Reviewed by Madawala News on 6/11/2017 12:47:00 PM Rating: 5