Ad Space avaiable

இனவாதக் குற்றவாளிகளை பாதுகாத்துக்கொண்டு முறைப்பாட்டளரான என்னை துரத்தும் காவல்துறை!

Azeez Nizardeen
முஸ்லிம்களுக்கெதிராக வன்முறைகளைத்  தூண்டியும் இஸ்லாத்தைக் கேவலப்படுத்தியும் வரும்  ஞானசார மற்றும்  டேன் பிரசாத் போன்ற இரண்டு இனவாதிகள் மீதான நீதிமன்ற பிணைகளை ரத்து செய்யக் கோரியும், தற்போதைய அவர்களின் இனவாத நடவடிக்கைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கோரியும் நான் பொலிஸ் தலைமையத்தில் இரண்டு முறைப்பாடுகளைச் செய்துள்ளேன். 

கடந்த வெள்ளிக்கிழமை RRT அமைப்பு எனது முறைப்பாட்டையும் சேர்த்து கோட்டை நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்து சட்ட நடவடிக்கையை துரிதமாக மேற்கொள்ளுமாறு நீதிமன்றத்தை வேண்டியுள்ளது.  

சட்டத்தரணி சிராஸ் நூர்தீன்,  இனவாத செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதில் பொலிஸாரின் அசமந்தப் போக்கையும்  நீதிமன்றத்திற்கு அன்று சுட்டிக்காட்டியிருந்தார்.

குறித்த இனவாதிகளின் நடவடிக்கைத் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காத காவல்துறை முறைப்பாடு செய்த என்னை அச்சுறுத்தும் நடவடிக்கையில் தற்போது 
இறங்கியிருப்பதாக  எனக்கு  சந்தேகம்   
எழுந்துள்ளது. 

நேற்று எனது வீடு தேடி சிவில் உடையில் வந்த காவல் துறையினர் என்று சந்தேகப்படக் கூடிய நபர்கள் இருவர் நான் வீட்டில் இல்லாத சந்தர்ப்பத்தில்  என்னை விசாரித்துள்ளனர். 

அந்த நபர்களுக்கு  தந்தை வெளியே சென்றிருப்பதாக எனது மகன்   கூறியிருக்கிறார். 

''தந்தை எப்போது வீடு திரும்புவார் ? '' என அந்த நபர்கள் விசாரித்தள்ளனர்.  அந்த நேரத்தை உறுதியாகக் கூற முடியாது என்று எனது மகன் பதிலளித்துள்ளார். 

குறித்த நபர்களிடம்  ''என்ன விடயமாக தந்தையை விசாரிக்கின்றீர்கள்?'' என எனது மகன் கேள்வியெழுப்பியுள்ளார்.

''அதை உங்களுக்குக் கூற முடியாது உங்கள் தந்தையிடம் தான் கதைக்க வேண்டும்''  என்று கூறிய அந்த நபர்கள் எனது தொலைபேசி இலக்கத்தைப் பெற்றுக் கொண்டு நழுவிச் சென்றுள்ளனர்.

காவல் துறையினர் உத்தியோகபூர்வமாக விசாரிக்க வந்திருந்தால் இப்படி நடந்திருக்க மாட்டார்கள். வந்த விடயத்தை அவர்கள் வீட்டாருக்கு அறிவித்து விட்டு சென்றிருக்க வேண்டும். இல்லா விட்டால் எனது தொலைபேசி இலக்கத்தினூடாக அவர்கள் என்னை தொடர்பு கொண்டிருக்க வேண்டும். இதைப் பதிவிடும் நேரம் வரை என்னை யாரும் தொடர்பு கொள்ளவில்லை.

ஆனால் இது இனவாதிகளைத் தண்டிக்கக் கோரும் என்போன்றவர்களை அச்சுறுத்தும் ஒரு செயற்பாடு என்றே எனக்குத் தோன்றுகிறது. 

சட்டமும் நீதித்துறையும்  இனவாதிகளுக்குச் சார்பாகவும்  முஸ்லிம்கள் விடயத்தில் பாராமுகமாக  இருப்பதையும் 
நன்றாக உணரக் கூடியதாக இருக்கிறது.

حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ
அல்லாஹ் எங்களுக்குப் போதுமானவன்; இன்னும் அவன் (யாவரையும்) மிகைத்தவன்;
இனவாதக் குற்றவாளிகளை பாதுகாத்துக்கொண்டு முறைப்பாட்டளரான என்னை துரத்தும் காவல்துறை! இனவாதக்   குற்றவாளிகளை பாதுகாத்துக்கொண்டு முறைப்பாட்டளரான  என்னை  துரத்தும் காவல்துறை! Reviewed by Madawala News on 6/05/2017 08:58:00 PM Rating: 5