Ad Space Available here

மஹிந்த ராஜ­ப­க்ஷவின் ஆட்­சிக்­கா­லத்­தி­லேயே இன­வா­தி­க­ளுக்கு அர­சியல் அந்­தஸ்து வழங்­கப்­பட்­டது...


அதற்­காக அவர் பகி­ரங்­க­மாக மன்­னிப்பு கோர வேண்டும் என ஐக்­கிய தேசிய கட்­சியின் கொழும்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் தெரி­வித்தார்.

ஐக்­கிய தேசிய கட்­சியின் தலை­மை­ய­க­மான சிறி­கொத்­தவில் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

கடந்த ஆட்­சிக்­கா­லத்தில் இலஞ்சம் மற்றும் ஊழல் நிறைந்த ஆட்­சி ­கா­ணப்­பட்­டது. அரச சொத்­துக்­களை முறை­கே­டாக தனிப்­பட்ட முறையில் பயன்­ப­டுத்­தினர். இதில் மாற்றம் அவ­சியம் என்­பதை கருத்­திற்­கொண்டு கடந்த 2015 ஆம் ஆண்டில் மக்கள் நல்­லாட்சி மீதான நம்­பிக்­கையில் எமக்­கான அதி­கா­ரத்தை வழங்­கினர். 

அதற்­க­மை­வாக நல்­லாட்­சியில் சுயா­தீன ஆணைக்­கு­ழுக்­க­ளை உரு­வாக்­கி­யுள்­ள­துடன் நீதித்­துறை கட்­ட­மைப்பும் சுயா­தீ­ன­மாக இயங்­கி­வ­ரு­கின்­றது. நாட்டில் ஜன­நா­ய­கத்தை நிலை­நாட்­டுதல்,  ஊடக சுதந்­தி­ரத்தை வழங்­கி­யமை மற்றும் புதிய அர­சி­ய­ல­மைப்பின் ஊடாக நாட்டு மக்­களின் அபி­லா­சை­களை பூர்த்தி செய்­வற்கும் நல்­லாட்­சியில் எதிர்­பார்த்­துள்ளோம். இவ்­வா­றான வேலைத்­திட்­டங்கள் கடந்த தேர்தல் காலத்தில் நாம் மக்­க­ளுக்கு வழங்­கிய வாக்­கு­று­தி­களாகும்.

இலங்­கையில் கடந்த 30 ஆண்­டுகள் நில­விய யுத்­தத்தை நிறைவு செய்த முன்னாள் ஜனா­தி­ப­தியால் நாட்டில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்க முடியும். எனினும் அதனை அவர் தவற விட்­டு­விட்டார். அவ­ரது ஆட்­சிக்­கா­லத்­தி­லேயே இன­வாதம் தலை­தூக்க ஆரம்­பித்­தது. எவ்­வித நீதியும்,பொறுப்­புக்­கூ­றலுமின்றி நாட்டின் வேலைத்­திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன.

எந்த வொரு மதத்­துக்கு எதி­ரா­கவும் பிர­சா­ரங்­களை முன்­னெ­டுக்க முடியும். இதுவே அளுத்­கமை கல­வ­ரத்­துக்கும் வித்­திட்­டது. 

அத்­துடன் முன்னாள் ஜனா­தி­பதி மகிந்த ராஜ­ப­க் ஷவின் ஆட்­சிக்­கா­லத்தில் இன­வா­தத்தை முன்­னெ­டுக்கும் அமைப்­புக்­க­ளுக்கு நிதி வழங்கி அதனை ஊக்­கு­வித்து வந்­தனர். நாட்டின் அமை­தியை இவ்­வாறு சீர்­கு­லைத்­த­மைக்­காக அவர் பகி­ரங்­க­மாக மன்­னிப்­புக்­கோர வேண்டும். 

அத்­துடன் கடந்த காலத்தில் தோற்றம் பெற்ற பொது­பல சேனா, இரா­வ­ணா­ப­லய போன்ற அமைப்­புக்கள் அர­சியல் பின்­பு­லத்­தோடு நிதி வழங்கி முன்­னெ­டுக்­கப்­பட்ட அமைப்­புக்­க­ளாகும். குறிப்­பாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விமல் வீர­வன்ச, தான் அமைச்­சுப்­ப­த­வியில் இருக்கும் காலத்தில் இரா­வ­ண­ப­லய அமைப்­பி­ன­ருக்கு வாகனம் வழங்­கி­யத்­தற்­கான ஆதா­ரங்கள் பீ அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளன.

இவ்­வாறு கடந்த ஆட்சிக்காலத்தின் போது இன­வா­தி­க­ளுக்கு அர­சியல் அந்­தஸ்த்தை வழங்­கி­ய­வர்கள் தற்­போது நாட்டில் நல்­லி­ணக்­கத்­தையும் சக­லரும் ஏற்­றுக்­கொள்ளும் ஓர் அர­சி­ய­ல­மைப்­பொன்று முன்­னெ­டுக்கும் பட்­சத்தில் அதில் குழப்பம் விளை­விப்­ப­தற்­கா­கவே குறித்த இன­வாத பிர­சா­ரங்­களை முன்­னெ­டுக்­கின்­றனர். 

எனினும், அதற்­காக ஒரு­போதும் நாம் நல்­லாட்­சியில் எமது வேலைத்­திட்­டங்­களை பின்­நோக்கி செல்­ல­விடமாட்டோம். தற்­போது இன­வாதம் பரப்பும் எவராயினும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்போம். அத்துடன் நாட்டில் ஜனநாயகத்தை ஏற்படுத்த நாம் அர்ப்பணிப்புடன் செயலாற்றுவோம் என்றார்.

மஹிந்த ராஜ­ப­க்ஷவின் ஆட்­சிக்­கா­லத்­தி­லேயே இன­வா­தி­க­ளுக்கு அர­சியல் அந்­தஸ்து வழங்­கப்­பட்­டது... மஹிந்த ராஜ­ப­க்ஷவின் ஆட்­சிக்­கா­லத்­தி­லேயே இன­வா­தி­க­ளுக்கு அர­சியல் அந்­தஸ்து வழங்­கப்­பட்­டது... Reviewed by Madawala News on 6/23/2017 08:23:00 PM Rating: 5