tg travels

ஞானசார தேரருக்கு எந்த ஒரு நீதிமன்றமும் பிடியாணை பிறப்பிக்கவில்லை ..


பொதுபல சேனா அமைப்பின் பொது செயளாலர் ஞானசார தேரரை கைது செய்ய இதுவரை எந்த ஒரு  நீதிமன்றமும் இதுவரை பிடியாணை எதுவும் பிறப்பிக்கவில்லையென அவ்வமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே மடவளை நியுஸுக்கு குறிப்பிட்டார்.

இவ்வார அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின்போது, ஞானசார தேரர்  எதிராக நீதிமன்ற பிடியாணை இருப்பதாகவும் அதனடிப்படையில் அவர் தேடப்படுவதாகவும் அமைச்சர்  ராஜித தெரிவித்திருந்தார். 

இது தொடர்பில் நாம் பொதுபல சேனாவிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் மேலும் கூறுகையில் 

அமைச்சர் ராஜித பொய் கூறுவதாகவும்  ஞானசார தேரரை கைது செய்ய எந்த ஒரு நீதிமன்றமும் உத்தரவிடவில்லையெனவும் அவர் குறிப்பிட்டார்.


ஞானசார தேரருக்கு எந்த ஒரு நீதிமன்றமும் பிடியாணை பிறப்பிக்கவில்லை .. ஞானசார தேரருக்கு எந்த ஒரு நீதிமன்றமும் பிடியாணை பிறப்பிக்கவில்லை .. Reviewed by Madawala News on 6/09/2017 12:32:00 AM Rating: 5