Kidny

Kidny

ஞானசார தேரர் மறைந்திருப்பதற்கு அமைச்சர்கள் யாருடையதாவது ஒத்துழைப்பு இல்லாதிருக்க முடியாது..


இந்த சிறிய நாட்டில் ஞானசார தேரர் பொலிஸாரின் கண்களில் தென்படாமல் மறைந்திருப்பதாயின் அதுவும் ஒரு திறமை எனவும், இவ்வாறு மறைந்திருப்பதற்கு அமைச்சர்கள் யாருடையதாவது ஒத்துழைப்பு இல்லாதிருக்க முடியாது எனவும் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

இன்று (07) கொழும்பில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஞானசார தேரர் தனக்கு எதிராக முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களை மாத்திரமே தூக்கிப் பிடிக்கின்றது எனவும், தான் முன்வைக்கும் எந்தவொரு குற்றச்சாட்டையும் விசாரணை செய்வதில்லையெனவும் கூறுகின்றார். 

இது தொடர்பில் அரசாங்கத்தின் கருத்து என்னவென ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில்,

பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் முஸ்லிம்களுக்கு எதிராக பயன்படுத்துகின்றது போன்ற வசனங்களை, ஞானசார தேரர் குற்றம்சாட்டும் நபர்கள் சிங்களவர்களுக்கு எதிராக எந்தவொரு மோசமான வார்த்தையையும் கூறியதில்லை. 

ஞானசார தேரர் குற்றச்சாட்டும் எவரும் கடைகளுக்குத் தீ வைத்ததாகவோ, சமயத் தலங்களுக்கு தாக்குதல் நடாத்தியதாகவோ ஆதாரங்களோ, சாட்சிகளோ இல்லை.

வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு அவரது தேவைகளை, கோரிக்கைகளை முன்வைக்க உரிமை இருக்கின்றது. அவர் ஞானசார தேரரைப் போன்று செயற்படவில்லை.

இது இவ்வாறிருக்கையில், ஞானசார தேரர் கூறும் நபர்களை கைது செய்வதற்கோ விசாரணை நடாத்துவதற்கோ எந்தவிதத் தேவையும் இல்லையெனவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன மேலும் கூறினார். DC 

ஞானசார தேரர் மறைந்திருப்பதற்கு அமைச்சர்கள் யாருடையதாவது ஒத்துழைப்பு இல்லாதிருக்க முடியாது.. ஞானசார தேரர் மறைந்திருப்பதற்கு அமைச்சர்கள் யாருடையதாவது ஒத்துழைப்பு இல்லாதிருக்க முடியாது.. Reviewed by Madawala News on 6/07/2017 11:19:00 PM Rating: 5