tg travels

குப்பைகளை உடன் அகற்றவும் ; பிரதமர் உத்தரவு ..


கடந்த 3 வாரங்களாக கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளிலும் கொழும்பை அண்டிய பகுதிகளில் குப்பை அகற்றப்படாமல் உள்ளன. இதனால் வீதிகளில் பெரும் துர்நாற்றம் வீசி வருகின்றன. 


இந்நிலையில், இன்று கொழும்பு நகரில் பிரத்தியேகமாக பயணித்த பிரதமர் மாநகர எல்லையில் குவிந்துள்ள குப்பையை கண்டவுடன் உடனே மாநகர ஆணையாளருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வீதியோரங்களில் குவிந்துள்ள குப்பை உடன் அகற்றுமாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.


எனினும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அறிவிப்புக்கு முதல் அரசாங்கத்தினால் குப்பை அகற்றுவதற்கு இராணுவத்தின் உதவியை கொண்டு குப்பை அகற்ற முடிவெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

குப்பைகளை உடன் அகற்றவும் ; பிரதமர் உத்தரவு .. குப்பைகளை உடன் அகற்றவும் ; பிரதமர் உத்தரவு .. Reviewed by Madawala News on 6/18/2017 05:46:00 PM Rating: 5