Kidny

Kidny

மியன்மார் இளம் பெண்ணை துஸ்பிரயோகம் செய்த பொலிஸ் உத்தியோகத்தர் இதுவரை கைதாகவில்லை ..


இலங்கைக்கு அடைக்கலம் தேடிவந்த மியன்மார் அகதிக்குழுவில் இருந்த ஒரு யுவதியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் உத்தியோகத்தர் இதுவரை கைது செய்யப்படவில்லை சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் கவலைவெளியிட்டுள்ளார்.


இந்த சம்பவம் தொடர்பில் கொஹுவலை பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த யுவதியிடம் இருந்து உத்தியோகபூர்வமாக வாக்குமூலம் பெறுவதில் சிக்கல் நிலவி வருவதாகவும்.சகோதரிக்கு ரோஹின்யா மொழி மாத்திரமே தெரியும் என்பதால் யோஹிங்கயா மொழிபெயர்ப்பு தெரிந்த ஒருவரை தேடிக்கொண்டுள்ளதாக ஸிராஸ் நூர்தீன் மேலும் குறிப்பிட்டார்.


பொலிஸாருக்கு குறித்த யுவதி அளிக்கும் வாக்குமூலத்துக்கு புறம்பாக இன்னுமொரு வாக்குமூலம் பெறப்படவுள்ளதாக கொழும்பு தகவல்கள் மூலம் அறியக்கிடைத்துள்ளது.

மியன்மார் இளம் பெண்ணை துஸ்பிரயோகம் செய்த பொலிஸ் உத்தியோகத்தர் இதுவரை கைதாகவில்லை .. மியன்மார் இளம் பெண்ணை துஸ்பிரயோகம் செய்த பொலிஸ் உத்தியோகத்தர் இதுவரை கைதாகவில்லை .. Reviewed by Madawala News on 6/20/2017 11:45:00 PM Rating: 5