Ad Space avaiable

யாரின் தேவைக்காகவும் அவசரப்படுத்தவோ வித்தியாசமான முறையில் நீதியை நிலைநாட்டவோ முடியாது .!!


நாட்டில் இடம்பெறும் சகல சம்பவங்களையும் மதங்களுக்கு இடையேயான மோதலாக சித்தரிக்க சிலர் முயற்சி செய்வதாக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.

இன்று வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட  பின்னர் நாட்டில் இடம்பெறும் திட்டமிட்ட இனவாத செயற்பாடுகள் தொடர்பில் அறிக்கை ஒன்றை கோரியுள்ளதாக அமைச்சர் ராஜித குறிப்பிட்டுள்ள விடயம் தொடர்பில் ஊடகவியலார்கள்  கேள்வி எழுப்பிய போது பதில் அளித்த அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட  அவர் ..

இன்றும் ஒரு தீ வைப்பு சம்வம் இடம்பெற்றுள்ளது.நாட்டில் இடம்பெறும் சகல சம்பவங்களையும் ஒரு அக்கவுண்டில் போடுவது நடைமுறையாகியுள்ளது.எமக்கு நீதியை நிலைநாட்டுவதில் எந்தவித பாகுபாடும் இல்லை எவர் குற்றம் செய்தாலும் அது குற்றமே.

ஆனால் எவருக்காகவும் நீதியை நிலைநாட்ட அவசரப்படுத்தவோ எவரினதும் தனிப்பட்ட தேவைகளுக்காக எமக்கு வேறு விதமாக நீதியை நிலைநாட்டவோ முடியாது.ஆனால் நீதியை இறுக்கமாக நிலைநாட்டுவோம் என குறிப்பிட்டார் .

ஞானசார தேரரை கைது செய்வது தொடர்பில் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது..

பல பொலிஸ் குழுக்களை களமிறக்கியுள்ளோம்,புலனாய்வு பிரிவு புலானய்வு செய்கிறார்கள். நிச்சயமாக அவரை கைது செய்வோம் என பதில் அளித்தார்.

யாரின் தேவைக்காகவும் அவசரப்படுத்தவோ வித்தியாசமான முறையில் நீதியை நிலைநாட்டவோ முடியாது .!! யாரின் தேவைக்காகவும் அவசரப்படுத்தவோ வித்தியாசமான முறையில் நீதியை நிலைநாட்டவோ முடியாது .!! Reviewed by Madawala News on 6/09/2017 02:04:00 AM Rating: 5