Kidny

Kidny

முஸ்தபா எனும் ஆளுமையை பிரிந்து நிற்கும் கல்முனை மண்


எம்.எம்.ஏ.ஸமட்
இன்று புதன்கிழமை இறையடியெய்திய பல்துறை ஆளுமை கொண்ட மாஹும் எம்.ஐ.எம். முஸ்தபா கல்முனை மண் கண்ட ஆளுமைகளில் ஒருவராவார். அன்னாரை கல்முனை மண் பிரிந்து நிற்கிறது. இன்னாலில்லாஹி வயின்னாயிலைஹி ராஜுஹுன்.

பதிரிகையாளராக, எழுத்தாளராக, ஆசிரியராக, விளையாட்டு பயிற்சியாளராக, சாரணர் பயிற்சியாளராக, கால்பந்துப் போட்டிகளின் மத்தியஸ்தராக, விரிவுரையாளராக என பல்வேறு துறைகளில் தனது ஆளுமையைத் தடம்பதித்தவர்.

அம்பாறை மாவட்டத்தின் பல  பாடசாலைகளில் உடல்கல்வி ஆசிரியராக பணியாற்றிய காலத்தில் விளையாட்டுத்துறையில் அப்பாடசாiலைகள் சிறந்து விளங்க அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர். 

அப்பாடசாலைகளிலிருந்து மாணவர்கள் பாடசாலை, வலய, மாகாண மற்றும் தேசிய மட்டப் போட்டிகளில் பங்குகொண்டு சாதணை படைக்க களம் அமைத்துக் கொடுத்தவர்.

குறிப்பாக கல்முனை ஸாகிராவிலிருந்து பல விளையாட்டு வீரர்களை உருவாக்கியவர். சாரணியத்துறையில் ஆளுமையுடன் செயற்பட்ட அவர் அம்பாறை மாவட்டத்தில் பல சாராணர்களை உருவாக்கி தேசிய மட்டத்தில் சிறந்து விளங்கச் செய்தார்.

அத்தோடு, கல்முனை உட்பட பல பிரதேசங்களின் விளையாட்டுக் கழகங்களின் வளர்ச்சிக்கும், அக்கழக வீரர்களின் திறன் விருத்திக்கும் தன்னை அர்ப்பணித்துச் செயற்பட்டவர்கள்.
வினையாட்டுத்துறை ஊடாகவும், சாரணியத்தின் மூலமும் பலர் உயர் கல்வி வாய்ப்புக்களைப் பெறவும், பதவிகளை பெற்றுக்கொள்ளவும் அதில் நிரந்தரமாக இருப்பதற்கும் பங்களிப்புச் செய்தவர்.
அதுமாத்திரிமின்றி, அடடாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரி மற்றும் பயிற்சிக் கலாசாலை என்பவற்றில் விரிவுரையாளராக பணிபுரிந்து உடல்கல்வி ஆசிரியர்கள் பலரின் உருவாக்கத்திற்கும் காரணமாக இருந்தவர்

இவ்வாறு பல்வேறு துறைகளில் தனது ஆளுமையை வெளிக்காட்டிய அவர் கல்முனையின் மற்றுமொரு ஆளுமையான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தபாகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரபின் பள்ளித் தோழருமாவார். மர்ஹும் அஷ்ரபின் அரசியலில் நேரடி பங்களிப்புச் செய்யாத அவர் அஷ்ரபின் அரசியல் வளர்ச்சிக்கான தனது எழுத்தாற்றலை பயன்படுத்தியவர். 

அஷ்ரபின் மரணத்தின் பின்னர் அவரோடான வாழ்க்கை வரலாறு பற்றி தேசிய பத்திரிகையில் தொடராக எழுதி வந்தமையும் குறிப்பிடத்தக்கது.
விளையாட்டுத்தறையின் விருத்திக்காவும், சாரணியத்தின் வளர்;ச்சிக்காவும் அhப்பணிப்புச் செய்த அன்னாருக்கு அத்துறைகளில் பல்வேறு உயர் பதவிகள் கிடைத்ததுடன் தேசிய மட்டத்தில் பல விருதுகளும், பட்டங்களும் கிடைக்கப்பெற்றன.

இவ்வாறு கிடைப்பெற்ற பதவிகளோடு சமூகப் பணியில் தன்னை அர்ப்பணித்துச் செயற்பட்ட கல்முனை மண் கண்ட ஆளுமைகளில் ஒருவரான ஆசான் மர்ஹும் எம்.ஐ.எம். முஸ்தபாவை இன்று கல்முனை மண் பிரந்து நிற்கிறது.

வல்ல இறைவா! அன்னாரின் பாவங்களை மன்னித்து, நற்கருமங்களை ஏற்று மறுமை வாழ்வை சிறப்பாக்கி வைப்பயாக! ஆமின்.
 
 
முஸ்தபா எனும் ஆளுமையை பிரிந்து நிற்கும் கல்முனை மண் முஸ்தபா எனும் ஆளுமையை பிரிந்து நிற்கும் கல்முனை மண் Reviewed by Madawala News on 6/07/2017 04:10:00 PM Rating: 5