tg travels

பெரும்பான்மை மக்களை திருப்திப்படுத்த போய் சிறுபான்மை முஸ்லிம்களின் ஆதரவை இழந்து வருகின்றனர்..


பெரும்பான்மை மக்களை திருப்திபடுத்த முனையும் இந்த அரசு சிறுபான்மை முஸ்லிம்களின் ஆதரவை இழந்துவருவதாக ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எஸ் மரிக்கார் குறிப்பிட்டார்.


உம்ரா கடமையை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் குறிப்பிட்டதாவது..


நல்லாட்சி அரசை கொண்டுவர இந்த நாட்டு முஸ்லிம்கள் மஹிந்த ராஜபக்‌ஷவை எதிர்த்து 100 வீதம் வாக்களித்தார்கள்.மஹிந்த ராஜபக்‌ஷ வெற்றி பெற்றிருந்தால் முஸ்லிம்கள் மேலும் தாக்கப்பட்டிருப்பார்கள்.இப்போது ஆட்சியில் இருப்பவர்களால் கூட எமது சமூகத்தை பாதுகாத்திருக்க முடியாமல் போய் இருக்கும். அந்த அளவு சவால்களுக்கு மத்தியிலேயே முஸ்லிம் சமூகம் மஹிந்தவை எதிர்த்து நல்லாட்சிக்கு ஆதரவு வழங்கியது.


ஆனால் இன்று ஞானசார தேரர் விடயத்தில் சட்டம் நடந்து கொண்ட விதத்தை பார்க்கும் போது மிகுந்த வேதனையாக இருக்கிறது.


எமது சமூகம் கொதிப்படைந்துள்ளது நாம் கொண்டுவந்த நல்லாட்சி எம் கண்களை குத்துகிறதா என சமூகம் எம்மிடம் கேட்கிறது.

பெரும்பான்மை மக்களை திருப்திபடுத்த முனையும் இந்த அரசு சிறுபான்மை முஸ்லிம்களின் ஆதரவை இழந்துவருகிறது.


எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் உடனடியாக ஒன்று கூடி அவசர தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும்.கூட்டாக எடுக்கும் அந்த ஒரு தீர்மானத்துக்கும் கட்சி பேதங்களை மறந்து கை உயர்த்த நான் தயாராக இருக்கிறேன் என ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எஸ் மரிக்கார் குறிப்பிட்டார்.

பெரும்பான்மை மக்களை திருப்திப்படுத்த போய் சிறுபான்மை முஸ்லிம்களின் ஆதரவை இழந்து வருகின்றனர்.. பெரும்பான்மை மக்களை திருப்திப்படுத்த போய் சிறுபான்மை முஸ்லிம்களின் ஆதரவை இழந்து வருகின்றனர்.. Reviewed by Madawala News on 6/23/2017 08:15:00 PM Rating: 5