tg travels

இந்து சம்மேளனம் அஸ்கிரிய மஹாநாயக்க தேரரை சந்தித்தது..


பொதுபல சேனாவுடன் இணைந்து பணியாற்றிவரும் இந்து சம்மேளனத்தின் தலைவர் அருண்காந்த் தலைமையிலான அவ்வமைப்பின் உயர்மட்ட குழுவினர் அஸ்கிரிய மாநாயக தேரர் வரகாகொட ஸ்ரீ ஞானரதன மஹாநாயக தேரருடன் அவசர சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளது.


இச்சந்திப்பில்.. 

மட்டக்களப்பு ஆரயம்பதி உலக நாச்சியார் ஆலய தொல்பொருட்கள் அமைச்சர் ஹிஸ்புல்லாவின் ஆதரவாளர்களால் அழிக்கப்பட்டு அதனைச்சுற்றி வீடுகள் மற்றும் மசூதி அமைக்கப்பட்டமை தொடர்பாகவும், 


கிழக்கு மாகாணத்தில் அமைக்கப்பட்டுவரும் தொழில்பேட்டைகளில் தமிழர்களும் சிங்களவர்களும் முதலமைச்சர் அவர்களில் உத்தரவிட்கமைய புறக்கணிக்கப்பட்டுவருவதாகவும்,


இஸ்லாமியர்களுடைய தொழில் நிறுவனங்களில் கடமையாற்றும் தமிழ் பெண்கள் பாரிய அளவில் பாலியல் துஸபிரயோகம் செய்யப்பட்டு மதமாற்றம் செய்யப்படுவதாகவும்,பின்னர் நிர்பந்தம் காரணமாக அவர்களையே திருமணம் செய்வதாகவும்,


தமிழ் பாடசாலைகளுக்கு முஸ்லிம் ஆசிரியர்களை வகைதொகையின்றி நியமித்து தமிழ் ஆசிரியர்களூடைய வெற்றிடங்களை சூறையாடி வருவதனால் கிழக்கு மாகாண தமிழ் ஆசிரியர்கள் ஊவா மாகாணத்திற்கு விரட்டியடிக்கப்பட்டு வருவதாகவும்,கிழக்கு மாகாணத்தில் இருந்து தமிழர்களை விரட்டியடிக்கும் நீண்ட நாள் திட்டத்தின் ஒரு பகுதியாக நாம் இதை பார்ப்பதாகவும்,


மட்டக்களப்பு மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுவரும் இஸ்லாமிய பல்கலைகழகம் எதிர்காலத்தில ஏனைய சமூகங்கள் மீது எவ்வாரான தாக்கங்களை ஏற்படுத்தும் விடயம் தொடர்பிலும்,


இந்துக்கள் மீது திணிக்கப்படும் லவ் ஜிஹாத் மற்றும் மதமாற்ற போர் தொடர்பாகவும், கிழக்கு மாகாணத்தில் தமிழர்களுடைய காணிகள் பொது மரபுரிமை நிலங்கள் முஸ்லிம் நாடுகளின் உதவியுடன் பாரிய அளவில் கொள்ளையடிக்கப்பட்டு வருவதாகவும்,


தமிழ் பிரதேச வைத்தியசாலைகள் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுவது,இந்து கோயில்கள் மீதான தாக்குதல்கள்.தாக்கியவர்களை பொதுமக்களே சிறைபிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்தும் தாக்கியவர்களுக்கு மனநலம் பாதிககப்பட்டவர்கள் என்று அமைச்சர் ஒருவர் சட்ட வைத்திய அதிகாரியிடம் சான்றிதழ் பெற்றுக்கொடுத்தது நாடு முழுவதும் இந்து பௌத்த தர்மாரக்ஷண சபாவினூடாக இநது சம்மேளனம் மேற்கொண்டுவரும் பணிகள் தொடர்பாக தெளிவுபடுத்தப்பட்டதாக அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

இவர்களின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்துள்ள தேரர்..

இந்து சம்மேளனத்தின் துணிவான நடவடிக்கைகளுக்கு பாராட்டுவதாகவும் அவர்கள் முன்வைத்த அனைத்து பிரச்சினைகளையும் ஆராய்ந்து பார்ப்பதாகவும் கூடிய விரைவில் கிழக்கு மாகாண விஜயம் ஒன்றினை மேற்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வரலாற்று முக்கியத்துவம்மிக்க சங்க மஹா சபா கூட்டம் எதிர்வரும் ஜுலை நானகாம் திகதி பி.ப.இரண்டு மணிக்கு கூடுகின்றது. அதில் பங்குபற்றி கிழக்கு மாகாண தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பாகவும் நாடு முழுவதும் உள்ள இந்துக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் சிறப்புரையாற்றுமாறு கேட்டுக்கொள்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.

இந்து சம்மேளனம் அஸ்கிரிய மஹாநாயக்க தேரரை சந்தித்தது.. இந்து சம்மேளனம் அஸ்கிரிய மஹாநாயக்க தேரரை சந்தித்தது.. Reviewed by Madawala News on 6/26/2017 08:50:00 AM Rating: 5