Kidny

Kidny

முஸ்லீம் அரசியல்வாதிகள் அணைவரும் கட்சி பேதங்களை மறந்து எமது சமூகத்தின் சமகால பிரச்சினையை தீர்க்க ஒன்றுபடுவோம் 


(JM HAFEEZ )

முஸ்லீம் அரசியல்வாதிகள் அணைவரும் கட்சி பேதங்களை மறந்து எமது சமூகத்தின் சமகால பிரச்சினையை தீர்க்க ஒன்றுபடுவோம் 

 மீண்டும் இந்த நாட்டிலே இனக்கலவரம் ஒன்று வரக்கூடாதென்பதற்காக நல்லாட்சி அரசு உருவாக்கப்பட்டும் நிலமை அதேபோவே உள்ளது என கண்டியில் நடைபெற்ற கூட்டமொன்றிலே மத்திய மாகாண சபை அங்கத்தவர் ஹிதாயத் சத்தார் தெரிவித்தார்..

 

அவர்மேலும்தெரிவித்தாவது

 

2012 ம் வருடம் முதல் இந்த நாட்டிலே எமது சமூகம் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்துக்கொண்டு வருகின்றது, அதன் அடிப்படையில் தான் கடந்த கால மஹிந்த ராஜபக்‌ஷ அரசாங்கத்தை மாற்றி 2015 ஜனவரி 8 ம் திகதி நல்லாட்சி அரசாங்கத்துக்கு முழு முஸ்லீம் சமூகத்தின் ஒத்துழைப்புடன் எனைய சமூகமும் இணைந்து மீண்டும் இந்த நாட்டிலே இனக்கலவரம் ஒன்று வரக்கூடாதென்பதற்காக உருவாக்கப்பட்டது. 

இருந்தாலும் மீண்டும் அதேபோல ஒரு நிலமை தோன்றியுள்ளதை நாம் அணைவரும் அறிவோம்

மற்றைய சமூகத்திலுள்ள அரசியல்வாதிகள் தேர்தல் காலங்களில் மற்றுமே அரசியல் செய்கின்றார்கள் தேர்தல் முடிந்ததும் அவர்களின் சமய, சமூக, கலாச்சார விடியலுக்காக ஒன்றிணைந்து கட்சிபேதமின்றி செயல்படுகின்றனர் ஆனால் எமது முஸ்லீம் சமூகத்திலுள்ள அரசியல் தலைமைகள் தேர்தல் காலத்தை போன்றே எனைய காலங்களிலும் தமது கட்சியென்றும் தமது பிரதேசவாதங்களுக்காகவுமே செவிசாய்ப்பதுடன் ஒருவரை ஒருவர் விமர்சித்துக்கொள்கின்றனர்

 

 

மேலும் தேர்தல் காலங்களில் சிறுபான்மை கட்சியின் அரசியல்வாதிகள் UNP , SLFP போன்ற பெரும்பான்மை கட்சிகளிலே தேர்தலில் வாக்கு கேட்கமுடியுமென்றால் ஏன் தேர்தலின் பின்னர் கட்சி பேதமின்றி சமூகத்திற்கான பிரச்சினையின் போது ஒரே குரலாக இருக்கமுடியாதுள்ளது? அண்மையில் முஸ்லிம் கலாச்சார மற்றும் தபால் தபால் சேவைகள் அமைச்சரின் வேண்டுகோளுக்கிணங்க முஸ்லிம் கலாச்சார அமைச்சில் நடைபெற்ற முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் கலண்துரையாடலில் கூட ஒருசிலரே கலந்துகொண்டனர்.

 

நாம் இவ்வாரு ஒற்றுமை இல்லாமல் இருப்பதனால் தான் எமது சமூகத்துக்கு இந்த நிலை மேலும் எமது சமூகத்துக்காகவே நாம் அரசியல் செய்கின்றோமே தவிர நாம் அரசியல் செய்வதற்ற்காக எமது சமூகத்தை பாவிக்கக்கூடாது. எமது அனைத்து தனிப்பட்ட விடயங்கலையும் ஒருபுரம் வைத்துவிட்டு முஸ்லிம் அரசியல்வாதிகள் அணைவரும் ஒரு தலைமைத்துவத்தின் கீழ் ஒன்றுபட்டு ஒரே குரலாக சமகால முஸ்லீம் சமூகத்தின் பிரச்சினைகளுக்காக ஒன்றுபடுவோம் என்று கண்டியில் நடைபெற்ற கூட்டமொன்றிலே குறிப்பிட்டார்.

முஸ்லீம் அரசியல்வாதிகள் அணைவரும் கட்சி பேதங்களை மறந்து எமது சமூகத்தின் சமகால பிரச்சினையை தீர்க்க ஒன்றுபடுவோம்  முஸ்லீம் அரசியல்வாதிகள் அணைவரும் கட்சி பேதங்களை மறந்து எமது சமூகத்தின் சமகால பிரச்சினையை தீர்க்க ஒன்றுபடுவோம்  Reviewed by Madawala News on 6/16/2017 12:06:00 PM Rating: 5