tg travels

இலங்கை பொலிஸாரால் தேடப்படுபவருடன் தொடர்பு வைத்துள்ள மஹிந்த ராஜபக்‌ஷவை கைது செய்ய வேண்டும்  !


இலங்கை பொலிஸாராலும் சர்வதேச பொலிஸாராலும் தேடப்படும் உதயங்க வீரதுங்கவுடன் தொடர்பு வைத்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை கைது செய்ய வேண்டும் என அஸாத் சாலி கோரியுள்ளார்.


கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கருத்து வெளியிட்ட அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர்..

ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை இலங்கை பொலிஸாராலும் சர்வதேச பொலிஸாராலும் தேடிவருகின்றனர்.

உதயங்க வீரதுங்க போன்ற ஒரு திருடனை இன்னொரு திருடன் பாதுகாக்கிறார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ வெளிநாட்டிற்கு போகும் போது அங்கு உதயங்கவும் வந்துவிடுறார் இந்த நாட்டு பொலிஸாரால் தேடப்படும் ஒருவருடன் தொடர்பு வைத்துள்ள மஹிந்த ராஜபக்‌ஷவை கைது செய்து உதயங்க வீரதுங்கவை கூட்டிவர சொல்ல வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை பொலிஸாரால் தேடப்படுபவருடன் தொடர்பு வைத்துள்ள மஹிந்த ராஜபக்‌ஷவை கைது செய்ய வேண்டும்  ! இலங்கை பொலிஸாரால் தேடப்படுபவருடன் தொடர்பு வைத்துள்ள மஹிந்த ராஜபக்‌ஷவை கைது செய்ய வேண்டும்  ! Reviewed by Madawala News on 6/14/2017 07:28:00 AM Rating: 5