Kidny

Kidny

ஞானசார தேரருக்கு பின்னால் இருப்பது ஒரு கருப்பு ஆடு ? அது விஜேதாச அல்ல ; ஐ தே க முக்கியஸ்தர் ..

ஞானசார தேரரை கைது செய்யவிடாமல் தடுப்பது நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்‌ஷவே என சிலர் தகவல் வெளியிட்டுள்ள நிலையில் கடந்த சில நாட்களாக நீதி அமைச்சரை தொடர்புகொள்ள நாம் முயற்சித்த போது அவர் கடந்த ஒரு வாரகாலமாக நாட்டில் இல்லை என தெரியவந்தது.

இன்று திங்கட்கிழமையும் நாம் அவரது பிரத்தியேக கையடக்க தொலைபேசியில் அவரை தொடர்புகொள்ள  முயற்சித்த போது அவரது கையடக்க தொலைபேசி வெளிநாட்டில் இருப்பதாக பதில் கிடைத்தது.

அதனைத் தொடர்ந்து ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருடன் இது விடயமாக நாம் உரையாடிய போது...

கடந்த வாரம் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற சர்வமத தலைவர்கள் மற்றும் அரசியல் தலைவர்களுடன் இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடலில் அமைச்சர்கள் ஹலீம் , சுவாமி நாதன் , மனோ, ரிஷாத் என பலரும் கலந்துகொண்ட போதும் புத்தசாசன அமைச்சராக இருக்கும் விஜேதாச ராஜபக்‌ஷ கலந்துகொள்ளவில்லை அவர் வெளிநாடு சென்றுள்ளார் என தனக்கு அறியக்கிடைத்தாக குறித்த பா உறுப்பினர் மடவளை நியுஸுக்கு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர் 

ஞானசார தேரரை அழைத்து விஜேதாச ராஜபக்‌ஷ கலந்துரையாடியது தான் அவர் மீது மக்களுக்கு சந்தேக ஏற்பட காரணம் என தான் நினைப்பதாகவும்  இனமுறுகல் ஏற்படாமல் இந்த விடயத்தை கையாளவே தான் ஞானசாரரை அழைத்து பேசியதாக  தன்னிடம் நீதி அமைச்சர் குறிப்பிட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

மேலும் ஞானசார தேரரை கைது செய்வதை தடுக்க நீதி அமைச்சர் சட்டம்  ஒழுங்கு அமைச்சர் அல்ல என குறிப்பிட்ட அவர் நீதி அமைச்சர் நாடு திரும்பியதும் இந்த குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என  தான் தனிப்பட்ட ரீதியில் கோரிக்கை முன்வைக்க உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இந்த விடயத்தில் நீதி அமைச்சரை தாண்டி மிகப்பலம்பெரும் சக்தி பின்னணியில் இருக்கும் என தான் சந்தேகிப்பதாகவும் இல்லாமல் இவ்வளவு விடயமும் நடக்க வாய்ப்பில்லை எனவும் விஜேதாச வாய் திறந்தால் சிலவிடயங்கள் வெளிச்சத்துக்கு வரும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வளவு அழுத்தங்களுக்கு பின்னரும் தான் ஞானசார தேரரை பாதுகாக்கும் அளவுக்கு விஜேதாச அரசாங்கத்தில் பலம் பொருந்திய சக்தி அல்ல எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஞானசார தேரருக்கு பின்னால் இருப்பது ஒரு கருப்பு ஆடு ? அது விஜேதாச அல்ல ; ஐ தே க முக்கியஸ்தர் .. ஞானசார தேரருக்கு பின்னால் இருப்பது ஒரு கருப்பு ஆடு ? அது விஜேதாச அல்ல ; ஐ தே க முக்கியஸ்தர் .. Reviewed by Madawala News on 6/05/2017 07:31:00 PM Rating: 5