tg travels

நாடு ­தி­ரும்­பிய பிர­த­ம­ரிடம் இன­வாத செயற்­பா­டுகள் குறித்து அமைச்சர் ஹலீம் சுட்டிக்காட்டினார்..


ஐ.தே.க. முஸ்லிம் பிர­தி­நி­தி­க­ளு­டனும் சந்­திக்க திட்டம்

சிகிச்சை மற்றும் இரா­ஜ­தந்­திர விஜ­யத்தை மேற்­கொண்டு அமெ­ரிக்­கா­வுக்கு சென்று நேற்­று­முன்­தினம் நாடு திரும்­பிய பிர­த­ம­ரிடம் அண்­மைக்­கா­ல­மாக இலங்­கையில் மோச­ம­டைந்­துள்ள இன­வாத செயற்­பா­டுகள் குறித்து ஐ.தே.க. எம்.பி.க்கள் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர். 

நேற்­று­முன்­தினம் மாலை அமெ­ரிக்­கா­வி­லி­ருந்து விமானம் மூலம் கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தை வந்­த­டைந்த பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­கவை வர­வேற்­ப­தற்­காக ஐக்­கிய தேசியக் கட்சி அமைச்­சர்கள் மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் விமான நிலை­யத்தின் விஷேட அதி­தி­க­ளுக்­கான வெளி­யேறும் பகு­திக்கு சென்­றி­ருந்­தனர். 

பிர­தமர் வந்­த­டைந்­ததும் நாட்டு நிலை­மைகள் குறித்து அங்கு கதை­யாடல் இடம்­பெற்­றது. இதன்­போது, அமைச்சர் பீல்ட்­மார்ஷல் சரத்­பொன்­சேகா, தற்­போது நாட்டில் இடம்­பெற்­று­வரும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான இனவாத செயற்­பா­டுகள் அதி­க­ரித்­துள்­ள­தா­கவும் இதற்­கான நட­வ­டிக்­கைகள் குறித்தும் பிர­த­ம­ரிடம் வின­வினார்.

அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான முஜிபுர் ரஹ்மான் மற்றும் எஸ்.எம். மரிக்கார் ஆகியோர் இதன்­போது, தற்­போது இடம்­பெறும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான கெடு­பி­டிகள் குறித்து பிர­த­ம­ரிடம் விப­ரித்­துள்­ளனர். இது­கு­றித்து கொழும்பில் கலந்­து­ரை­யாடல் ஒன்றை நடத்தி ஆராய்­வ­தாக பிர­தமர் விமான நிலை­யத்தில் தெரி­வித்­த­துடன் அங்கு பொலிஸ்மா அதி­ப­ரு­டனும் கலந்­து­ரை­யா­டினார்.

இத­னி­டையே, அமைச்சர் ஹலீம் மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் பொலிஸ்மா அதி­பரை அங்கு சந்­தித்து, ‍முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக கட்­ட­விழ்த்­து­வி­டப்­பட்­டுள்ள இன­வாத செயற்­பா­டு­க­ளுக்­கான நட­வ­டிக்கை குறித்து வின­வி­யுள்­ளனர். இதற்கு பதி­ல­ளித்த பொலிஸ்மா அதிபர், நாம் இன­வா­தி­களை பாது­காக்­க­வில்லை.

அவ்­வா­றான எந்த தேவையும் நமக்கு கிடை­யாது. ஞான­சார தேரர் மறைந்­தி­ருக்கும் இடம் குறித்து நாம் தொடர்ந்தும் தேடுதல் நடத்தி வரு­கிறோம். ஜனா­தி­பதி ஞான­சார தேரரை கைது செய்ய வேண்டாம் என கூறி­தாக தெரி­விக்­கப்­ப­டு­வதில் உண்மை இல்லை. ஒரு­போதும் ஜனா­தி­பதி எமக்கு அவ்­வா­றா­ன­தொரு உத்­த­ரவை பிரப்­பிக்­க­வில்லை. நாம் இன­வாத செயற்­பா­டு­க­ளுக்கு எதி­ராக பக்­கச்­சார்­பின்றி நட­வ­டிக்கை எடுப்போம் எனவும் தெரி­வித்தார். 

அத்­துடன், பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான், அமைச்சர் ஹலீ­மிடம் வேண்­டுகோள் விடுத்­த­தை­ய­டுத்து, பிர­த­ம­ருடன் தொலை­பேசி தொடர்­பு­கொண்ட அமைச்சர் ஹலீம், ஐக்­கிய தேசியக் கட்சி முஸ்லிம் எம்.பி.க்கள் மற்றும் ஐ.தே.க.வின் முஸ்லிம் முக்­கி­யஸ்­தர்­களை சந்­திப்­ப­தற்­கான நேரம் ஒன்றை ஒதுக்கித் தரு­மாறு கோரி­யுள்ளார்.

இத­ன­டிப்­ப­டையில் இன்று அல்­லது நாளை இந்த சந்­திப்பு இடம்­பெ­று­வ­தற்­கான வாய்ப்பு இருப்­ப­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. 

நாளுக்கு நாள் நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் அதிகரித்து செல்கின்றமை குறித்த இச் சந்திப்பில் பிரதமருக்கு விபரிக்கப்படவுள்ளதோடு, இதனை கட்டுப்படுத்துவதற்கும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்குமான கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளவிருப்பதாக அமைச்சர் ஹலீம் தெரிவித்தார்

நாடு ­தி­ரும்­பிய பிர­த­ம­ரிடம் இன­வாத செயற்­பா­டுகள் குறித்து அமைச்சர் ஹலீம் சுட்டிக்காட்டினார்.. நாடு ­தி­ரும்­பிய பிர­த­ம­ரிடம் இன­வாத செயற்­பா­டுகள் குறித்து அமைச்சர் ஹலீம் சுட்டிக்காட்டினார்.. Reviewed by Madawala News on 6/13/2017 01:04:00 AM Rating: 5