Yahya

வாக்­கு­று­திகள் தாமதம் : தண்­ட­னை­யி­லி­ருந்து தப்­பித்­துக்­கொள்ள இட­ம­ளிக்க முடி­யாது


காணாமல்‍ போனோர் விவ­காரம் குறித்து ரவூப் ஹக்கீம் சபையில் வலி­யு­றுத்து

ஜெனீ­வாவில் வழங்­கப்­பட்ட வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­று­வதில் தாம­தங்­களை செய்து தண்­ட­னை­யி­லி­ருந்து தப்­பித்­துக்­கொள்­வ­தற்கு இட­ம­ளிக்க முடி­யாது என அமைச்சர் ரவூப் ஹக்கீம் சபையில் வலி­யு­றுத்­தினார்.


பாரா­ளு­ம­ன்றத்தில் புதன்­கி­ழமை காணா­மற்­போன ஆட்கள் பற்­றிய அலு­வ­லகம் (தாபித்­தலும், நிர்­வ­கித்­தலும், பணி­களை நிறை­வேற்­று­தலும்) திருத்­தச்­சட்­ட­மூ­லத்தின் இரண்­டா­வது மதிப்­பீட்டு விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.


அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில், 

காணா­மல் ­போ­ன­வர்கள் தொடர்­பான அலு­வ­லகம் செயற்­பாட்டு ரீதி­யாக இயங்­க­வில்லை. அவ்­வா­றான நிலையில் இந்த சபை­யிலே சில உத்­த­ர­வா­தங்­களை பிர­தமர் வழங்­கி­யுள்ளார்.


தமது சொந்தஉற­வுகள் காண­ாமல்­போகச் செய்­யப்­பட்­டதை கண்­ட­றி­வ­தற்­கான உத்­த­ர­வா­தங்­களே அவ்­வாறு வழங்­கப்­பட்­டி­ரு­கின்­றன.


2009இல் யுத்தம் நிறை­வ­டைந்­துள்­ளது. தற்­போது எட்டு வரு­டங்கள் நிறை­வ­டைந்­துள்­ளன. அவ்­வா­றான நிலையில் நிலை­மாறு கால நீதி தொடர்­பான பொறி­மு­றையை அமு­லாக்­கு­வ­தற்கு இந்த அலு­வ­ல­கத்­தினை ஸ்தாபித்­த­லா­னது முதற்­ப­டி­யாக அமையும் என கூறப்­பட்­டது.


 2015 ஒக்­டோபர் மாதம் ஜெனீவா தீர்­மா­னத்­திற்கு அமை­வாக நிலை­மாறு கால நீதியின் உள்­ள­டக்­கங்­க­ளான உண்மை மற்றும் மீளி­ணக்­காக செயற்­படல், மீள் நிக­ழா­மையை உறு­திப்­ப­டுத்தல், காணாமல் போன­வர்கள் சம்­பந்­த­மான விட­யத்­திற்கு தீர்­வ­ளித்தல் போன்ற விட­யங்­களில் கவனம் செலுத்த வேண்­டி­யுள்­ளது. 


சிறு­பான்மை குழு­வினை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் தலைவர் என்ற வகையில் நான் குற்­றத்­தி­லி­ருந்து தப்­பு­வதை ஏற்­றுக்­கொள்­ள­வில்லை. அவ்­வாறு ஏற்­றுக்­கொள்­ளவும் முடி­யாது.


ஆனால் இந்த காரி­யா­லயத்­தினை தாம­தப்­ப­டுத்தும் நிலை­மைகள் இங்கு தொடர்­வதை பார்க்­கின்­ற­போது கட்சி சார்­பான விருப்­புக்­களும், அர­சி­யலும் தான் அத்­தா­ம­தத்­திற்குப் பிர­தான கார­ணங்­க­ளாக இருக்­கின்­றன. 


தற்­போ­தைய ஆட்­சியில் உள்ள அர­சாங்கம் தனி­யா­ன­தொரு கட்சி அர­சாங்கம் அல்ல. பல்­வேறு கட்­சி­களின் கூட்­டாக காணப்­ப­டு­கின்­றது. அதே­நேரம் அர­சாங்­கத்தின் ஒரு கட்­சி­யி­லிருந்து பகு­தி­யாக பிரிந்து சென்று கூட்டு எதிர்க்­கட்­சி­யா­கவும் இருக்­கின்­றனர். அவர்கள் இந்த விட­யத்தில் சில கணி­ச­மான வேறு­பட்ட கருத்­துக்­களை கொண்­டி­ருக்­கின்­றார்கள். 


நாங்கள் ஐ.நா. மனித உரிமை பேர­வையில் வாக்­கு­றுதி அளித்­துள்ளோம். அவற்றை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­கான கால வரை­யறையும் வழங்­கப்­பட்­டுள்­ளது. 


அவ்­வா­றி­ருக்­கையில் உலக வல்­ல­ர­சுக்கு புதிய ஜனா­தி­ப­தி­யொ­ருவர் வந்­தி­ருக்­கின்றார். அவர் மனி­த ­உ­ரி­மைகள் விட­யத்தில் கடு­மை­யான நிகழ்ச்சி நிரல்­ப­டுத்தி அவ­தா­னிப்­பவர் இல்லை. ஆகவே மனித உரி­மைகள் விட­யத்தை சற்று தாம­தப்­ப­டுத்­தலாம். அல்­லது அதி­லி­ருந்து தப்­பித்­துக்­கொள்ள முடியும் என நாம் எண்­ண­மு­டி­யாது. 


குற்­ற­வியல் சட்­டங்­களில் ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்டு வலிந்து காணா­ம­லாக்­கப்­பட்­டமை குற்­ற­வியல் குற்­றங்­க­ளுக்குள் கொண்டு வரப்­ப­ட­ வேண்டும்.


அவ்­வா­றி­ருக்­கையில், காணிப்­பி­ரச்­சி­னையும் நிலை­மாறு கால நீதிக்குள் தான் வரு­கின்­றது. வடக்கு மாகா­ணத்தில் மட்­டு­மல்ல கிழக்கு மாகா­ணத்­திலும் இரா­ணுவ, கடற்­படை, விமா­னப்­படை முகாம்கள் பொது­மக்­க­ளுக்குச் சொந்­த­மான பகு­தி­களில் உள்­ளன. அங்கு சில நட்­சத்­திர ஹோட்­டல்கள் எல்லாம் மினுங்­கு­கின்­றன.  


வலி­காமம் வடக்­கிலே சில காணிகள் விடப்­பட்­டி­ருக்­கலாம். ஆனால் தோப்பூர் கிரா­மத்­திலே என்ன நடக்­கின்­றது.


அங்கு பத்துவீட்டுத்திட்டம் இருக்கின்றது. அங்குள்ள இராணுவ முகாமை அகற்றுமாறு நான் கோரினேன். நேரடியாக சென்று அந்த இராணுவ முகாமை நீக்குமாறு கோரினேன். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடினேன். இருப்பினும் அதில் தாமதங்களே காணப்படுகின்றன. 


இவ்வாறான நிலையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நாம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பதை இந்த உயரிய சபையில் மீண்டும் குறிப்பிடுகின்றேன் என்றார்.

வாக்­கு­று­திகள் தாமதம் : தண்­ட­னை­யி­லி­ருந்து தப்­பித்­துக்­கொள்ள இட­ம­ளிக்க முடி­யாது வாக்­கு­று­திகள் தாமதம் : தண்­ட­னை­யி­லி­ருந்து தப்­பித்­துக்­கொள்ள இட­ம­ளிக்க முடி­யாது Reviewed by Madawala News on 6/24/2017 02:38:00 AM Rating: 5