Ad Space avaiable

ரோஹிங்யா பெண்ணை துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது !


29ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யல்

இலங்­கையில் தங்­கி­யி­ருக்கும் மியன்மார், ரோஹிங்­யா யுவதி ஒரு­வரை பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய்த மிரி­ஹான பொலிஸ் நிலை­யத்தில் கட­மை­யாற்றும் பொலிஸ் கான்ஸ்­டபிள் ஒருவர் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.


இவரை நேற்­றைய தினம் நுகே­கொட பதில் நீதிவான் முன்­னி­லையில் ஆஜர்­ப­டுத்­தி­ய­போது, எதிர்­வரும் 29ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறும் சந்­தேக நபரின் அடை­யா­ளத்தை உறு­திப்­ப­டுத்த அடை­யாள அணி­வ­குப்பை நடாத்­து­மாறும் நீதிவான் உத்­த­ர­விட்டார்.


பொலிஸ் கான்ஸ்­ட­பி­ளான குறித்த நபர், குற்றம் இடம்­பெற்ற நாளி­லி­ருந்து தலை­ம­றை­வா­கி­யி­ருந்த நிலை­யி­லேயே நேற்று முன்­தினம் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

பாதிக்­கப்­பட்ட ரோஹிங்­யா அகதிப் பெண்­ணுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்­கும் ­வ­கையில் ஆர்.ஆர்.ரி. அமைப்பு சட்ட உதவிகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ரோஹிங்யா பெண்ணை துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது ! ரோஹிங்யா பெண்ணை துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது ! Reviewed by Madawala News on 6/27/2017 12:27:00 PM Rating: 5