Kidny

Kidny

சவூதி - கட்டார் பிரச்சினை... சம்பிக ரணவக்க கொடுக்கும் விளக்கம் இது.


சவூதி அரேபியா அடங்கலான நாடுகளுக்கும் கட்டாருக்கும் இடையில் ஏற்பட்டுள்ள மோதல் எதிர்காலத்தில் மேலும் மோசமடைந்து இந்து சமுத்திரத்திற்கும் இலங்கைக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் அபாயம் காணப்படுவதாக மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக ரணவக்க தெரிவித்தார்.

மத்திய கிழக்கு நிலைமை தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்:

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது முதலாவது வெளிநாட்டு விஜயத்தை மத்திய கிழக்கு நாட்டிலேயே ஆரம்பித்தார். சவூதி அரேபியாவில் சவூதி அரேபியா, எகிப்து, பஹ்ரேன் போன்ற நாடுகளின் தலைவர்கள், அமைச்சர்கள் ஐம்பது பேர்வரை கொண்ட அரபு மன்றத்தில் அவர் உரையாற்றினார்.

இவை அனைத்தின் மூலமாக எமக்கு தெரிய வருவது என்னவென்றால் சுன்னிமுஸ்லிம் வாத திட்டத்தின் மூலம் கட்டார் ராஜயத்தை தனிமைப்படுத்தும் நடவடிக்கையாகும். ஆனால் அவர்கள் குற்றஞ்சாட்டும் தீவிரவாத நிறுவனங்கள் அனைத்தும் சுன்னி மத பிரிவுக்குரியதாகும். இங்கு விசேடமாக கட்டார் இராச்சியம் தன்னுடைய தலைநகரான டோஹா நகரத்தை அரேபியாவின் பிரதான வணிக மத்திய நிலையமாக மாற்ற பெரும் போட்டியில் ஈடுபட்டுள்ளது.

விசேடமாக துபாயும், யூ. ஏ. ஈயும் கட்டாருக்கு எதிராக இந்த கூட்டணியில் இணைந்துள்ளன. இந்த இணைப்பானது கட்டார் விமான சேவை, அல்ஜஸீரா தொலைக்காட்சி மற்றும் டோஹா நகரை தோல்வியடையச் செய்யும் நோக்கில் அமைந்ததாகும்.

இது தொடர்பாக கருத்து தெரிவிப்பவர்கள் அநேகர் கூறுவது என்னவென்றால் குறிப்பாக அல்ஜஸீரா தொலைக்காட்சி கூறுவது என்னவென்றால் பயங்கரவாதத்துக்கு உதவி செய்ததாக கட்டார் மீது விரலை நீட்டும் போது ஏனைய நான்கு விரல்களும் சவூதி அரேபியா, யூ. ஏ. ஈ. இராச்சியம், பஹ்ரேனை சுட்டிக் காட்டுவதாக கூறுகின்றது.

மேலும் அவர்கள் ஜ.எஸ்.ஐ .எஸ், அல்கைதா, அல் நுஸ்ரா போன்ற பயங்கரவாத அமைப்புகள் பலவற்றின் உயர் தலைவர்களான ஒஸாமா பின் லேடனிலிருந்து அனைவரும் சவூதியை சேர்ந்தவர்களென்றும். நவம்பர் 11 தாக்குதலுக்கு அமெரிக்கா சென்று தாக்குதலில் ஈடுபட்ட 19 பேரில் 15 பேர் சவூதி அரேபியர்கள் என்றும் கூறுகின்றது.

அதேபோல் உலகம் பூராவும் வஹாப் வாதத்தை பரப்புவதற்காக நிதி வழங்கியதும் சவூதி அரேபியா என்று கூறுவதோடு வியாபாரம், சமூக நல நிறுவனங்கள், வங்கிகள் என பாரிய அளவிலான பெயர் பட்டியலையும் கட்டார் வெளியிட்டுள்ளது.

இதற்கு முன்னரும் சவூதியின் வங்கிகள் பலவற்றை அமெரிக்கா பயங்கரவாதத்துக்கு உதவி செய்வதாக தடைசெய்திருந்தது.

இதிலுள்ள மிக முக்கிய விடயம் கட்டார் இராச்சியத்தின் வாயு குழாய் தொகுதி சிரியாவுக்கு ஊடாக மத்திய தரை கடலுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. நீண்ட காலமாக ரஷ்யாவை பணிய வைக்க ஐரோப்பிய சங்கம் கட்டார் அரசிடம் இந்த குழாய் தொகுதியை கேட்டிருந்தது. கட்டாரினூடாக இத்தாலிக்கு வாயு குழாய் தொகுதி கிடைத்தால், ரஷ்யாவின் வாயு குழாய் தொகுதி மூலம் எரிபொருள் சுயாதீனத்துக்கு ஏற்பட்டுள்ள அழுத்தத்தை குறைக்க முடியுமென நம்புகின்றார்கள். தற்போது ரஷ்யா சிரியாவை நோக்கிப் பயணிப்பதன் முக்கிய காரணமும் வாயு குழாய் தொகுதியை தடுப்பதற்காகவேயாகும்.

எமது நாட்டவர்கள் கட்டார், சவூதி அரேபியா, அதேபோல் அரேபியாவின் ஏனைய நாடுகளிலும் இலட்சக் கணக்கில் பணியாற்றுகின்றார்கள். அவர்களின் தொழிலுக்கு மாத்திரமல்ல அதற்கும் அப்பால் இலங்கை அரசியல் மோதலுக்கும் ஆரம்பமாக அமையக்கூடுமென கூறப்படுகின்றது.

இந்நிலைமையில் சவூதி – கட்டார் மோதல் வெறும் ஐ.எஸ்.ஐ,எஸ் பயங்கரவாதத்துக்கு நிதி உதவி வழங்குவதற்கு அப்பால் சென்று இயற்கை அரசியல் மற்றும் இயற்கை எரிபொருள் தொடர்பான மோதல் என்பது தெளிவாகின்றது. அம்மோதலின் அதிர்வலைகள் இந்து சமுத்திரத்துக்கு மாலைதீவினூடாக எதிர்காலத்தில் வர வாய்ப்புள்ளது என்பதை நாம் அனைவரும் சிந்திக்க வேண்டுமென கூறினார்.
சவூதி - கட்டார் பிரச்சினை... சம்பிக ரணவக்க கொடுக்கும் விளக்கம் இது. சவூதி - கட்டார் பிரச்சினை... சம்பிக ரணவக்க கொடுக்கும் விளக்கம் இது. Reviewed by Madawala News on 6/14/2017 04:43:00 AM Rating: 5