tg travels

அனர்த்த பாதிப்பு தொடர்பான பொலிஸ் முறைப்பாடு சிங்கள மொழியில் மாத்திரம் - தமிழ் பேசுவோர் கவலை.



அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் சொத்து இழப்புக்கள் தொடர்பில் பொலிஸ் நிலையங்களில்  தனியான பிரிவின் மூலம் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

எனினும் இது தொடர்பாக  பொலிஸார் மூலம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ள குறித்த விண்ணப்பப்படிவம் சிங்கள மொழியில் மாத்திரமே வெளியிடப்பட்டுள்ளது.

 குறிப்பாக இம்முறை ஏற்பட்ட அனர்த்ததில் சிங்கள மக்கள் மாத்திரமின்றி தமிழ் பேசும் மக்கள் பலரும் பாதிக்கப்பட்டனர்.ஆனால் சிங்கள மொழியில் மாத்திரம் விண்ணப்பம் உள்ளதால் அதனை உரிய முறையில் நிரப்பிக் கொடுப்பதில் சிங்கள மொழி தெரியாத மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர் .சிலர் விண்ணப்பிப்பதையும் தவிர்த்துக் கொண்டுள்ளனர்.

இலங்கையில் தமிழ் மொழியும் அரசகரும மொழிகளுள் ஒன்றாக அங்கிகரிக்கப்பட்டுள்ள போதிலும் மேற்படி விடயாத்தில் தமிழ் பேசும் மக்களுக்கு இடம்பெற்றுள்ள அநீதி தொடர்பில் தமிழ் முஸ்லிம் சமூகத்  தலைமைகள் தொடர்ந்தும் அவதானம் செலுத்த மறுப்பது தொடர்பில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அத்துடன் அனர்த்த பாதிப்புக்கள் தொடர்பான தகவல்சேகரிப்புப் பணியில் தமிழ் பேசும் அதிகாரிகளையும் இணைத்துக் கொள்ளுமாறும் பாதிக்கப்பட்ட மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

எம்.எல்.எஸ்.முஹம்மத் 
இரத்தினபுரி 


அனர்த்த பாதிப்பு தொடர்பான பொலிஸ் முறைப்பாடு சிங்கள மொழியில் மாத்திரம் - தமிழ் பேசுவோர் கவலை.  அனர்த்த பாதிப்பு தொடர்பான பொலிஸ் முறைப்பாடு சிங்கள மொழியில் மாத்திரம் - தமிழ் பேசுவோர் கவலை. Reviewed by Madawala News on 6/09/2017 01:57:00 PM Rating: 5