tg travels

போதைப் பொருள்கள் (Drugs)


போதைப்பொருள் பாவனை (Drugs Abuse) என்றால் என்ன?
--------------------------------------
மருத்துவ நோக்கம் தவிர்ந்த உடம்பில் அல்லது
சிந்தனையில் மாற்றம் ஏற்படுத்துவதற்காக பாவிக்கப்படுகின்ற மருந்து/இரசாயன பதார்த்தமாகும்.

போதைப்பொருளில் தங்கியிருத்தல்(Drugs Dependency):
--------------------------------------
போதை பொருளை பாவனையில் உள்ளவர் தமது அன்றாட உடல்,சிந்தனை செயற்பாடுகள் போதை பொருளின்றி முடியாது என்ற உளவியல் ரீதியான எண்ணமாகும்.

போதைப்பொருள் சகிப்புத்தன்மை(Drugs Tolerance)
--------------------------------------
தொடர்ச்சியாக போதைப்பொருள் பாவனையிலுள்ளவர்கள் அவர் எதிர்பார்க்கும் மாற்றத்திற்குறிய போதைப்பொருளின் அளவு போதாமையினால் தொடர்ச்சியாக தாம் பாவிக்கும் போதைப்பொருளின் அளவை அதிகரித்து கொண்டே செல்லல்.

போதைப்பொருள் பாவனை உடன் நிறுத்தப்படும் போது ஏற்படும் விளைவு(Drugs Withdrawal Reaction)
--------------------------------------
போதைப்பொருள் பாவனையிலுள்ளவர் உடனடியாக நிறுத்துகின்ற போது பயம்,கோபம்,தலையிடி,தூக்கமின்மை,
மனஅழுத்தம்,உடம்பு நடுக்கம்,சமூகத்தை விட்டு ஒதுங்கியிருத்தல் போன்ற அறிகுறிகளாகும்.இவை சில காலங்களுக்கு இருக்கும்.

போதைப்பொருள் பாவனை உலக,இலங்கை சனத்தொகை பரம்பலில்
••••••••••••••••••••••••••••••••••••
2013 ஆம் ஆண்டு புள்ளிவிவரங்கள் படி உலகில் 246 மில்லியன் பேர் போதைப்பொருள் பாவனையிலுள்ளனர்.ஏறத்தாழ உலக சனத்தொகையில் 20பேரில் ஒருவர்.அதே ஆண்டில் மட்டும் 187000 பேரின் மரணத்திற்கு போதைப்பொருள் காரணமாக இருந்துள்ளது.
கூடுதலாக நகர்ப்புறங்களிலே இதன் பாவனை அதிகம்.
ஆண்,பெண் விகிதாசாரம் 10:1 ஆகும்.
இலங்கையில் 2015ஆம் ஆண்டு ஜனவரி தொடக்கம் ஜூன் வரை 8570பேர் போதைப்பொருளுடன் சம்பந்தப்பட்டதாக கைது செய்யப்பட்டிருந்தனர்.இதில் 21% 30-34 வயதையுடையவரகள்.மேல் மாகணத்தில் 38% கொழும்பில் 2350 பேர்கள்.

உலக,இலங்கை ரீதியாகவும் பல்வேறு போதைப்பொருள் பாவனைக்கெதிராக பல திட்டங்கள் வகுத்துள்ள போதும் இதன் பாவனை அதிகரித்து கொண்டே செல்கிறது.இலங்கையில் தற்போது பாடசாலை மாணவர்களும் இதற்கு இலக்காகி நாளடைவில் அடிமையாகி அவர்களது வளமான எதிர்காலத்தை இழக்கின்றனர்.

போதைப்பொருள்களின் வகைகள்
••••••••••••••••••••••••••••••••••••
1)Opiates(Narcotics)-உலக சனத்தொகையில் 32.4மில்லியன் மக்கள் இதை பாவிக்கிறார்கள்.அமெரிக்கா,கனடா,பிரித்தானிய நாடுகள்,
ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இதன் பாவனை அதிகம்.Heroin,Morphine,Methadone,

Codeine போன்ற பலவகைகள் உண்டு.இவற்றில் பெரும்பாலானவை மருத்துவ துறையில் நோவுக்கான(Pain) மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.இவற்றில்
ஆகக்குறைந்த வினைத்திறன் உடையதாக வைத்தியசாலையில் சாதாரணமாக பயன்படுத்தப்படுகின்ற Tramadolஉம் அடங்கும்.இது குறிப்பிட்ட காலத்திற்கு முன் இலங்கையில் கூடுதலாக துஸ்பிரயோகம் செய்யப்பட்டதால் அரசாங்கத்தால் முற்று முழுதாக நிறுத்தப்பட்டது.தற்போது வைத்தியசாலை தவிர்ந்த ஏனைய இடங்களில் விநியோகிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.நாம் சாதாரணமாக பாவிக்கும் Panadiene,Rapidiene,Bronchodex,
Bronchodiene,Corex-D இவற்றிலும் Codiene சிறிதளவு உள்ளது.இவற்றில் சிலவற்றையும் பலர் துஸ்பிரயோகம் செய்வதால் தற்போது அரசாங்கத்தால் நிறுத்தப்பட்டுள்ளது.

2)Coccaine
3)Cannabis(Marijuana-கஞ்சா)
4)Methamphetamine
போன்ற பல வகைகள் அறிய முடிகிறது.

போதைப்பொருள் பாவனை முறைகள்
••••••••••••••••••••••••••••••••••••

1)போதைப்பொருள் நேரடியாக வாயினால் உள்ளெடுத்தல்/சாப்பிடுதல்(41%)
2)புகைத்தல் மூலம்(21%)
3)ஊசிகள் மூலம் ஏற்றல்
இதை விட Sniff மற்றும் Chinese முறைகளாகும்.

போதைப்பொருள்கள் மனிதனில் மூளையில்,உடம்பில் எவ்வாரான மாற்றத்தை ஏற்படுத்துகின்றன?
••••••••••••••••••••••••••••••••••••

மனித மூளை கோடிக்கணக்கான நரம்பு கலங்களினால் உருவாக்கப்பட்டிருக்கும்.இவை மூலமே உடம்பிற்கு கணத்தாக்கம்(Transmission)
கடத்தப்படுகிறது.ஒவ்வெரு நரம்பு கலங்களுக்குமிடையே உள்ள முனையில் நரம்பு கணத்தாக்கி பதார்த்தம்(Neuro Transmitter)சுரக்கப்பட்டு கணத்தாக்கம் கடத்தப்பட உதவுகிறது.இதன் மூலம் மூளையிலும்,உடம்பிலும் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன.
போதைப்பொருள் பாவனையின் போது இதன்மூலம் மாற்றப்பட்ட இரசாயன பதார்த்தங்கள் இரத்ததின் மூலம் மூளைக்கு கடத்தப்பட்டு இவை போலியான Neurotransmitter ஆக தொழிற்படும்.பின்னர் இவை நரம்பு கல முனைகளில் உண்மையான Neurotransmitter உடன் போட்டியிட்டு அவைகளை தொழில்பட செய்யாது இவைகள் செயற்பட தொடங்கும்.உதன்மூலம் மூளையிலும்,உடலிலும் வழமைக்கு மாற்றமான செயற்பாட்டை ஏற்படுத்தும்.

போதைப்பொருள் பாவனையினால் ஏற்படும் விளைவுகள்
••••••••••••••••••••••••••••••••••••

இது தனி மனித,குடும்ப,சமூகம் சார்ந்த பரந்த விளைவுகளாக அமையும்.
தனிமனித பிரச்சனைகள்-
------------------------
நினைவு மறதி,கற்றல் பிரச்சினை,புலன்களில் ஏற்படும் பிரச்சனைகள்(பார்வை,கேட்டல்),பயம்,
மனஅழுத்தம்,தலையிடி,மயக்கம், பற்களில் ஏற்படும் பிரச்சனைகள்,தனிமைப்படல்,அடிக்கடி எண்ணம் மாறுதல்(Mood Swing),தற்கொலை முயற்சி,வலிப்பு(Fit),இதய துடிப்பு அதிகரித்தல்/இதயம் படபடவென்று அடித்தல்(Palpitation),AIDS/HIV,Hepatitis இல்லாதது இருப்பது போன்று தோற்றமளித்தல்(Hallucinations),மருட்சி
(Delusions),Agitation,Irritable,Problem in Decision making,Confusion, Disrupt Coordination,Slurred Speech,Poor judgment,Difficult to Concentrate போன்றவையாகும்.இதைவிட நீண்டகால பாவனையின் போது நுரையீரல் புற்றுநோய்,நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு போன்ற பிரச்சினைகளும் ஏற்படும்.

குடும்பம்:
------------
அடிக்கடி வீட்டில் பிரச்சினை,தொழிலின்மை/தொழிலை இழத்தல்,திருமணம்/விவாகரத்து,குடும்ப உறுப்பினர்கள் சமூகத்தில் தலை குனிய வேண்டிய நிலமை போன்றவையாகும்.

சமூகம்:
--------
நல்ல நண்பர்களை இழத்தல்,மற்றவர்களையும் போதைப்பொருளுக்கு அடிமையாக்க எத்தனித்தல்,நிதி ரீதியான பிரச்சனைகள்
என்பனவாகும்.

சட்ட ரீதியான பிரச்சனைகள்:
----------------------------
அடிக்கடி மற்றவர்களுடன் சண்டை பிடித்தல்,வாகன ஓட்டலும் வீதி விபத்துக்களும்,திருடல்,கடத்தல்,
கொலை,கொள்ளை என அடிக்கடி பொலிஸாரால் கைது செய்யப்படல்.

போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் வேறோரு உலகத்திலுள்ளவர்களைப்போலவே நடந்து கொள்வார்கள்.போதைப்பொருள் இல்லாமல் இவர்களால் எதையும் செய்ய முடியாத நிலை ஏற்படும்.இதற்காக எதையும் செய்வார்கள்.ஏன் தமது பெற்றோர்களை கூட கொலைசெய்ய தயங்கமாட்டார்கள்.

எவ்வாரனவர்கள் போதைப்பொருளை நாடுகிறார்கள்
••••••••••••••••••••••••••••••••••••
1)குடும்பத்தில் ஏற்படுகின்ற பிரச்சினைகள்#குழந்தைகளின் முன்னால் பெற்றோர்கள் சண்டை பிடித்தல்,பெற்றோர்கள் குழந்தைகளுடன் நேரம் ஒதுக்காமை,கணவன் மனைவி இடையான பிரச்சனைகள்....போன்றவையாகும்.

2)மோசமான நண்பர்களுடனான உறவு
3)தோல்வி,இழப்புகளை தாங்கிகொள்ள முடியாமை(பரீட்சை,வியாபாரம்,காதல் போன்றவற்றில் ஏற்படுகின்ற தோல்விகள்,நெருங்கிய உறவினர்களின் இழப்பை தாங்கி கொள்ள முடியாமை.....)
4)தாழ்வு மனப்பான்மை((Inferiority Complex)
5)தன்னம்பிக்கை இல்லாமை(Lack of Self confidence)
இவற்றுக்கு மேலாக ஆன்மிகத்திலுள்ள குறைபாடே முதன்மை காரணியாக அமைகிறது.

போதைப்பொருள் பாவனையிலுள்ளவர்களை விடுவிப்பது/போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவது எவ்வாறு?
••••••••••••••••••••••••••••••••••••

இதில் தனி மனிதன்,குடும்பம்,சமூகம் எல்லோரினது ஒத்துழைப்புடனே இதை செய்ய முடியும்.
1)Primary Prevention-போதைப்பொருள் கடத்தல்,போதைப்பொருள் வியாபாரம்,போதைப்பொருள்களை உற்பத்தி செய்தல்,இவற்றுக்கு உதவி செய்தல் என்பவற்றில் தீவிர கண்கானிப்புடன் இருப்பது மாத்திரமன்றி இதை மீறுபவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கள்.இது சம்பந்தமான குற்றங்களுக்கு வெவ்வேறு நாடுகளில் தண்டனை வித்தியாசப்பட்டாலும் பெரும்பாலான நாடுகளில் ஆயுள்,மரண தண்டனைகள் வரை வழங்கப்படுகிறது.

2)Secondary Prevention-
போதைப்பொருள் சம்பந்தமாக போதிய கல்வியை,தெளிவை மக்களுக்கு வழங்கள்.இவை செய்திகள்,விளம்பரங்கள்,வீதி நாடகங்கள்,சித்திரங்கள்,சமூக வலைத்தளங்கள்,கருத்தரங்குகள் போன்றவற்றினுடாக பொதுமக்கள்,மாணவர்களுக்கு தெளிவுபடுத்தல்.

3)Tertiary Prevention:
போதைப்பொருள் பாவனையிலுள்ளவர்களை தனி நபர்,குடும்பம்,சமூகம் என்பன கூட்டாக
ஒன்றினைந்து அதிலிருந்து மீள செய்தலாகும்.இதில் Counseling,Behavior Therapy,Vocational Therapy,Drugs Therapy,Financial Support,Spiritual Therapy என்பன அடங்கும்.

இலங்கையில் National Dangerous Drugs Control Board என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.1984 என்ற தொலைபேசி எண்ணை அழுத்துவதன் மூலம் மேலதிக தரவுகளை பெற முடியும்.

நன்றி
Dr. A.H. Subiyan
MBBS(SL),Diploma in Psychology (SL)
General Scope Physician 
Doha-Qatar.

போதைப் பொருள்கள் (Drugs) போதைப் பொருள்கள் (Drugs) Reviewed by Madawala News on 6/11/2017 12:04:00 PM Rating: 5