Kidny

Kidny

நோன்புப் பெருநாள், ஊரே அழுதது கண்ணீரால்! எஹலியகொட சோகம்.


எஹலியகொடையே மூழ்கியது
சோகத்தால்!
முதல் நோன்பு ஊரே நனைந்தது வெள்ளத்தால்!
நோன்புப் பெருநாள், 
ஊரே அழுகிறது
கண்ணீரால்!
 
எட்டு வயது அப்துல்லாஹ்
பெரியம்மாவோடு 
சந்தூக் பயணத்திற்கு 
ஜனாஸாவாக!

நேற்றைய இரவு 
பல ஊர்களில் மருதாணி வாசம் வீச
நம்மூரில்  கண்ணீர் காவியமானது!

பித்ரா கொடுக்கப் போன
குடும்பம்
பிரிந்து போனது 
இரு ஜனாஸாக்களாய்
வாகனவிபத்து!

இறை நாட்டம்
புத்தாடை வாங்கியது 
அப்படியே
கபனாடை அலங்கரித்தது அவர்களை!

பெரியம்மாவின்  மகள் கூட 
கர்ப்பிணியாய் காயங்களோடு!
அப்துல்லாஹ்வின் தாய் கூட
அப்பாவியாய் முத்தமழை பொழிகிறாள்
உயிரற்ற அவன் கன்னத்தில்!
அவனோ அழகான நித்திரையில்
விழிப்பான் சுவனத்தில்
அவன் பெரியம்மாவோடு
இன்ஷா அல்லாஹ்!

பெருநாளென்று பாராது
பெருந்திரளான ஊர்மக்கள்  பெருகி வந்தனர் மண்ணோக்கிய 
பயணத்தில்!

ஒவ்வோர் விபத்தும் 
என்னுள் ஈமானிய தழும்புகளை 
வழுவாக தந்திட்டு
நொந்து போன நிமிடங்கள்
கண்கள் கோர்த்த கறைகள்
திடீர் மரணங்கள்!

யா ரப்!
அவர்கள் குறைகளை 
மன்னித்து
மேலான சுவனத்தை அருள்வாயாக.
அந்த குடும்பம் இரண்டு 
உயிர் பந்தங்களை பிரிந்த நிலையில்
பொறுமையை அதிகமாய் 
கொடுத்திடுவாயாக 

இதனை படித்த உங்கள் பிரார்த்தனைகளிலும்
இவர்கள் இடம்பிடிக்கட்டும்
இன்ஷா அல்லாஹ்!

எம் எல்லோருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக!

பின்த் அக்ரம்
எஹலியகொடை
26/06/2017
நோன்புப் பெருநாள், ஊரே அழுதது கண்ணீரால்! எஹலியகொட சோகம். நோன்புப் பெருநாள்,  ஊரே அழுதது கண்ணீரால்! எஹலியகொட சோகம். Reviewed by Madawala News on 6/27/2017 01:23:00 PM Rating: 5