Ad Space avaiable

பலருக்கும் உள்ள சந்தேகம். ( ஐயமும் தெளிவும்)



கேள்வி: பெருநாள் தினத்தில் வாழ்த்து கூறலாமா? துஆ செய்யலாமா?

பதில்: ஆம் தாராளமாக வாழ்த்துக்கள் கூறலாம் துஆக்கள் செய்யலாம் அதில் எந்த குற்றமும் இல்லை அது ஒரு சந்தோஷத்தின் வெளிப்பாட்டை காட்டும் அடையாளங்கள் ஆகும் அதிலும் அதிகம் ஸலாம் சொல்லுவது

பிரச்சினை என்னவென்றால் 

"ஈத் முபாரக்"

என்ற வார்த்தைகளை அது அரபி வார்த்தையாக இருக்கின்ற காரணத்தால் மக்கள் நினைக்கிறார்கள் அப்படி சொல்லுவது ஒரு நபிகளாரின் வழிகாட்டல் (ஸுன்னா) வாக இருக்கும் என்று நினைத்து அதை மக்கள் பெருநாள் தினத்தில் அதிகம் அதிகம் சொல்லக்கூடியவர்களாக இருக்கிறார்கள்

பெருநாள் தினத்தின் அதிகம்
"அல்லாஹு அக்பர்" என்று தக்பீர்களை சொல்லும் படி நபியவர்கள் ஏவி உள்ளார்கள் 

தக்பீர் சொன்னார்களோ இல்லையோ
"ஈத் முபாரக்" என்று அதிகம் சொல்லுகிறார்கள்

எந்தளவுக்கென்றால் தொலைபேசியில் கம்பணி காரண் கோல் பன்னினாலும் அதை சரியாக கவனிக்காமல் முந்தி அடிச்சிகிட்டு "ஈத் முபாரக்" என்று சொல்லக்கூடியவர்களாக தான் நம் சமூகம் இருக்கிறார்கள் 

சந்திக்கும் அனைவருக்கும் ஸலாம் சொல்லுவதை விட்டு விட்டு முதலில் பயண்படுத்தும் வார்த்தை "ஈத் முபாரக்"

இருக்கும் அனைத்து மீடியாக்களிலும் பரப்புவது "ஈத் முபாரக்கை"

இப்படி "ஈத் முபாரக்" என்ற சொற்களை அல்லாஹ்வுடைய தூதர் தங்கள் வாழ்நாளில் கொண்டாடிய பெருநாள்களில் எங்காவது பயண்படுத்தி இருக்கிறார்களா? 

என்று தேடிப் பார்த்தால் அப்படி சொன்னதாக எங்கும் இல்லை ஆகவே அந்த வார்த்தைகளை சுன்னத் என்ற நோக்கத்தோடு பயண்படுத்துவது "பித்அத்" ஆகும்

ஸுன்னத் என்ற நோக்கத்தில் பயண்படுத்தாமல் நாம் அதை ஒரு வாழ்த்தாகவே பயண்படுத்துகிறோம் என்று சிலர் சொன்னாலும் அதுவும் சிலர் ஸுன்னா என்று நினைத்து செய்வதற்கு நாம் காட்டிய ஒரு வழியாகவும் போய் விடும் என்ற காரணத்தால் 

நாம் பேசுகின்ற அந்த அழகிய மொழிகளில் பிறரை தாரளமாக வாழ்த்துவோம்

#அடுத்தது பெருநாள் துஆ என்று சொல்லப்படும் 

"தகப்பலல்லாஹு மின்னா வமின்கும்" (அல்லாஹ் என்னையும் உங்களையும் பொருந்திக்கொள்வானாக!)

சிறந்த கருத்தை தரும் துஆ தான் மாற்றுக் கருத்து இல்லை ஆனால் இந்த துஆ சம்பந்தமாக வரும் அறிவிப்புக்கள் பலகீனமாகவே உள்ள காரணத்தால் எவ்வளவு நல்லதாக இருந்தாலும் தவிர்த்து தான் ஆக வேண்டும்

உ+த: நோன்பு திறக்கும் போது ஓதும் துஆ என்று ஒரு காலத்தில் நாம்

"தஹபள்ளம ஊ வப்தலதில் உரூகு வஸபதில் அஜ்ரு இன்ஷா அல்லாஹ்"
(தாகம் தணிந்தது நரம்புகள் நணைந்தது நீ நாடினால் கூலியை தருவாய்)

என்று துஆவை ஓதி வந்தோம் அது எவ்வளவு சிறந்த கருத்தை தர கூடிய துஆ 

அப்படி என்று சொல்லி அது பலகீனமான செய்தி என்று தெரிந்த பின்பும் நாம் ஓதுகிறோமா? இல்லை அந்த அடிப்படையில் இந்த துஆவும் ஸுன்னா கிடையாது 

ஆகவே வாழ்த்தாக இருந்தாலும் சரி துஆவாக இருந்தாலும் சரி நாம் பேசுகின்ற மொழியால் அதிகம் அதிகம் சொல்லிக்கொள்வோம்

பித்அத்தை செய்கின்றவர்களாகவும் அதற்கு வழிவகை செய்து கொடுப்பவர்களாகவும் நாம் இருந்து விடக்கூடாது 

அல்லாஹ் நம் அனைவரையும் பொருந்திக்கொள்வானாக!

இவண்,
ஸாஜித் அஹமட் கியாஸ்தீன்
மஸ்ஸல,பேருவளை
பலருக்கும் உள்ள சந்தேகம். ( ஐயமும் தெளிவும்) பலருக்கும் உள்ள சந்தேகம். ( ஐயமும் தெளிவும்) Reviewed by Madawala News on 6/26/2017 08:11:00 PM Rating: 5