tg travels

பெரஹரா ஊர்வலத்தின் போது யானை தாக்கி இளம் பௌத்த பிக்கு மரணம்.


கட்டான பிரதேசத்தில் பெரஹரா ஊர்வலத்தின் போது யானை தாக்கி பௌத்த பிக்கு ஒருவர் மரணமடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கட்டான வர்தனாராம விகாரையின் வருடாந்த பெரஹராவின் போது (11.6.2017) யானையால் தாக்கப்பட்ட தேரர் பின்னர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிட்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் (12.6.2017) அதிகாலை வேளை மரணமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மரணித்தவர் எப்பாவலை பிரதேசத்தில் ஒரு பிரிவெனாவில் ஆசிரியராக கடமையாற்றியவா. என்றும் அவர் 25 வயதுடையவர் எனவும்    தெரிவிக்கப்படுகிறது.

 அதேநேரம் இவர் களனி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது தொடrபான பிரேத பரிசோதனை மற்றும் மரண விசாரணைகள் இடம் பெற உள்ளன.

பெரஹரா ஊர்வலத்தின் போது யானை தாக்கி இளம் பௌத்த பிக்கு மரணம். பெரஹரா ஊர்வலத்தின் போது யானை தாக்கி இளம் பௌத்த பிக்கு மரணம். Reviewed by Madawala News on 6/12/2017 11:08:00 AM Rating: 5