Ad Space avaiable

தீவிரவாதத்துக்கு கத்தார் உதவுகிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.


-அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்-

தீவிரவாதத்துக்கு கத்தார் உதவுகிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று துருக்கி  ஜனாதிபதி எர்டோகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜனாதிபதி எர்டோகன் கூறும்போது, "தீவிரவாதத்துக்கு கத்தார் உதவுவதாக இதுவரை நான் அறிந்ததில்லை. சவுதி மற்றும் அதன் கூட்டு நாடுகள் கத்தார் மீது சுமத்தியுள்ள குற்றச்சா ட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை" என்றார்

வளைகுடா நாடான கத்தார் இஸ்லாமியக் குழுக்களுக்கு ஆதரவளித்து தீவிரவாதத்தை வளர்ப்பதாகக் கூறி தங்கள் ராஜாங்க உறவுகளைத் துண்டித்துக் கொள்வதாக சவுதி அரேபியா, பஹ்ரைன், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 4 அரபு நாடுகளும் அறிவித்துள்ளது.

ஆனால் சவுதி மாற்று அரபு நாடுகளின் இந்த முடிவை துருக்கி ஜனாதிபதி ஆரம்பம் முதலே விமர்சித்து வந்துடன் கத்தரவுடனான துருக்கியின் உறவு தொடரும் என்று அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது
தீவிரவாதத்துக்கு கத்தார் உதவுகிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. தீவிரவாதத்துக்கு கத்தார் உதவுகிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. Reviewed by Madawala News on 6/10/2017 11:40:00 PM Rating: 5