Kidny

Kidny

பாதிக்கப்பட்ட மக்களுக்காக கை கோர்த்த பேஸ்புக் நண்பர்கள். களத்தில் இறங்கி உதவிகளை வழங்கினர். (படங்கள்)

அண்மையில் ஏற்பட்ட பாரிய வெள்ளத்தில் அதிகளவில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் களுத்துறை மாவட்டமும் பிரதானமானது. அதிகளவான மழைவீழ்ச்சி, வெள்ளம், மண்சரிவினால் பாதிக்கப்பட்ட லயங்களில் வாழும் மக்களுக்காக கை கோர்த்திருக்கிறார்கள் பேஸ்புக் நண்பர்கள்.

வறுமைக்கோட்டின் கீழ் உள்ள தோட்ட தொழில் செய்யும் மக்களை அதிகம் கொண்ட புலத்சிங்ஹல பகுதி மக்கள் அனர்த்த இடர்பாடுகளில் சிக்கி தமது இயல்பு வாழ்க்கையை இழந்திருப்பதாகவும், சரியான உதவிகள் தங்களை வந்தடையவில்லை எனவும் தெரிவித்ததோடு பேஸ்புக் பயனர்களுக்கு நன்றி கூறி உலர் உணவுப் பொருட்களை பெற்றுக் கொண்டதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.

ரிமாஸ் அகமட், அமேஷ்வரன், ப்ரகாஷ், மாதவன், பிரதீப், ஸபர் அஹமட், இம்ராத், ஜமீல், பார்த்தீபன், அப்துல்லாஹ் போன்றோரால் முன்னெடுக்கப்பட்ட இந்த திட்டத்தில் பேஸ்புக் நண்பர்கள் பலரின் உதவியுடன் சுமார் 350 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.


பாதிக்கப்பட்ட மக்களுக்காக கை கோர்த்த பேஸ்புக் நண்பர்கள். களத்தில் இறங்கி உதவிகளை வழங்கினர். (படங்கள்) பாதிக்கப்பட்ட மக்களுக்காக கை கோர்த்த பேஸ்புக் நண்பர்கள். களத்தில் இறங்கி உதவிகளை வழங்கினர். (படங்கள்) Reviewed by Madawala News on 6/04/2017 09:37:00 AM Rating: 5