Kidny

Kidny

முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெறும் இனவாத செயற்பாடுகளுக்கும் எனக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை.


அண்மைக்காலமாக முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் இனவாத செயற்பாடுகளுடன் தனக்கு எந்தவொரு தொடர்பும் இல்லையென்று கோட்டாபய ராஜபக்ச மறுத்துள்ளார்.

இது தொடர்பாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றையும் இட்டுள்ளார்.

குறித்த பதிவில் அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளதாவது, அண்மைக்காலமாக முஸ்லிம் மக்களுக்கு எதிரான இனவாத செயற்பாடுகளின் பின்னணியில் எனது தொடர்பு இருப்பதாக வதந்திகள் பரவிக் கொண்டிருக்கின்றன.

இவ்வாறான இனவாத செயற்பாடுகளின் பின்னணியிலோ அல்லது பொதுபல சேனாவுடனோ எனக்கு எந்தவொரு தொடர்பும் இல்லை என்பதை மீண்டும் வலியுறுத்திக் கூறிக் கொள்கின்றேன்.

நாங்கள் அனைவரும் ஒரே நாடு என்ற ரீதியில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் கோட்டாபய ராஜபக்ச தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெறும் இனவாத செயற்பாடுகளுக்கும் எனக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை. முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெறும் இனவாத செயற்பாடுகளுக்கும் எனக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை. Reviewed by Madawala News on 6/09/2017 03:00:00 PM Rating: 5